Published:Updated:

கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

ஆடை என்பது ஒருவரின் அங்கங்களை மறைப்பதற்கான `சாதாரண உபகரணம்’ மட்டுமல்ல, நோய்களைத் தடுக்க உதவும் மருத்துவ உபகரணமும்கூட. ஒருவர் வாழும் சூழல், தகவமைப்புக்கேற்ப ஆடைகள் அணிவதன்மூலம் நோய்கள் வரவிடாமல் முட்டுக்கட்டை போடலாம்.

கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?
கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?

`ஆடைகளை வைத்து மனிதர்களை எடை போடலாம்' என்பது பழங் கணக்கு. அணியும் ஆடைகளை வைத்தே ஒரு மனிதனுக்கு வர வாய்ப்பிருக்கும் நோய்களைக் கணிக்கலாம் என்பது புதுக்கணக்கு. இன்று நாகரிக வளர்ச்சி நம் ஆடைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இறுக்கமான ஜீன்ஸ், சட்டை, கோட், அணிவது வழக்கமாகிவிட்டது. பொதுவாக இப்படிப்பட்ட ஆடைகள் குளிர்பிரதேசங்களில் அணிய உகந்த இந்த ஆடைகளை வெப்பமான நம் நிலப்பகுதியில் அணிவதன் மூலம் உருவாகும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகிறது. இன்று நோய்கள் பல்கிப்பெருகியிருப்பதற்கு ஆடைகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதால், அதன்மீது ஒரு கண் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?

ஆடை என்பது ஒருவரின் அங்கங்களை மறைப்பதற்கான `சாதாரண உபகரணம்’ மட்டுமல்ல, நோய்களைத் தடுக்க உதவும் மருத்துவ உபகரணமும்கூட. ஒருவர் வாழும் சூழல், தகவமைப்புக்கேற்ப ஆடைகள் அணிவதன்மூலம் நோய்கள் வரவிடாமல் முட்டுக்கட்டை போடலாம். ஆடையின் தன்மை மற்றும் நிறங்களுக்கென தனித்தனி மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்.

நம் சீதோஷ்ண நிலைக்குப் பருத்தி ஆடைகளே ஏற்றது. நம் முன்னோர் அதையே உடுத்தினர். பருத்தி ஆடைகள் உடல் வியர்வையை உறிஞ்சிக்கொள்ளும். வெயில் தாக்கும்போது ஈரத்தை வெளியேற்றிவிடும். இதனால் உடலுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது. ஆனால், ஜீன்ஸ், கோட் முதலிய ஆடைகளை அணிவதுதான் நாகரிகம் என்று நினைப்பது, `புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளும் கதைதான்…’ 

கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?

நமது சீதோஷ்ணம், சுற்றுச்சூழலுக்கேற்ப அற்புதமான ஆடை ரகங்கள் நம்மிடையே இருக்கும்போது, ஒவ்வாத ஆடை ரகங்களை நாடிச் செல்வது உடலுக்குப் பெரும் பாதிப்புகளை உண்டாக்கலாம். வெப்பமண்டலத்தில் வாழ்பவர்கள் இறுக்கமான ஆடைகளை நீண்டநேரம் அணிவதால், வியர்வையில் உறிஞ்சப்படாமல் நீண்ட நேரம் வியர்வை உடலில் தங்கும். அதனால், உடலில் கிருமிகளின் தாக்கம் அதிகரித்து, சரும நோய்கள் பெருக வாய்ப்பு உள்ளது. மேலும், உடலில் வியர்வையின் நாற்றம் அதிகரித்து படிப்படியாக வேறு சில பிரச்னைகளும் உண்டாகும். 

நமது கலாசாரம் இயற்கையுடன் இணைந்தது. `ஆள் பாதி ஆடை பாதி’ என்பது, அழகைக் குறிப்பது மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கான திறவுகோலை உணர்த்துவதும்கூட. `கந்தலானாலும் கசக்கிக் கட்டு' என்பது நமது பாரம்பர்யம். ஆனால் இன்று ஜீன்ஸ் வகையறாக்களை வாரக்கணக்கில் துவைக்காமல், கந்தல் கந்தலாக மாறி நாற்றம் எடுத்தாலும்கூட பெர்ஃபியூம்களைப் போட்டுக்கொண்டு செல்லும் நவநாகரிக மக்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. 

கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?

காற்றுகூட நுழைய முடியாத இறுக்கமான ஆடைக்குள் நீண்டநேரம் இருப்பது, சரும நோய்களுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பதற்கு நிகரானது. இவற்றால் சருமத்தில் சிவந்த நிறக் கொப்புளங்கள், அரிப்பு, எரிச்சல் என அறிகுறிகள் தோன்றக்கூடும்.
அடிவயிறு மற்றும் கால் பகுதிகளில் அழுத்திப் பிசையும் இறுக்கமான ஆடைகளை நீண்ட நாள்கள் தொடர்ந்து அணியக் கூடாது. அப்படி அணிந்தால் செரிமானமின்மை, உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, தொடைப்பகுதி மரத்துப் போவது, பின்னங்காலில் வலி எடுப்பது போன்ற பிரச்னைகள் உருவெடுக்கும். இயற்கை சுழற்சி இன்று மாறிவிட்டது. ஜூன் மாதத்தின் பிற்பகுதியிலும்கூட அனல் காற்று வீசுகிறது. அந்த அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. இப்படி வெப்பம் தகிக்கும் தேகத்தில் இறுக்கமாகக் கவ்வும் ஜீன்ஸ் ஆடைகளை அணிந்தால் என்னாகும்? 

தலை முதல் கால் வரை உடலை முழுவதும் மறைத்துக்கொள்ளும்விதமாக ஆடை அணிந்தால், வெயிலின்மூலம் நமக்குக் கிடைக்கும் வைட்டமின் – டி குறைவாகவே கிடைக்கும். இதனால், அக்குள், தொடை இடுக்குகள் போன்ற பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படுவதுடன், கருமை நிறத்தில் படைகளும், கடுமையான அரிப்பும் உண்டாகலாம். 

கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?

இன்றைய சூழலில் இறுக்கமான ஆடைகளால் குழந்தைகள் மற்றும் முதியோருக்கு நீர்ச்சத்துக் குறைபாடு உண்டாகி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இறுக்கமான ஆடைகள் உடுத்துவதால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், சினைப்பை நீர்க்கட்டிகள் ஆகியன அதிகரிக்கலாம். 

கோடைக்காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது... என்னென்ன உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?

குளிர்காலத்தில் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதில் தவறேதுமில்லை. ஆனால், நாள் முழுக்க அந்த உடையையே உடுத்தினால் பிரச்னைதான். நமது சூழலுக்கேற்ப காற்று உட்புகும்விதமான பருத்தியினாலான கதர் ஆடைகள்தான் பொருத்தமாக இருக்கும். ஆடை விஷயத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் ஆடைப் பராமரிப்பிலும் கவனம் செலுத்தவேண்டும். ஆடைகளைத் துவைத்தவுடன் வெயிலில் காயவைத்து அணிவது சிறந்தது. எனவே, மூன்று மாதத்துக்கு ஒருமுறை உள்ளாடைகளை மாற்ற வேண்டியது அவசியம்.

இப்போது வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு ‘நிற மருத்துவம்’ (Colour Therapy) பிரபலமாகி வருவது அனைவரும் அறிந்ததே. இயற்கைக் காற்று உடல் பகுதிகளில் தவழ்ந்து செல்வதென்பது, புத்துணர்ச்சியைச் செலவு இல்லாமல் வழங்கும் அழகிய செயல்பாடு. எனவே, நோய்களை உண்டாக்காத ஆடைகளை அணிவோம். சூழல்… வயது… உடல் அமைப்புக்கேற்ற ஆடைகளை அணியத் தொடங்கினால், ஆடைகளால் உண்டாகும் நோய்களைத் தடுக்கலாம்.

Vikatan