Published:Updated:

144 தடை... பொது இடங்களில் குவியும் மக்கள் கூட்டம்... கட்டுக்குள் வருமா கொரோனா?

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்ததையடுத்து, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காகப் பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டமாகக் குவிந்து வருகின்றனர்.

உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை 7 பேர் பலியாகியிருக்கும் நிலையில், 396 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை
ஊரடங்கு உத்தரவை

இந்தியாவிலும் பரவி வரும் வைரஸ் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடுமுழுவதும், மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தனர்.

தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகத்தில் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மட்டும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை மட்டுமே இயங்கும். இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டதிலிருந்து, சென்னை முழுவதும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது. சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக வெளியூர் மக்கள் அனைவரும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர். மேலும், பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்து வருகின்றனர்.

`144 தடை உத்தரவு; மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகளுக்கு சீல்!’- முதல்வர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டியன் ஸ்டோரில் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காகக் குவிந்து வரும் மக்கள்.

மக்களை கொரோனா பாதுகாப்பிலிருந்து பாதுகாக்க, தனிமையாக இருக்க வேண்டும், கைகளைக் கழுவ வேண்டும் எனப் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வந்தாலும், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதாகத் தெரியவில்லை. இதனால் கொரோனா பரவல் அதிகமாகக்கூடும் என்ற அச்சமே மேலெழுகிறது.

அடுத்த கட்டுரைக்கு