Published:Updated:

ஐபோனுக்காக கிட்னி விற்று படுத்த படுக்கையான இளைஞர்! - 7 ஆண்டுகளுக்குப் பின் பாழான வாழ்க்கை

ஐபோனுக்காக கிட்னி விற்று படுத்த படுக்கையான இளைஞர்! - 7 ஆண்டுகளுக்குப் பின் பாழான வாழ்க்கை
ஐபோனுக்காக கிட்னி விற்று படுத்த படுக்கையான இளைஞர்! - 7 ஆண்டுகளுக்குப் பின் பாழான வாழ்க்கை

முன்பெல்லாம் ஐபோன் வைத்திருப்பவர்களைப் பார்த்தால் `பெரிய இடத்து ஆளு’ என்று தோன்றும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் EMI போன்ற ஆப்ஷன்கள் இருப்பதால் ஐபோன் வாங்குவது கொஞ்சம் எளிமையாகிவிட்டது. ஆனாலும், சில இளைஞர்கள் ஐபோன் மீது கொண்ட மோகத்தால் பணத்தைத் திரட்டுவதற்காக பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஐபோனுக்காக கிட்னி விற்று படுத்த படுக்கையான இளைஞர்! - 7 ஆண்டுகளுக்குப் பின் பாழான வாழ்க்கை

 
 

ஐபோன் மோகம் ஒருவரை எந்த உச்சத்துக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு 2011-ல் சீன இளைஞர் சிறுநீரகத்தை விற்ற சம்பவம்தான் எடுத்துக்காட்டு. அவரின் தற்போதைய நிலையைச் சீன ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.  

ஐபோன் 4 வெளியான காலகட்டம் அது. சீனாவைச் சேர்ந்த 17 இளைஞர் சியாவோ வாங் என்பவரின் பணக்கார நண்பர்கள் சிலர் ஐபோன் 4 வாங்கிவிட்டனர். சியாவோவுக்கும் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. ஆனால், அதற்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. ஆன்லைனில் சிறுநீரகம் விற்பது பற்றிய விளம்பரம் ஒன்று அவரின் கண்களில் தென்பட்டது. சற்றும் யோசிக்காமல், விளம்பரம் கொடுத்திருந்த இடைத்தரகரைத் தொடர்புகொண்டு பேசினார். சட்டத்துக்குப் புறம்பாக சிறுநீரகம் விற்பனை செய்யும் மருத்துவமனை ஒன்றுக்கு சியாவோ அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதன்மூலம் அவருக்குக் கிடைத்த தொகை 3,200 டாலர். அந்தப் பணத்தை  வைத்து உற்சாகமாக ஐபோன் வாங்கினார் சியாவோ. ஆனால், அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே அவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்தது.

ஐபோனுக்காக கிட்னி விற்று படுத்த படுக்கையான இளைஞர்! - 7 ஆண்டுகளுக்குப் பின் பாழான வாழ்க்கை


 

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் சியாவோவின் இன்னொரு சிறுநீரகத்திலும் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது. முன்னர் சியாவோவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் முறையாகச் செய்யவில்லை. காயம் சரியாக ஆறாமல் தொற்று ஏற்பட்டு இன்னொரு சிறுநீரகத்துக்கும் பரவியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட சியாவோ அதிர்ச்சியில் உறைந்து போனார். வேறு வழியில்லாமல் தற்போது தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும், சிகிச்சைக்குச் செலவழிக்கப் பணமில்லாமல் அவரின் குடும்பம் திண்டாடி வருகிறது. அவருக்குச் சிகிச்சை செய்த போலி மருத்துவர்கள் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லையாம். ஐபோன் மோகம் ஒரு இளைஞரின் வாழ்க்கையையே பாழாக்கிவிட்டது!