Published:Updated:

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆபத்து; மகளை எண்ணி வருந்தும் தாய்! #SaveSrijani #SponsoredContent

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆபத்து; மகளை எண்ணி வருந்தும் தாய்! #SaveSrijani #SponsoredContent
தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆபத்து; மகளை எண்ணி வருந்தும் தாய்! #SaveSrijani #SponsoredContent

தனது பிள்ளையைக் காப்பாற்ற ஒரு தாய் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு ஸ்ரீஜனியின் தாயார் வந்தனா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சீறுநீரகத்தை தானம் செய்ய தயாராக இருக்கிறார் இந்தத் தாய். எனினும் ஸ்ரீஜனியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவளது பெற்றோர் போராடி வருகின்றனர். 

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆபத்து; மகளை எண்ணி வருந்தும் தாய்! #SaveSrijani #SponsoredContent

11 வயதுடைய ஸ்ரீஜனிக்கு தன் அம்மாவுக்கு உதவி செய்வது மிகவும் பிடித்தவொன்று. ஒருநாள் தாயாருடன் சந்தைக்கு செல்கையில் அம்மாவிடம் இருந்த பையை வாங்கிக்கொண்டு நடந்தவள்... அந்தப் பையை தூக்க முடியாமல் அவதிப்பட்டாள். அதன் பின் இரவு உணவு உண்ணும்போது ஸ்ரீஜனியிடம் வலி எவ்வாறு இருக்கிறது என்று கேட்டால், பரவாயில்லை என்று பதிலளித்த அவளது முகத்தைப் பார்த்தால் ஏதோ சரியில்லை என்றே தோன்றியது. அவளுடைய பெற்றோருக்கு. அடுத்தநாள் காலை மிகவும் சோர்ந்து காணப்பட்ட ஸ்ரீஜனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு மருத்துவர் ரத்த சோதனை, சீறுநீர் சோதனை எடுக்கச் சொன்னார். இரண்டு சோதனைகளையும் எடுக்க வெவ்வேறு நகரத்துக்கு செல்ல வேண்டியிருந்ததால் ஸ்ரீஜனி கூடுதலாக சோர்வடைந்தாள். அந்த சோதனைக்கான முடிவுகளை எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் வருகையில் ஸ்ரீஜனி அயர்ந்து தூங்கிவிட்டாள். இதனிடையே மருத்துவர், ஸ்ரீஜனியின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதாக கூற,  உடைந்தே போனார் வந்தனா. 

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆபத்து; மகளை எண்ணி வருந்தும் தாய்! #SaveSrijani #SponsoredContent

அன்றிலிருந்து ஸ்ரீஜனிக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல மாதங்களாக மருத்துவமனையில் இருப்பதால் ஸ்ரீஜனிக்கு மருத்துவமனை சுற்றுச்சூழல் பிடிக்கவில்லை. "என்னைச் சீக்கிரம் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னால் இங்கே இருக்க முடியவில்லை. நண்பர்களுடன் விளையாட முடியவில்லை" என வருத்தப்படுவதாக வந்தனா கவலைப்படுகிறார். தற்போது ஸ்ரீஜனிக்கு விரைவில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தனது ஒரு சிறுநீரகத்தை மகளுக்காக தானம் செய்ய வந்தனா இருக்கிறார்.ஆனால் அறுவை சிகிச்சைக்கு பத்து லட்சம் ரூபாய் தேவையாக இருக்கிறது. இந்த சிகிச்சைக்காக பெங்காலில் இருந்து வேலூருக்கு வந்துள்ளனர் ஸ்ரீஜனியின் பெற்றோர். பெங்காலில் இல்லப்பராமரிப்பு வேலை செய்து வந்தார் ஸ்ரீஜனியின் தந்தை. அதில் மாதம் மூவாயிரம் வருமானம் வரும். டயாலிசிஸ் சிகிச்சைக்கே வாரத்தின் மூன்று நாள்களுக்கு ரூ.39,000 செலவு செய்கிறார்கள். இந்த நிலைமையில் பெங்காலைவிட்டு சென்னைக்கு வந்ததால் கைவசம் தற்போது வேலை, வருமானமுமின்றி தவித்து வருகின்றனர்.  

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆபத்து; மகளை எண்ணி வருந்தும் தாய்! #SaveSrijani #SponsoredContent

"இந்த ஒன்பது மாதத்தில் எங்களிடம் இருந்த எல்லா சேமிப்புகளும் செலவாகிவிட்டன. தற்போது எங்களிடம் ஒன்றுமில்லை. நாங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஸ்ரீஜனியின் உயிருக்கு மிகவும் ஆபத்தாக முடிந்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறோம். எப்படியாவது எங்களது மகளை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்பதே எங்களது விருப்பம்" என்கிறார் அழுகையுடன் தாயார் வந்தனா.  நிதி திரட்டும் இணையதளமான 'KETTO' ஸ்ரீஜனிக்கு தேவைப்படும் தொகையைத் திரட்டி உதவுவதற்காக முன்வந்துள்ளது. கெட்டோவுடன் இணைந்து பல கரங்களையும் உதவ அழைப்போம்... நம்மால் முடிந்த உதவியையும் செய்ய முன்வருவோம். தானத்தைவிட சிறந்ததோர் உதவி எதுவும் இருக்கமுடியாது. சிறிதளவேனும் தானம் செய்து ஸ்ரீஜனி பயனடைய நமது பங்கை முன்வைப்போம். http://bit.ly/SaveSrijani இந்த லிங்கிற்குச் சென்று ஸ்ரீஜனிக்கு உதவி புரியலாம்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto-வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.