Published:Updated:

உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்

உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்
உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்

ஆண்கள் அனைவருக்கும் தாங்கள் `சிக்ஸ் பேக்' (six pack) வைத்துக்கொள்ள வேண்டும் என்று தனி ஆசை இருக்கும். அதற்காக ஆசைப்பட்டு சிலர் ஜிம்மிலும் சேர்ந்துவிடுவார்கள் ஆனால், தற்போதுள்ள இளைஞர்கள் சாப்பிடும் ஃபாஸ்ட் புட், நேரமின்மை குறிப்பாக சோம்பேறித் தனம் ஆகிய அனைத்தும் சேர்ந்து அவர்கள் வாழ்வில் விளையாடி இறுதி வரையில் தாங்கள் ஆசைப்படும் `சிக்ஸ் பேக்' வராமலே போய்விடும்.

உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்

இதேபோன்ற ஒரு பிரச்னையில் சிக்கித் தவித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞர் புதிய வழியில் தன் சிக்ஸ் பேக்கை உருவாக்கியுள்ளார். தாய்லாந்தைச் சேர்ந்த பாங்க்பார்ன் ஓன்வில்லை (Pangpaparn Ounvilai) என்ற 24 வயது இளைஞர் ஃபேஷன் துறையில் மாடலாக வேலை செய்துவருகிறார். அவருக்கும் நீண்ட வருடங்களாக `சிக்ஸ் பேக்' வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது. அதற்காக ஜிம்முக்குச் சென்று எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் தன் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையவில்லையாம். 

உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்

PC : Viralpress

அதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மாஸ்டர்பீஸ் என்ற மருத்துவமனையை அணுகியுள்ளார் பாங்க்பார்ன். அங்கு அளிக்கப்படும் சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் உடற்பயிற்சி செய்யாமல் எளிதில் `சிக்ஸ் பேக்' பெற்றுள்ளார். அதிக எடையுள்ளவர்களுக்குக் கொழுப்பை குறைக்கச் செய்யப்படும் லிபோசக்‌ஷன் (Liposuction) என்ற முறைப்படி முதலில் வயிற்றில் உள்ள கொழுப்புகள் நீக்கப்படுகிறது. பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி (plastic surgery) மூலம் அவர்களுக்குத் தேவையான சிக்ஸ் பேக், எயிட் பேக் (eight pack) ஆகியவை பொருத்தப்படுகிறது. 

உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்

இந்த அறுவை சிகிச்சை குறித்துப் பேசிய மருத்துவர் அடிடயப்பா போடியா (Atittayapa Photiya), தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தற்போது இந்த முறையிலான அறுவை சிகிச்சை பிரசித்தி பெற்று வருகிறது. பல இளைஞர்கள் இதுபோன்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு 3,000 பவுண்டுகள் வரை செலவாகும் (இந்திய மதிப்பில் 2,71,843 ) ஒரு வருடத்துக்கு 15 முதல் 20 இளைஞர்கள் சிக்ஸ் பேக்ஸ் வேண்டும் என எங்களிடம் வருகின்றனர்.

உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புகள் நீக்கப்பட்டு இயற்கையான முறையில் சிக்ஸ் பேக் தோற்றத்தை உருவாக்குவதே இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பு. ஆனால், ஒரு முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டால் அதன்பிறகு சரியான முறையில் உடலைப் பராமரிக்க வேண்டும். இவை அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்குக் கூறிய பிறகே நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்

அறுவை சிகிச்சை மூலம் சிக்ஸ் பேக் பெற்ற பாங்க்பார்ன் ஓன்வில்லை இது பற்றி கூறும்போது, ``நான் சிக்ஸ் பேக்குக்காக பல வருடங்களாக உழைத்தேன். ஆனால், எதுவும் கைகூடவில்லை. அதனால் அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவெடுத்தேன். எப்போதும் என் உடல் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நான் எண்ணுவேன். ஆனால், எனக்குச் சிறிய தொப்பை ஏற்பட்டுவிட்டது தற்போது நான் ஆசைப்பட்ட உடலமைப்பைப் பெற்றுவிட்டேன்.

உடற்பயிற்சி வேண்டாம்; அறுவை சிகிச்சை போதும்! - தாய்லாந்து இளைஞர்களின் `சிக்ஸ் பேக்' மோகம்

இந்த சிகிச்சையின் மூலம் எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை. மிகவும் எளிமையான முறையில் செய்யப்படுகிறது. அதேபோல் கொழுப்பை நீக்கும்போது பெரிய கட்டுகள் ஏதும் போடாமல் சிறிய பேண்டேஜ்கள் மட்டுமே பொருத்தப்படுகிறது” எனக் கூறியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள வெளிநாடுகளில் இருந்தும் பல பயணிகள் தாய்லாந்துக்குப் படையெடுப்பதாக கூறப்பட்டுள்ளது. 

Vikatan