Published:Updated:

ஆண்களைவிட பெண்களே விரைவில் முதிர்ச்சி அடைகிறார்கள்! - ஆய்வில் தகவல் #LifeStartsAt40

ஜெ.நிவேதா
ஆண்களைவிட பெண்களே விரைவில் முதிர்ச்சி அடைகிறார்கள்! - ஆய்வில் தகவல் #LifeStartsAt40
ஆண்களைவிட பெண்களே விரைவில் முதிர்ச்சி அடைகிறார்கள்! - ஆய்வில் தகவல் #LifeStartsAt40

'ஆண்களைவிட பெண்களுக்கு, மிக வேகமாக வயது முதிர்ந்த தோற்றம் ஏற்பட்டுவிடுகிறது' என்கின்றனர் ஆய்வாளர்கள்!

ஜெர்மனியைச் சேர்ந்த வியேனா பல்கலைக்கழகத்தின் சார்பில், ஒருவருக்கு எந்த வயதில் முதிய தோற்றம் ஏற்படத் தொடங்குகிறது என்பது குறித்த ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 20 முதல் 90 வயதுக்குட்பட்ட 88 ஆண்கள் மற்றும் பெண்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் முடிவில், ஆண்களைவிடவும் பெண்களுக்குத்தான் விரைவாக முதிய தோற்றம் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. 

ஆண்களைவிட பெண்களே விரைவில் முதிர்ச்சி அடைகிறார்கள்! - ஆய்வில் தகவல் #LifeStartsAt40

குறிப்பாக, பெண்கள் 50 வயதைக் கடக்கும்போது... அதாவது, சராசரியாக மெனோபாஸ் காலத்தைச் சந்திக்கும் நேரத்தில், அதன் காரணமாக அவர்களுக்கு அதிவேகமாக வயது முதிர்வு ஏற்படுவது தெரியவந்துள்ளது. கண்களைச் சுற்றிலும் சுருக்கம் ஏற்படுவது, மூக்கு மற்றும் காது பகுதி சருமங்கள் நீள்வது போன்ற முதிய தோற்றத்துக்கான அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுவது தெரியவந்துள்ளது. உடலில் கொழுப்புச்சத்து குறைந்துகொண்டேபோவதால், பெண்களுக்கு விரைவாக உடல் எடை குறைந்து, தோல் ஒட்டிவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

மெனோபாஸ் தொடங்கி முதல் ஐந்து வருடங்களில், சருமத்திலுள்ள 30 சதவிகித கொலேஜென், குறைந்துவிடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணமாக அவர்கள் குறிப்பிடுவது, மெனோபாஸுக்குப் பிறகு பெண்களின் உடலில் பாலியல் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் (oestrogen) குறைவாகச் சுரப்பதைத்தான். இரு பாலினருக்குமே, சமவிகிதத்தில்தான் முதிய தோற்றம் ஏற்படுகிறது என்றாலும், 50 வயதைக் கடந்த பிறகு, பெண்களுக்கு அதிவேகமாக முதிய தோற்றம் தொடங்கிவிடுகின்றதாம். 

ஆண்களைவிட பெண்களே விரைவில் முதிர்ச்சி அடைகிறார்கள்! - ஆய்வில் தகவல் #LifeStartsAt40

பெண்களே... உங்களுக்கு முதிய தோற்றம் ஏற்படுவது ஒரு வகை உடலியல் மாற்றம்தான். அதற்காக வருத்தமோ தாழ்வு மனப்பான்மையோ தேவையற்றது. முதிர்ச்சியும் அழகின் ஒரு அங்கம்தான். எனவே, அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, எப்போதும் போல முன்னோக்கிச் சென்றுகொண்டே இருங்கள் பெண்களே!

Vikatan