‘கொசு’று செய்தியாகக் கடந்து போக வேண்டிய விஷம் இன்று பிரதான செய்தியாகிவிட்டது. கொசுக்களால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா போன்ற நோய்கள் இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகள் அனைத்தையும் பதம்பார்த்து வருகின்றன. கொசுவைக் கொல்வதற்குத்தான் நம்மிடம் எத்தனை உபகரணங்கள்! உண்மையில் கொசுவை முற்றிலுமாக ஒழித்துவிட முடியுமா?

“கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் தலைப்பிரட்டைக்குப் பெரும்பங்கு உண்டு. தலைப்பிரட்டைக்கு முக்கிய உணவே கொசுப்புழுக்கள்தான். ஆனால் இன்று தலைப்பிரட்டைகளைப் பார்க்கவே முடிவதில்லை. தவளைச் சத்தத்தையும் கேட்க முடியவில்லை. வேளாண் உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்பதற்காகப் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளைக் கொட்டி நீர்நிலைகளையும், வேளாண்மையையும் அழித்துவிட்டோம். தவளை இணையுடன் சேர்ந்து தண்ணீரில்தான் முட்டையிடும். தண்ணீரில் பூச்சிக்கொல்லிகள் கலந்ததால் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, பல தவளை இனங்கள் அழித்துவிட்டன. அதனால் கொசுக்கள் பல்கிப் பெருகிவிட்டன.சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதன் மூலமே கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் காட்டுயிர் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன்.

நாம் வாழும் சமவெளிப் பகுதி நீர் நிலைகள்,மேற்குத் தொடர்ச்சி மலை, மலைக்காடுகளில் 180 வகைத் தவளைகள் இருந்தன. இன்று தவளைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. தவளைகள் மட்டுமன்றி, கொசுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதில் வேறு சில உயிரினங்களும் தாவரங்களும் பெரும் பங்களிப்பை வழங்கிவந்தன.

“கொசுவின் முட்டையிலிருந்து ஒவ்வொரு படிநிலையிலும், அதனை அழிப்பதற்கு இயற்கை சில உயிரினங்களை வைத்திருந்தது. மழைக்காலங்களில் அதிகமாகத் தென்படும் தட்டான் பூச்சிகள் நீர்நிலைகளின் மேல் பறந்து கொண்டிருக்கும்போது திடீரெனத் தண்ணீரில் வந்து உட்கார்வதைப் பார்த்திருப்போம். தண்ணீர் குடிக்கிறது என்று நாம் நினைப்போம். ஆனால் அது தண்ணீரில் இருக்கும் கொசு முட்டைகளைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். ஒரு சிறிய தட்டானுக்கு 30 ஆயிரம் கண்கள் இருக்கும். தட்டானிடமிருந்து கொசு முட்டைகள் தப்பிக்கவே முடியாது. ஆனால் இன்று தட்டான்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. 25 கோடி ஆண்டுகளாக வாழ்ந்துவந்த தட்டான் பூச்சிகளை, பூச்சிக்கொல்லிகள் தெளித்து அழித்துவிட்டோம்.

அன்றைய காலங்களில் நமது வீடுகளின் முற்றத்தில் பந்தல் போட்டிருப்பார்கள். அந்தப் பந்தல்களின் இண்டு இடுக்குகளில் சிறிய அளவிலான பழுப்பு நிற வௌவால்கள் இருக்கும். இந்த வௌவால்கள் பகலில் வெளியே தெரியாது. மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை உள்ள ஒருமணி நேரத்தில் ஒரு வௌவால் 600 கொசுக்களைச் சாப்பிட்டுவிடும். ஒரு வீட்டுக்கு இரண்டு வௌவால்கள் இருந்தால்போதும், கொசுத் தொல்லையில்லாமல் நிம்மதியாக உறங்கலாம். அவையும் இப்போது குறைந்துவிட்டன.

பெண் கொசுக்கள் மட்டும்தான் ரத்தத்தைக் குடிக்கும். முட்டையிடுவதற்குப் புரதம் தேவைப்படும் என்பதால் பெண் கொசுக்கள் ரத்தத்தையே உணவாக எடுத்துக்கொள்கின்றன. குறிப்பாக, பாலூட்டிகளிடமிருந்து ரத்தத்தை எடுக்கின்றன.

ஆண் கொசுக்களின் உணவு, இலைகளின் சாறு மட்டும்தான். இதைத் தெரிந்து வைத்திருந்த முன்னோர் வீடுகளைச் சுற்றி இருந்த வேலிகளின் ஓரத்தில் நொச்சி, சோற்றுக்கற்றாழை, கற்பூரவல்லி ஆகிய தாவரங்களை வளர்த்தனர். ஆண் கொசுக்களுக்கு இவை எல்லாமே அலர்ஜி. அதனால் அந்தப் பகுதியிலிருந்து ஆண் கொசுக்கள் பறந்து சென்று விடும். ராமன் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தி... அதனால் ஆண் கொசுக்களைப் பின் தொடர்ந்து பெண் கொசுக்களும் சென்று விடும். இது இயற்கை உருவாக்கி வைத்திருந்த உயிர்ச் சங்கிலி. அதை உடைத்து விட்டோம்” என்கிறார் சூழலியலாளர் கோவை சதாசிவம்.

சூழலியல் மாற்றத்தால் அதிகரித்துள்ள புவியின் வெப்பமும் கொசுக்களின் உற்பத்திக்கு முக்கியக் காரணம். கொசுவின் முட்டை பொரித்துப் புழுவாக மாற, 15 நாள்கள் ஆகும். புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதால், முட்டைகள் 6 நாள்களிலேயே பொரித்துவிடுகின்றன. விளைவு, குறுகிய காலத்தில் அதிக கொசுக்கள் உற்பத்தி. ஒரு கொசுவின் சராசரி ஆயுட்காலம் 90 நாள்கள். ஒரு பெண் கொசு, தனது வாழ்நாளில் 20,000 முட்டைகளை இடுகிறது. கொசுக்கள்தான் நோய்களைப் பரப்புகின்றன என்று கொசுக்கள் மீதே பழியைப் போட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த வழக்கில் கொசுக்கள் குற்றவாளிகள் அல்ல. கொசுக்களை நோக்கிக் கைகளை நீட்டும் நாம்தான் குற்றவாளி.

“நோய்க்கிருமிகளைப் பரப்பும் ஆற்றல் கொசுக்களுக்கு இல்லை. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நிறைய கழிவுகள் உள்ளன. அவற்றில் பல உடலை விட்டு வெளியேறாமல் தேங்கியே இருக்கும். ஆயிரம் பேரில் இரண்டு மூன்று பேருக்கு முறையாகக் கழிவுகள் வெளியேறாது. இந்தக் கழிவுகள் புதிய நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்யும். இவைதான் புதிய நோய்களின் பிறப்பிடமும்கூட. நுண்ணுயிரிகளைக் கொண்ட மனிதர்களைக் கொசு கடிக்கும்போது, அந்த நுண்ணுயிர்கள் கொசுவுக்குக் கடத்தப்படுகின்றன. கொசுக்களின் மூலம் இவை அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. அதாவது மனிதர்கள் நோய்களைச் சமைத்து வைக்கிறார்கள். கொசுக்கள் பரிமாறுகின்றன.

கொசுவிரட்டி மருந்து நிறுவனங்களின் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி. ஆனால் நாம் எவ்வளவு செலவு செய்தாலும் ஒரு கொசுகூடச் சாகவில்லை. கொசுவிரட்டி கலந்த காற்றை சுவாசிப்பதால் மனிதனுக்கு நுரையீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. கொசு தப்பித்துவிடுகிறது; நாம் சிக்கிக்கொள்கிறோம்” என்கிறார் சதாசிவம்.

மனிதனால் கொசுக்களை அழிக்கவே முடியாது. எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பயனில்லை. சுற்றுச்சூழலை மீட்டெடுத்து, உயிர்ச் சங்கிலியை உயிர்ப்பிப்பதன் மூலமாக மட்டுமே கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியும். அந்தப் பணிகளையும் இயற்கையே மேற்கொள்ளும். மனிதர்களாகிய நாம் இயற்கையை அழிக்காமல் சும்மா இருந்தாலே போதும்!

ஜெனி ஃப்ரீடா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி