Published:Updated:

``நடக்கவோ, அமரவோ முடியாது” -லாலு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

``நடக்கவோ, அமரவோ முடியாது” -லாலு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
``நடக்கவோ, அமரவோ முடியாது” -லாலு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார், லாலு பிரசாத் யாதவ். 

File Photo

பிஹாரின் முன்னாள் முதல்வரும் , ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 900 கோடி ரூபாய் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர், உடல்நலக் குறைபாட்டால் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சையின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். 

இதுகுறித்துப் பேசிய மருத்துவர்கள்,  ‘ லாலு பிரசாத்துக்கு  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக உள்ளதால், அவரின் வலது காலில் நீர்க் கட்டி ஏற்பட்டு, அது புரையோடும் அளவுக்கு உள்ளது. இந்த நீர்க்கட்டி குணமடைய இன்னும் சில தினங்கள் ஆகும். அதுவரை அவரால் நடக்க முடியாது, அமர முடியாது. இதற்காக இன்சுலின் அளித்து சர்க்கரையின் அளவைக் குறைக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும், அவர் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுவருகிறார். தேவைப்பட்டால் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படலாம்’ எனக் கூறியுள்ளனர். 

‘லாலுபிரசாத் யாதவ் நஷ்டத்தில் இயங்கிய இந்திய ரயில்வே துறையை லாபத்துக்கு மாற்றியவர்’ எனக் கூறுவர். அதே துறையில் லாலு ஊழல் செய்ததாக சிபிஐ அவர்மீது புகார் தெரிவித்தது. அந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த ஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கில், வரும் 20-ம் தேதி, (நாளை) லாலு பிரசாத் யாதவ் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.