Published:Updated:

மகனின் உயிரை மீட்க நிலத்தை விற்ற விவசாயி! #SaveRamHridaySingh

Sponsored content
மகனின் உயிரை மீட்க நிலத்தை விற்ற விவசாயி! #SaveRamHridaySingh
மகனின் உயிரை மீட்க நிலத்தை விற்ற விவசாயி! #SaveRamHridaySingh

உத்தர பிரதேசத்த்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ராம் ஹ்ரிதய் சிங், 12ம் வகுப்பு பயின்று வருகிறார். விவசாயி மகனான ராம், படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். மிகப்பெரிய கனவுகளை எல்லாம் மனதில் சுமந்துகொண்டு படிப்பில் கவனம் செலுத்திவரும் ராம், கடந்த பிப்ரவரி மாதம் எழுத இருந்த தனது கடைசி பள்ளித் தேர்வினை எழுத முடியாமல்போனது. தேர்வுக்கு முந்தைய இரவு முழுவதும் படித்தது அனைத்தும் வீணாகிப்போனதை எண்ணி பல நாட்கள் ராம் உடைந்து அழுதிருக்கிறார்.

மகனின் உயிரை மீட்க நிலத்தை விற்ற விவசாயி! #SaveRamHridaySingh

ராமிற்கு என்ன ஆனது?

அன்றிரவு ராம் வயிற்று வலியால் துடித்துக் கதறியபடி தரையில் உருண்டுகிடந்ததைப் பார்த்து, பதறி ஓடிவந்த அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் ராமைக் குணப்படுத்தவில்லை. அதனால் உள்ளூர் மருத்துவர், டெல்லிக்கு ராமை அழைத்துச் செல்லப் பரிந்துரைத்தார். அதன்படி உடனே டெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, பரிசோதனைகள் விரைந்து அளிக்கப்பட்டன.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் துடித்துப்போகும் மகனைக் கண்டு வருந்திய அவரது பெற்றோருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தனர் மருத்துவர்கள். பரிசோதனையில் ராமின் கல்லீரல் செயலிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனுடன் மஞ்சள் காமாலை மற்றும் வயிற்றில் நீர் கோர்ப்புடனும் ராம் அவதிப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக ராமிற்கு வயிற்று வலி பிரச்னை இருந்திருக்கிறது. ஆனால் குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக தனது வலியைப் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறார். 

விவசாயியான தனது தந்தை மணிக்கணக்கில் நிலத்தில் நின்று வேலை செய்தாலும், நாள் ஒன்றுக்கு ரூ.500 மட்டுமே கிடைக்கும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை பார்த்துக்கொள்ள பல நாட்கள் உணவுகூட உண்ணாமல் சோர்ந்து வரும் தந்தையைப் பார்த்து, நல்ல வேலைக்குப்போக வேண்டுமென்கிற லட்சியத்தோடு இருந்ததால், பெற்றோரிடம் இருந்து தனது வலியை மறைத்திருந்திருக்கிறார் ராம். இப்போது அதுவே அவரது உயிருக்கு ஆபத்தாக வந்து நிற்கிறது. 

நோயின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் ராமுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இல்லையெனில் அவரது உயிரைக் காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிகிச்சைக்கு ரூ.21.15 லட்சம் தேவையாக இருக்கிறது. ஏற்கனவே தனது நிலத்தின் சிறு பகுதியை விற்றுதான் ராமை டெல்லிக்கு அழைத்துச்சென்றார் அவரின் தந்தை. அறுவை சிகிச்சைக்காக மீண்டும் ஊருக்குச் சென்ற ராமின் தந்தை பேச்சான் ஹ்ரிதய் சிங், மீதம் இருந்த நிலத்தையும் விற்றுவிட்டார். 

மகனின் உயிரை மீட்க நிலத்தை விற்ற விவசாயி! #SaveRamHridaySingh

ஒரு மாதம் கழித்து மருத்துவமனைக்கு வந்த அவர், தனது மகன் படுக்கையில் அசைய முடியாத நிலையில் படுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து மனம் உடைந்துபோனார். வீங்கிய வயிறு ராமை உட்காரவிடாமல் தடுத்தது. சிறு வேலைகளைக்கூட தன்னால் செய்ய முடியாத நிலைக்கு ராம் தள்ளப்பட்டார். வலியால் எதிரில் இருப்பவர் யார் என்றும் அவரால் அடையாளம் காணமுடியவில்லை. மாதக்கணக்கில் மருத்துவமனையின் இருள் நிறைந்த அறையில் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் ராமின் முகம் தான் வாழ்வோம் என்கிற நம்பிக்கை இல்லாமல் சோர்ந்து காணப்படுகிறது.

ராமிற்கு நம்பிக்கை அளிக்க நிதி திரட்டும் இணையதளமான 'Ketto' முன்வந்துள்ளது. கெட்டோவுடன் சேர்ந்து நம்மால் முடிந்த உதவியையும் செய்தால், ஒரு விவசாயியின் குடும்பத்திற்கு நாம் செய்யும் பேருதவியாக அது அமையும். அண்ணன் எங்கே என்று கேட்கும் இரண்டு குட்டித் தங்கைகளுக்கும், பிள்ளையை உயிராக நினைக்கும் பெற்றோருக்கும் ராமை திருப்பித்தரும் உதவியைச் செய்ய முன்வருவோம், பல உதவிக்கரங்கள் உதவவும் வழிசெய்வோம். ராமிற்கு, https://www.ketto.org/stories/helpramhirday?utm_campaign=helpramhirday&utm_medium=position_1&utm_source=external_vikatan  இந்த லிங்கிற்குச் சென்று உதவலாம்.

மகனின் உயிரை மீட்க நிலத்தை விற்ற விவசாயி! #SaveRamHridaySingh

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.