Published:Updated:

சீனாவில் விலை ஏற்றம் எதிரொலி!- இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு

விலை உயர்வு
விலை உயர்வு

இந்த விலை உயர்வு மருத்துவச் செயற்பாட்டாளர்களின் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

காசநோய் தடுப்பூசி, தொழுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 21 மருந்து, மாத்திரைகளின் உச்சவரம்பு விலை 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் பெரும்பாலும் சீன நாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

காசநோய் தடுப்பூசி
காசநோய் தடுப்பூசி

அதுபோன்ற மூலப்பொருள்களின் விலை சீனாவில் அதிகரித்துள்ளதன் எதிரொலியாக இந்தியாவிலும் மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துப்பொருள்கள் விலை நிர்ணய ஆணையத்தின் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காசநோய், மலேரியா, தொழுநோய்களுக்கான மருந்துகள், வைட்டமின் சி, ஆன்டிபயாடிக் உள்ளிட்ட 21 மாத்திரைகளின் விலை அதிகரித்துள்ளது.

மருந்துகள்
மருந்துகள்

இது தொடர்பாகப் பேசியுள்ள மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள், ``அனைத்து மருந்துகளையும் பொதுமக்கள் வாங்கக்கூடிய வகையில் எப்போதும் விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால், சீனாவில் மருந்துப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் தான் சில மருந்துகளின் விலையை அதிகரிக்கும்படி நிதி ஆயோக்கின் நிலைக்குழு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில்தான் மருந்துகளின் உச்சவரம்பு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த விலை உயர்வு மருத்துவச் செயற்பாட்டாளர்களின் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது

Drugs
Drugs

" திடீரென்று விலையை 50 சதவிகிதம்வரை அதிகரிப்பது என்பது சரியான திட்டமிடல் இல்லை என்பதையே காட்டுகிறது. இதுபோன்று மருந்து விலையின் ஏற்ற இறக்கத்தை நிர்வகிக்கும் வகையில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 1,150 பேரைப் பலிவாங்கும் காசநோய்... அறிகுறிகள், சோதனைகள், சிகிச்சைகள்! #TuberculosisAlert
அடுத்த கட்டுரைக்கு