Published:Updated:

`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா?' மருத்துவர் விளக்கம் #Encephalitis

ஆ.சாந்தி கணேஷ்

"மூளையை மூன்று லேயர்கள் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன. இந்த லேயர்களைப் பாதிக்கிற இன்ஃபெக்‌ஷனை நாங்கள் encephalitis என்போம். மூளையையும் சேர்த்து பாதித்துவிட்டால் அதை நாங்கள் meningitis என்போம். தமிழில் இதை ஒரே வார்த்தையில் மூளைக் காய்ச்சல் என்று சொல்கிறோம்."

`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா?' மருத்துவர் விளக்கம் #Encephalitis
`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா?' மருத்துவர் விளக்கம் #Encephalitis

டந்த சில தினங்களாக, பீகாரில், மூளைக் காய்ச்சல் காரணமாக சிறு குழந்தைகள் மடிந்துகொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக, பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மொட்டுகள் கருகி விழுவதுபோல இறந்தும்விட்டார்கள். இதையடுத்து செய்யப்பட்ட ஆய்வில்தான் இறந்த குழந்தைகள் அனைவரும் மூளைக் காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. தவிர, முசாஃபர்பூரில் மட்டுமல்லாமல், பீகாரிலுள்ள பல மாவட்டங்களில் உள்ள குழந்தைகளின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகக் குறைவாக இருப்பதும், அதுதான் மூளைக் காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் மரணத்துக்கும் காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நேரத்தில், முசாஃபர்பூரில் இந்த சீஸனில் அதிகமாக விளைகிற லிச்சிப் பழங்கள்கூட, குழந்தைகளின் மூளைக் காய்ச்சலுக்குக் காரணமாக இருக்கலாம் என சில ஆய்வுகள் சந்தேகப்படுகின்றன. இந்த ஆய்வுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ''கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலும் அனலும் பீகாரில் காணப்படுகிறது. இந்த சீஸனில் உயிர்க்கொல்லி வியாதிகள் பரவுவது வழக்கம்தான்'' என்று சில மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா?' மருத்துவர் விளக்கம் #Encephalitis

இந்த நேரத்தில், குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் எதனால் வருகிறது; வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், வந்துவிட்டால் மரணம் நிச்சயமா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதால், குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலுவை உடனே தொடர்பு கொண்டோம். 

`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா?' மருத்துவர் விளக்கம் #Encephalitis

''மூளைக் காய்ச்சல் என்பது பொதுவான வார்த்தை. இதை நாங்கள் acute encephalitis syndrome என்று சொல்வோம். மற்றபடி இதில் நிறைய வகை மூளைக் காய்ச்சல் இருக்கிறது. உதாரணத்துக்கு, நிமோகாக்கல் என்கிற பாக்டீரியாகூட இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும். இதற்குத் தடுப்பூசி வந்துவிட்டது. அடுத்தது, பன்றிக் காய்ச்சல். இதுவும் மூளையைப் பாதிக்கும். ஜப்பானீஸ் பி என்கிற வைரஸூம் மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தலாம். இப்படி இந்தப் பிரச்னை வருவதற்குப் பெயர் தெரியாத பலப்பல வைரஸ் காரணமாக இருப்பதால், குறிப்பிட்டு ஒரு வைரஸை சொல்ல முடியாது. அதனால், இந்த மூளைக் காய்ச்சல் நம் ஊரிலும் வருமா என்றால், தாராளமாக வரலாம்'' என்றவர் தொடர்ந்தார். 

''மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டுமென்றால், வீட்டையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருங்கள். முக்கியமான கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுங்கள். கோடைக்காலத்தில் வந்திருப்பதால், நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க நீராகாரங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைக் குழந்தைகளுக்கு அதிகம் கொடுங்கள். இந்தப் பிரச்னை சத்துக்குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடு உள்ள குழந்தைகளைத்தான் தாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

குழந்தைகளுக்குச் சளி, இருமல் காரணமாக வருகிற காய்ச்சலையெல்லாம் மூளைக் காய்ச்சல் என்று நினைத்துப் பயந்து விடாதீர்கள். ஆனால், காய்ச்சல், தலைவலி என்று தொடர்ந்து இருந்தால் உடனே மருத்துவரிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.

`எந்தக் குழந்தைகளை மூளைக் காய்ச்சல் டார்க்கெட் செய்யும் தெரியுமா?' மருத்துவர் விளக்கம் #Encephalitis

மூளையை மூன்று லேயர்கள் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன. இந்த லேயர்களைப் பாதிக்கிற இன்ஃபெக்‌ஷனை நாங்கள் encephalitis என்போம். மூளையையும் சேர்த்து பாதித்துவிட்டால் அதை நாங்கள் meningitis என்போம். தமிழில் இதை ஒரே வார்த்தையில் மூளைக் காய்ச்சல் என்று சொல்கிறோம். மூளைக் காய்ச்சல் குணமாவது என்பது, எந்த வைரஸினால் அந்தக் காய்ச்சல் வந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. விரைவில் சரியாகிவிடக்கூடிய வைரஸ்கள்தான் தாக்கியிருக்கின்றன என்றால், 5 முதல் 7 நாளில் பாதிக்கப்பட்ட குழந்தை சரியாகிவிடும். தாக்கியது ஆபத்தான வைரஸ் என்றால், காய்ச்சல் விடாது, பிரச்னையும் அதிகமாகும். 

குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியைப் பலமாக வைத்திருந்தால், எந்தப் பிரச்னையும் வராது. நோய் வந்த பிறகு, பதற்றப்படுவதில் அர்த்தம் கிடையாது. பீகாரைப் பொறுத்தவரை, அங்கே ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகள் அதிகம். அதுதான் இத்தனை குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டது'' என்றார் டாக்டர் தனசேகர் கேசவலு.

Vikatan