Published:Updated:

`கழிவறை கட்டியதாகப் பொய்க்கணக்கு!’ - நகராட்சி நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

`கழிவறை கட்டியதாகப் பொய்க்கணக்கு!’ - நகராட்சி நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
`கழிவறை கட்டியதாகப் பொய்க்கணக்கு!’ - நகராட்சி நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி நிர்வாக அலுவலராக பரமேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டுவதில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. அதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் செய்த ஆய்வில் பரமேஸ்வரியும் மேற்படி பேரூராட்சியில் பணியாற்றும் தொழிலாளர்களும் இணைந்து, பல இடங்களில் கழிவறைகள் கட்டாமல் தன்னிச்சையாகப் பணம் எடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானது. இதனால் இன்று பரமேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த முறைகேட்டுக்கு உதவியதாக மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பணிபுரியும் பொறியாளர்கள் உதயகுமார், பிரபு ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் முறைகேடு செய்ததாக பேரூராட்சி நிர்வாக அலுவலர் மற்றும் பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.