Published:Updated:

நிபா: வன அழிப்பின் வினை!

நிபா: வன அழிப்பின் வினை!
பிரீமியம் ஸ்டோரி
நிபா: வன அழிப்பின் வினை!

ஜி.லட்சுமணன், கிராபியென் ப்ளாக்

நிபா: வன அழிப்பின் வினை!

ஜி.லட்சுமணன், கிராபியென் ப்ளாக்

Published:Updated:
நிபா: வன அழிப்பின் வினை!
பிரீமியம் ஸ்டோரி
நிபா: வன அழிப்பின் வினை!

ன்றிக்காய்ச்சல், டெங்கு வரிசையில் தென்னிந்தியாவை மிரட்டிக்கொண்டிருக்கிறது நிபா(Nipah) வைரஸ்.

நிபா அச்சம் தொடங்கியது கேரளாவில் இருந்துதான். கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள பெரும்புராவில் திடீரென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து  இறந்துபோகிறார்கள். அவர்களுக்குப் பிறகு இறந்துபோனவர்களுடைய உறவினர்கள் இருவரும், சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் மரணம் அடைகிறார்கள்.   புனேயில் உள்ள தேசிய வைரலாஜி சோதனைக்கூடம் இந்த மரணங்களுக்கு ‘நிபா வைரஸ்’ தான் காரணம் என்று உறுதி செய்தது. அதன்பிறகே அலர்ட்டானது கேரளா.

நிபா: வன அழிப்பின் வினை!

நிபா வைரஸ், 1998-ம் ஆண்டு, மலேசியத் தீவுகளில் ஒன்றான  `கம்பங் சுங்கை நிபா’  (Kampung Sungai Nipah) என்ற கிராமத்தில்தான் முதன்முதலாக கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு  `நிபா’ எனப் பெயரிட்டனர். விவசாயத்திற்காகக் காடுகளை அழித்தபோது, அங்கிருந்த பழந்தின்னி வௌவால்கள் கிராமத்திற்குள் புகுந்தன. அவை சாப்பிட்டுவிட்டுப்போட்ட பழங்களைத் தின்ற பன்றிகளை நிபா வைரஸ் தாக்கியது. படிப்படியாக பன்றிகளைப் பராமரித்த விவசாயிகளுக்கும் பரவி உயிரைப் பறித்தது. வௌவால்களின் உமிழ்நீர், சிறுநீரால் இந்த வைரஸ் பரவும். 1999-ம் ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேலான மலேசிய விவசாயிகளை பலிகொண்டது இந்த நிபா வைரஸ்.

இந்தியாவில், 2001-ம் ஆண்டில் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் 66 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். அதில் 45 பேர் மரணம் அடைந்தனர்.  2007-ம் ஆண்டு அங்குள்ள நாடியா என்ற ஊரில் 5 பேர் பாதிக்கப்பட்டார்கள். அனைவரும் உயிரிழந்தார்கள். 2011-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. அப்போது, பாதிக்கப்பட்ட 56 பேரில், 50 பேர் உயிரிழந்தனர்.

“பழந்தின்னி வௌவால்களால் மட்டுமே நிபா வைரஸ் பரவும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, பன்றி, குதிரை, ஆடு, கோழிகளுக்கும் இந்த வைரஸ் பரவும், நிபா வைரஸ் தாக்கிய மனிதர்களின் வியர்வை, விந்தணு,  கண்ணீர்,   மலம், இருமலில் தெறிக்கும் நீர் என உடம்பிலிருந்து வெளியேறும் எல்லா திரவங்களின் மூலமும்  மற்றவர்களுக்குப் பரவும். பழந்தின்னி வௌவால்கள் வாழும் பனை மரங்கள், தென்னை மரங்களிலிருந்து இறக்கப்படும் கள், பதநீர் குடித்தாலும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படும்.

வைரஸ் தாக்கியவுடன் லேசான காய்ச்சல், சளி என சாதாரண காய்ச்சல் போலவே ஆரம்பிக்கும். ஐந்து முதல் பத்து நாட்களுக்குப் பிறகுதான் நிபா வைரஸ் தாக்குதலைக் கண்டறியமுடியும்.மூளையின் நரம்புகளைப் பாதிப்பதோடு நுரையீரல், ரத்த நாளங்களைப் பாதிக்கும். மூச்சுத்திணறல், குறைந்த ரத்த அழுத்தம், கடும் தலைவலி ஏற்படும். சிலநேரங்களில் கோமா நிலை ஏற்படும்.

‘என்செஃபாலிட்டிஸ்’ எனும் மூளைக் காய்ச்சலை உருவாக்கி இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் 14 நாட்களில் நோயின் தன்மை இறுதிக்கட்டத்தை எட்டிவிடும்.

சிகிச்சை

நிபா வைர ஸுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டால், அவரைத் தனிமைப்படுத்த வேண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்த ‘ ரைபாவாரின்’ (Ribavarin) என்னும் ஆன்டி வைரல், மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்படி உட்கொள்ள வேண்டும். மூச்சுத்திணறல், நீரிழப்பு என எந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கிறதோ, அதைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் அளிக்கலாம். சிகிச்சை அளிக்கும்போதும் பரிசோ திக்கும்போதும் மருத்துவர்களும் செவிலி யர்களும் மூன்றடுக்குப் பாதுகாப்புக் கவசத்தை அணிய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிபா: வன அழிப்பின் வினை!

பரிசோதனை

சுவாசம் தொடர்பான ‘த்ரோட் ஸ்வாப்’ (Throat Swab) பரிசோதனை, எலிசா ஆர்.டி-பி.சி.ஆர் (ELISA RT-PCR) ரத்தப்பரிசோதனை மூலம் நிபா வைரஸ் தாக்குதலை கண்டறிய முடியும். ரத்தம், தொண்டைச் சளி, சிறுநீர் அல்லது சி.எஸ்.எப் (Cerebrospinal fluid)  என்ற தண்டுவட நீர் பரிசோதனைகள்... இவற்றின் மூலம் கண்டறியலாம். 

தவிர்க்க வேண்டியவை

நிபா: வன அழிப்பின் வினை!


``பழங்களைச் சுத்தமாகக் கழுவி சாப்பிடவேண்டும். பறவைகள் கடித்துப்போட்ட பழங்களைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்துவது நல்லது.” என்கிறார் மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பைத் தடுக்க, எல்லைப்பகுதிகளில் மருத்துவச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டும் தொடங்கப்பட்டுள்ளது. வனத்துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள்  அடங்கிய குழு கோழிப்பண்ணைகளில் ஆய்வு செய்து வருகிறது.

“கேரளாவில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வௌவால்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் இருந்து நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இதுவரை தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. காய்ச்சல் ஏற்பட்டாலே, ‘நிபா வைரஸால் ஏற்பட்டது’ என்று நினைத்து பதறத்தேவையில்லை. அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளலாம்” என்கிறார் தமிழ்நாடு பொதுச் சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் குழந்தைசாமி.

`வனங்களை அழித்ததுதான், நிபா நோய் தோன்றுவதற்கு முக்கியக் காரணம்’’ என்கிறது ‘சென்டர்ஸ் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷன்’ என்கிற நிறுவனம். 

வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் எத்தனையோ விலைகளில் ஒன்றுதான் இந்த நிபா வைரஸும்.

நிபா: வன அழிப்பின் வினை!

நிபா வைரஸ் பரவுவது எப்படி?

 பழந்தின்னி வௌவால்கள் கடித்த பழங்களைச் சாப்பிடும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்.

 பழந்தின்னி வௌவாலின் சிறுநீர், கழிவு, உமிழ்நீர், வியர்வை மூலம் பிற விலங்குகளுக்கு.

 விலங்குகளின் சிறுநீர், கழிவு, உமிழ்நீர், வியர்வையால் மனிதர்களுக்கு.

 மனிதர்களின் சிறுநீர், மலம், உமிழ்நீர், வியர்வை, விந்தணு, கண்ணீர், இருமலில் தெறிக்கும் நீரிலிருந்து பிறருக்கு பரவும்.

அறிகுறி

 காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், தசை வலி,

 சுயநினைவை இழப்பது.

 மூளைக் காய்ச்சல், கோமா.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 வைரஸ் பாதித்த பழந்தின்னி வௌவால்கள் கடித்த பழங்களைத் தவிர்த்தல்.

 பழந்தின்னி வௌவால்கள் அமர்ந்த பனை மரத்தின் கள், பதநீர் அருந்தக்கூடாது.

 வைரஸால் நோயுற்ற பன்றிகள் மற்றும் பழந்தின்னி வௌவால்கள் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தல்.

 பழங்கள், காய்கறிகளை சுத்தமாகக் கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

 சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், முழுதாகத் தங்களை மூடியிருக்கும் சிறப்பு உடைகளையே பயன்படுத்தவும்.

 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேரிட்டால், மூன்றடுக்கு பாதுகாப்புக் கவசம் அணியவும். கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும்.

நிபா: வன அழிப்பின் வினை!

கருணை உள்ளம் கொண்ட லினி!

பெரம்புரா மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்தவர் லினி. நிபா வைரஸ் பாதித்தவர்களை கருணையோடு பார்த்துக்கொண்டவர். அவரும் வைரஸுக்குப் பலியானார். அவருடைய கணவர் சஜீஸ், பக்ரைனில் வேலைப்பார்த்து வந்தார். தான் இறக்கப்போவதை முன்னரே உணர்ந்த லினி, தன்னுடைய கணவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “என்னை மன்னியுங்கள் சாஜி சேட்டா.. இனி நான் உங்களைப் பார்க்க முடியாது. நான் மரணத்தை நோக்கிப் போய்க்கொண்டி ருக்கிறேன். குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒன்றும் அறியாத அவர்களை உங்களுடனே அழைத்துச் சென்று விடுங்கள். தந்தையின்றி அவர்கள் தனியே இருக்கக்கூடாது.”

லினிக்கு 5 வயதிலும் 2 வயதிலும் மகன்கள் உள்ளார்கள். தற்போது, கேரள அரசு, சஜீஸ்க்கு அரசு வேலை தருவதாக உறுதியளித்துள்ளது. உலகம் முழுவதும் லினியின் மருத்துவச் சேவைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால், தன்னுடைய தாய் நைட் ஷிப்ட் வேலைக்குப் போயிருப்பதாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் லினியின் குழந்தைகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism