Published:Updated:

இரும்பு ஆணிகள், துருப்பிடித்த செயின்கள்! - 35 வயது மனிதருக்கு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி

இரா.செந்தில் குமார்
இரும்பு ஆணிகள், துருப்பிடித்த செயின்கள்! - 35 வயது மனிதருக்கு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி
இரும்பு ஆணிகள், துருப்பிடித்த செயின்கள்! - 35 வயது மனிதருக்கு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி

கடந்த மாதம்தான், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போலோ சங்கர் (42) என்ற தோட்டத் தொழிலாளியின் வயிற்றிலிருந்து 116 ஆணிகள், நீளமான வயர், இரும்புக் குண்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன.  ஒருவரின் வயிற்றுக்குள் இவ்வளவு பொருள்களா என அதிர்ச்சியடைந்த நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ள மற்றுமொரு சம்பவம்.

இரும்பு ஆணிகள், துருப்பிடித்த செயின்கள்! - 35 வயது மனிதருக்கு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது மனிதரின் வயிற்றிலிருந்து, இரும்பு ஆணிகள், சாவிகள், நாணயங்கள், துருப்பிடித்த செயின்கள் என எண்பதுக்கும் மேற்பட்ட பொருள்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் நடந்த இந்த அறுவை சிகிச்சையை நான்கு மருத்துவர்கள் இணைந்து ஒன்றரை மணி நேரம் நடத்தியிருக்கின்றனர். 

இரும்பு ஆணிகள், துருப்பிடித்த செயின்கள்! - 35 வயது மனிதருக்கு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி

இந்தச் சம்பவம் குறித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களில் ஒருவரான டி.கே. ஷர்மா பேசுகையில், ``கடுமையான வயிற்றுவலியின் காரணமாக அவர் மருத்துவமனைக்கு வந்தார். அடிப்படை சிகிச்சைகள் அளித்தும் அவருக்கு வயிற்றுவலி சரியாகவில்லை. எக்ஸ்-ரே செய்து பார்த்ததில் அவரின் வயிற்றுக்குள் சிறிய மற்றும் பெரிய அளவிலான உலோகங்களும் நகங்களும் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டு, வெற்றிகரமாகச் செய்து முடித்தோம். மொத்தம் 800 கிராம் அளவிலான பொருள்களை வெளியே எடுத்திருக்கிறோம். தற்போது அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார். அவருக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறோம்'' என்றார். 

Vikatan