Published:Updated:

`எப்போது மாறும் இந்த அவலநிலை!’ -கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள்

`எப்போது மாறும் இந்த அவலநிலை!’ -கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள்
`எப்போது மாறும் இந்த அவலநிலை!’ -கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள்

வேலூர் மாநகராட்சியில் பாதுகாப்பு உறையின்றி வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

`எப்போது மாறும் இந்த அவலநிலை!’ -கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள்

வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு கையுறை, கால் பூட், சோப்பு, யூனிஃபார்ம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகின்றன. இதனால், கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாளச் சாக்கடை அடைப்பைப் பாதுகாப்பு உறையின்றி அகற்றும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் துப்புரவுப் பணியாளர்கள். கால்வாய்களில் இரும்புக் கம்பிகளை விட்டு அடைப்பைச் சரிசெய்தாலும், கைகளால்தான் கழிவுகளை வெளியில் அள்ளுகிறார்கள். உறை அணியாததால் கால்வாய்களில் புதைந்திருக்கும் கண்ணாடி மற்றும் இரும்புக் கம்பிகள் கை, கால்களைக் குத்தி பதம்பார்க்கிறது. பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதுடன் சில சமயங்களில் விஷ வாயு தாக்கி உயிரிழப்பும் நேரிடுகிறது. இறந்துபோகும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதையெல்லாம் அறியாத துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்துவதில்லை.

`எப்போது மாறும் இந்த அவலநிலை!’ -கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள்

இந்த நிலையில், இன்று காலை வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட வள்ளலாரில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வெறும் கைகளால் கழிவுகளை அள்ளி கால்வாய் அடைப்பைச் சரிசெய்துகொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ``என்னோட பெயர் பன்னீர்செல்வம். எனக்கு 52 வயசாகுது. சத்துவாச்சாரி காந்தி நகரில்தான் தங்கியிருக்கிறேன். 20 வருஷமா துப்புரவுத் தொழில் செய்றேன். எப்பவுமே இப்படித்தான். கை, காலுக்கு உறை கேட்டா மாநகராட்சி அதிகாரிங்க கண்டுக்கிறதில்ல. பட்டியலின சமூகத்துல பிறந்தது ஒரு குற்றமா’’ என்று வேதனைப்பட்டார். இதுபற்றி உடனடியாக மாநகராட்சி அதிகாரி மணிவண்ணனிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், ``நாங்க பாதுகாப்பு உறைகள் கொடுக்கிறோம். ஆனா, தொழிலாளர்கள் பயன்படுத்துவதில்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்’’ என்றார் சிம்பிளாக. துப்புரவுத் தொழிலாளர்களின் நலனில் எவ்வித அக்கறையும் காட்டாத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

Vikatan