Published:Updated:

அலோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து உட்கொள்ளலாமா? மருத்துவர் சொல்வது என்ன? #Video

கிராபியென் ப்ளாக்

வயதானவர்கள் கடற்கரைப் பக்கம் நடைப்பயிற்சி செல்லும்போது, அங்கே விற்கப்படும் அறுகம்புல் ஜூஸை வாங்கிக் குடிப்பார்கள். அறுகம்புல்லுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் குணம் உண்டு. ஏற்கெனவே அவர்கள் இதய நோய்க்காகச் சாப்பிடும் அலோபதி மருந்துடன் அறுகம்புல் சேரும்போது வேதியியல் மாற்றமடைந்து அவர்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

அலோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து உட்கொள்ளலாமா? மருத்துவர் சொல்வது என்ன? #Video
அலோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து உட்கொள்ளலாமா? மருத்துவர் சொல்வது என்ன? #Video

`ஆயுர்வேதம்... ஆயுள் வளர்க்கும், ஆயுள் காக்கும்', `ஆயுர்வேதம்... அருமையான மருத்துவம்’ என்று தொடர்ச்சியாக சோஷியல் மீடியாக்களில் பரப்பப்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றி அறியவும், அதில் சிகிச்சை எடுக்கவும் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். அதே நேரத்தில் ஆயுர்வேதம் குறித்த பல தவறான புரிதலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, `ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படாது; ஆயுர்வேத மருந்துகளில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன, ஆயுர்வேத மருந்து சாப்பிட்டால் உடல் சூடாகும்' என்பதுபோன்ற பட்டியல் நீள்கிறது.

அலோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து உட்கொள்ளலாமா? மருத்துவர் சொல்வது என்ன? #Video

இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பாலிடம் கேட்டோம். விளக்கமாகப் பேசினார். 

``ஆங்கில மருத்துவத்தில் `ஆன்டிபயாடிக்' மருந்து எடுத்துக்கொண்டால் அது அசிடிட்டியை ஏற்படுத்தலாம். எனவே, `ஆன்டிபயாடிக்'

அலோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து உட்கொள்ளலாமா? மருத்துவர் சொல்வது என்ன? #Video

மருந்து கொடுக்கும்போதே இரைப்பையில் அழற்சி மற்றும் புண் ஏற்படாமலிருக்க`பேன்டபிரசோல்' (Pantaprazole) மாத்திரையும் சேர்த்துக் கொடுப்பார்கள். ஆனால், ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொண்டால், அது இன்னொரு பிரச்னையை ஏற்படுத்தாது. பொதுவாகவே `ஹெர்பல் ஆர்ஜின்' (Herbal Origin) என்பதால் அதில் பக்கவிளைவுகள் இருக்காது. ஆனால், சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதாவது, ஆயுர்வேத மருந்தை அவரவர் உடல்நிலை அறிந்து கொடுக்காமல்விட்டாலோ, டோஸ் அதிகமாகக் கொடுத்தாலோ பின்விளைவு ஏற்படலாம். ஆங்கில மருந்துகளுடன் சேர்த்துச் சாப்பிட்டாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

கை ரேகைகள் வேறுபடுவதுபோல ஒவ்வொருவரது உடலின் தன்மையும் வேறுபடும். பித்தம் மற்றும் கப உடல்வாகு இருப்பவர்களுக்கு அரிப்பு வரலாம். அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான மருந்துகளைக் கொடுத்தால் அது பயன் தராது. அத்தகைய சூழலில் பித்த உடல்வாகு இருப்பவர்களுக்குப் பித்தத்தைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுத்தால் மட்டுமே, அவர்களுக்கு அரிப்பு குறையும். மாற்றிக் கொடுத்தால் பிரச்னை குறையாததுடன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஆயுர்வேத மருந்தாக இருந்தாலும் அதைச் சரியான முறையில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அலோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து உட்கொள்ளலாமா? மருத்துவர் சொல்வது என்ன? #Video

ஆயுர்வேத மருத்துவத்தில் வலி நிவாரணி மாத்திரைகள் கிடையாது. அதற்குப் பதிலாக தசைகளைத் தளர்வாக்க (Muscles relaxant) `குக்குலு'  (Guggulu) மாத்திரைகள் கொடுக்கப்படும். ஆனால், அந்த மாத்திரைகள் கொடுக்கும்போது டோசேஜ் அதிகமாக இருந்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். மூட்டு வலிக்குக் கொடுக்கப்படும் ராஸ்னா ஏரண்ட கஷாயத்தில் ஆமணக்கு சேர்ந்திருப்பதால் அதை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது பேதி உண்டாகும். டோசேஜ் சரியாகக் கொடுக்காததே இதற்குக் காரணம். நோய் குணமாக வேண்டும் என்பதற்காக மருந்துகள் சாப்பிடும்போது சில நேரங்களில் மருந்துகள் ஒவ்வாமையால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இது பலருக்குத் தெரிவதில்லை. 

அலோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து உட்கொள்ளலாமா? மருத்துவர் சொல்வது என்ன? #Video

பொதுவாக, ஐம்பது வயதைக் கடந்தாலே உடல் சார்ந்த பிரச்னைகள் வரத் தொடங்கிவிடும். குறிப்பாக இதயம் சார்ந்த பிரச்னைகளால் பலர் அவதிப்படுவார்கள். அவர்கள் ஏதாவது ஓர் அலோபதி மருந்தை எடுத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும் மருந்துகளைச் சாப்பிடும்போது அதற்கெதிரான மருந்துகளைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அலோபதி மருந்துடன் ஆயுர்வேத மருந்து உட்கொள்ளலாமா? மருத்துவர் சொல்வது என்ன? #Video

வயதானவர்கள் கடற்கரைப் பக்கம் நடைப்பயிற்சி செல்லும்போது, அங்கே விற்கப்படும் அறுகம்புல் ஜூஸை வாங்கிக் குடிப்பார்கள். அறுகம்புல்லுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் குணம் உண்டு. ஏற்கெனவே அவர்கள் இதய நோய்க்காகச் சாப்பிடும் அலோபதி மருந்துடன் அறுகம்புல் சேரும்போது வேதியியல் மாற்றமடைந்து அவர்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, மாத்திரை மருந்து சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

ரத்தம் உறைவதைத் தடுக்கக்கூடியது இஞ்சி என்பதால் இஞ்சி டீ, இஞ்சி துவையல் சாப்பிடுவார்கள். ஆனால், அவர்கள் இதய நோய்க்காக எடுத்துக்கொள்ளும் அலோபதி மருந்துகளுடன் சேரும்போது பிரச்னையை உண்டாக்கலாம். பக்கவிளைவுகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்துகளை உட்கொள்ளவேண்டியது அவசியம்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால்.

Vikatan