Published:Updated:

லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?

ஜெனி ஃப்ரீடா

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் லிச்சிப்பழங்கள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. அங்குள்ள தோட்டங்களில் கீழே விழுந்த பழங்களை எடுத்துச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?
லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?

லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டதால் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது பீகாரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. பீகாரில் மொத்தமுள்ள 40 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் (Acute Encephalitis Syndrome -AES) பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜூன் 1-ம் தேதி முதல் இதுவரை 140 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?

லிச்சி பழம், சீனா, தாய்வான், வங்கதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. லிச்சி மரங்கள் வெப்ப மண்டல நாடுகளில் செழித்து வளரும். சுவையான வெண்மைநிற சதைப்பகுதியையும், பூ போன்ற நறுமணத்தையும் கொண்ட இந்தப் பழத்தை உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை பீகார் மாநிலத்தில் லிச்சிப்பழங்கள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. அங்குள்ள தோட்டங்களில் கீழே விழுந்த பழங்களை எடுத்துச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?

லிச்சி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சரும ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

பீகாரில் முசாஃபர்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் லிச்சி தோட்டங்கள் இருக்கின்றன. மே மாதம் முதல் இந்தப் பழம் அறுவடை செய்யப்பட்டுவருகிறது. அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது வழக்கம். குழந்தைகள் மரங்களிலிருந்து விழும் லிச்சிப் பழங்களை எடுத்துச் சாப்பிடுவார்கள். இந்தப் பழங்களை வயிறு நிறைய சாப்பிடும் குழந்தைகள், இரவில் சாப்பிடாமலேயே தூங்கிவிடுவார்கள். இதுதான் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?

லிச்சி பழம் சாப்பிடுவதால் இதுபோன்று உயிரிழப்பு ஏற்படுமா? என்று பொதுநல மருத்துவர் டாக்டர் சிவராம கண்ணனிடம் கேட்டோம்.

``லிச்சியைப் பழமாகச் சாப்பிட்டால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. சரியாகப் பழுக்காமல், காயாகச் சாப்பிட்டதால் அதிலுள்ள

லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?

`மெத்தலின் சைக்ளோபுரோபைல் கிளைசின்' (Methylene cyclopropyl glycine - MCPG) என்ற நச்சுப்பொருளும் குழந்தைகளின் உடலுக்குள் சென்றிருக்கிறது. மேலும், அந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் இருந்திருக்கின்றனர். 

பொதுவாக, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்போது அதை ஈடுகட்டக் கல்லீரல் சர்க்கரையை உற்பத்தி செய்யும். ஆரோக்கியமாக ஊட்டச்சத்துடன் இருக்கும் குழந்தைகளுக்கு இப்படித்தான் நடக்கும். ஆனால் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் குழந்தைகள் லிச்சிப் பழங்களை மட்டுமே சாப்பிட்டுவிட்டு இரவு உறங்கச் சென்றதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்திருக்கிறது. அதேநேரம் லிச்சிப் பழத்தில் இருந்த நச்சுப்பொருளானது, கல்லீரல், சர்க்கரை உற்பத்தி செய்வதை தடை செய்திருக்கிறது. இதனால் ரத்தத்தில் போதிய அளவு சர்க்கரை இல்லாமல் மயக்கமடைந்திருக்கின்றனர். நீண்டநேரம் இது தொடர்ந்ததால் அவர்கள் சுயநினைவை இழந்து உயிரிழப்பு வரை சென்றிருக்கிறது. ஆனால், ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இந்த நச்சுப்பொருள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. 

லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும் தற்போது லிச்சிப் பழ சீசன் என்பதால் அதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அப்படியே சாப்பிட்டாலும் நன்றாகப் பழுத்த பழங்களைச் சாப்பிடலாம்." என்றார் அவர்.
பீகார் மாநிலத்தில் லிச்சிப் பழங்களால் ஏற்படும் மூளைக் காய்ச்சல் சம்பவங்கள் புதிதல்ல. 2013-ல் 143 பேர், 2014-ல் 355 உயிரிழந்திருக்கின்றனர். 2017-ல் 11, 2018-ல் 7 என்று குறைந்திருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்துள்ளது. 

லிச்சிப் பழம் குழந்தைகளின் உயிரைப் பறிக்குமா... என்ன நடக்கிறது பீகாரில்?

லிச்சிப் பழங்கள் மூலம் ஏற்படும் மூளைக் காய்ச்சல் குறித்த ஆய்வு லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தப் பழங்களை உண்பதற்கும், குழந்தைகள் இறப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரவு உணவைச் சாப்பிடாமல் லிச்சிப் பழங்களை குழந்தைகள் உண்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan