Published:Updated:

கொரோனா: தடைபட்ட 18.5 லட்சம் கருக்கலைப்புகள்! -ஆய்வில் வெளியான அதிர்ச்சி

unsafe abortion ( freepik )

ஊரடங்கால் தடைபட்டிருக்கும் மருத்துவ வசதிகளால், பெண்கள் பலர் விரும்பாத கர்ப்பத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா: தடைபட்ட 18.5 லட்சம் கருக்கலைப்புகள்! -ஆய்வில் வெளியான அதிர்ச்சி

ஊரடங்கால் தடைபட்டிருக்கும் மருத்துவ வசதிகளால், பெண்கள் பலர் விரும்பாத கர்ப்பத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
unsafe abortion ( freepik )

லாக்டௌனால் முடங்கிய வாழ்க்கை, பல சிக்கல்களையும் ஏற்படுத்திவருகிறது. அதில் ஒன்று, பெண்கள் தங்களின் தேவையற்ற கர்ப்பத்தைக் கலைக்க முடியாத நிலை. கோவிட்-19 காரணமாக இந்தியாவில் லாக்டௌன் அறிவிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களில், கிட்டத்தட்ட 18.5 லட்சம் பெண்கள் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.

lock down
lock down

இதுகுறித்து ஒரு முக்கியமான ஆய்வை ஐபாஸ் மேம்பாட்டு நிறுவனம் (Ipas Development Foundation) நடத்தியது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 முதல் ஜூன் 24 வரையிலான இந்த மூன்று மாத காலகட்டத்தில், வழக்கமான கணக்கின்படி 39 லட்சம் கருக்கலைப்புகள் நடந்திருக்க வேண்டும். ஆனால், லாக்டௌனால் அதில் 18.5 லட்சம் கருக்கலைப்புகள் தடைபட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் அந்நிறுவனம், துறை சார்ந்தவர்களுடன் தொலைபேசியில் கேட்டறிந்த தகவல்களின் மூலம், 18,50,000 ஆயிரம் பெண்களில் 80% பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாமல் போனதற்கு லாக்டௌனில் திறக்கப்படாத மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது.

unwanted pregnancy
unwanted pregnancy

வழக்கமாக இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 1.56 கோடி கருக்கலைப்புகள் நடப்பதாக 'தி லான்செட்' மருத்துவ இதழ் 2015-ம் ஆண்டு ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டிருந்தது. இந்தக் கருக்கலைப்புகளில் 73% மருந்து, மாத்திரைகள் கொண்டும், 16% தனியார் மருத்துவமனைகளிலும், 6% பொதுமருத்துவனைகளிலும், 5% பாதுகாப்பற்ற முறைகளிலும் நடைபெறுவதாகவும் இவ்விதழ் தெரிவித்திருந்தது.

தற்போது, ஊரடங்கால் தடைபட்டிருக்கும் மருத்துவ வசதிகளால், பெண்கள் பலர் விரும்பாத கர்ப்பத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. அது அவர்களுக்கு மேலும் சிக்கலை உண்டாக்கும் ஆபத்தும் உள்ளது. எனவே, லாக்டௌனிலும் கருக்கலைப்புக்குத் தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது அவசியமாகிறது.

safe abortion
safe abortion

முதல் ட்ரைமெஸ்டரில் கருக்கலைப்புக்கான வாய்ப்புகள் தடைபட்ட இந்தப் பெண்கள், லாக்டௌன் தளர்வானால் தங்கள் இரண்டாம் ட்ரைமெஸ்டரில் அதற்கான வாய்ப்புகள் தேடி மருத்துவமனையை நாடலாம். அப்போது அவர்களுக்கு அதிக கவனத்துடன் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும்.