Published:Updated:

`ஒரு வாரத்தில் 480 யூனிட் ரத்தம்!' - நெகிழவைத்த நாம் தமிழர் கட்சியினர்

லட்சுமணன்.ஜி
`ஒரு வாரத்தில் 480 யூனிட் ரத்தம்!' - நெகிழவைத்த நாம் தமிழர் கட்சியினர்
`ஒரு வாரத்தில் 480 யூனிட் ரத்தம்!' - நெகிழவைத்த நாம் தமிழர் கட்சியினர்

ரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ரத்தப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் ரத்தத்தை நாம் தமிழர் கட்சியினர் தானமாக வழங்கியுள்ளனர். 

`ஒரு வாரத்தில் 480 யூனிட் ரத்தம்!' - நெகிழவைத்த நாம் தமிழர் கட்சியினர்

ரத்த தானம் வழங்குவதற்காகவே நாம் தமிழர் கட்சியின் சார்பில் `குருதிக் கொடை பாசறை' என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ரத்ததானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் 346 யூனிட்  ரத்தத்தை  நாம் தமிழர் கட்சியினர் தானமாக வழங்கினர். இதேபோல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையிலும் ரத்த தானம் செய்தனர்.  

வேளச்சேரியில் ஏரி தூர்வாரும் பணியின்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் ரத்ததான முகாமிலும் பலர் ஆர்வமாகப் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். இதுவரை மொத்தம் 480 யூனிட்டுகளுக்கும் மேலாக ரத்ததானம் செய்துள்ளனர். இதற்கான சான்றிதழை நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ப.செ.நாதனிடம் அரசு மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

`ஒரு வாரத்தில் 480 யூனிட் ரத்தம்!' - நெகிழவைத்த நாம் தமிழர் கட்சியினர்

இதுபற்றி மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ப.செ.நாதன் கூறும்போது, "எங்கள் கட்சியில் ரத்ததானத்துக்கென, 'குருதிக் கொடை பாசறை' என்று ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ரத்ததானம் செய்துவருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகத்  தகவல் வந்தது. இதையடுத்து ரத்ததானம் செய்யுமாறு கட்சி உறுப்பினர்களுக்குக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுறுத்தலின் பேரில் அறிக்கை வெளியிட்டோம். 

`ஒரு வாரத்தில் 480 யூனிட் ரத்தம்!' - நெகிழவைத்த நாம் தமிழர் கட்சியினர்

கடந்த  6-ம் தேதி முதல் எங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து தானம் அளித்தார்கள். அதன்படி 400-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் குருதிக்கொடை பாசறை மூலம் ரத்ததானம் வழங்கியிருக்கிறார்கள். ரத்தம் கொடுப்பவர்களுக்கு அரசு சான்றிதழ் மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மூலம் `உயிர்நேய மாண்பாளர்' சான்றிதழ்களும் வழங்குகிறோம்"  என்றார்.