Published:Updated:

‘எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கிறது!’ -கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது இத்தாலிக்காரர்

கொரோனா
கொரோனா

அமெரிக்காவிலும் இத்தாலியிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் உலகத்தை தன் பிடியில் வைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். முகத்தில் அணியும் மாஸ்க் ஏற்படுத்தும் காயங்களையும் வடுக்களையும் பொருட்படுத்தாமல் மனித குலத்துக்கான மகத்தான பணியை மேற்கொண்டு வருகிறார்கள் சுகாதாரப் பணியாளர்கள். நியூயார்க் நகரில் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை நினைத்து சமூகவலைதளத்தில் செவிலியர் ஒருவர் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அமெரிக்காவிலும், இத்தாலியிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 85, 840 பேருக்கும் இத்தாலியில் 80,539 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 1,296 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியின் நிலைமைதான் சற்று மோசமாக இருக்கிறது. அங்கு இதுவரை 8,165 பேர் உயிரிழந்துள்ளனர்.

’தூக்கத்தை தொலைத்தேன்; அந்த கண்களில் பயத்தைக் கண்டேன்!’-அமெரிக்கா நிலையை விளக்கும் செவிலியரின் பதிவு

வயதானவர்களே இந்த வைரஸ் தாக்கத்தினால் அதிகம் உயிரிழக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. பொதுவாக வயதுமுதிர்வு காரணமாக சில உடல்நலக்குறைவு ஏற்படும் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். இதன்காரணமாகவே வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்நிலையில் இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அந்த நபரின் பெயரை இத்தாலி அரசு வெளியிடவில்லை. இத்தாலி ஊடகங்கள் அவரை ‘Mr.P ‘ என்றே அழைக்கின்றன.

அதிக பாதிப்புக்கு உள்ளான நாடு... சீனாவை விஞ்சிய அமெரிக்கா! -அச்சத்தில் மக்கள் #Corona

இதுகுறித்து பேசியுள்ள ரிமினி நகரத்தின் துணை மேயர் குளோரியா லிசி , “ரிமினி நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அந்த முதியவர் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நேற்று மாலை அவரது உறவினர்கள் வந்து அழைத்துச் சென்றனர். கொரோனாவிலிருந்து அவர் மீண்டது உண்மையில் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 101 ஆண்டுகளில் கூட எதிர்காலம் எழுதப்படவில்லை என்பதை இது நமக்கு கற்பிக்கிறது” என்றார்.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

அந்த முதியவர் குறித்த மேலும் சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இவர் 1919-ம் ஆண்டு பிறந்துள்ளார். கொரோனா இந்த உலகத்தை அச்சுறுத்தி வருவதுபோல் 1918 –ம் ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் அச்சுறுத்திய காலம் அது. இதைப் பெரும்பாலான மக்கள் ஸ்பானிஷ் காய்ச்சல் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த நோய் தொற்றினால் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என வரலாறு கூறுகிறது. இரண்டு கொடிய நோய்களில் இருந்தும் அவர் தப்பித்துள்ளார். இத்தாலியில் கொரோனாவினால் இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகளில் 86 சதவிகிதத்தினர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். வயதானவர்களே அதிகம் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் வெளியான நிலையில் இந்த முதியவர் மீண்டு வந்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு