Published:Updated:

கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற இளம் தம்பதிக்குக் கொரோனா?! - திருவாரூரில் தனிமைப்படுத்தப்பட்ட மூவர்

திருவாரூர் மருத்துவமனை
திருவாரூர் மருத்துவமனை

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதைக் கண்டறிவதற்கும் தொடர் சிகிச்சை அளிப்பதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளா சென்று வந்த மூவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே பெரும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. சீனா, இத்தாலி, இரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் தாக்குதல், இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 147-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் ஒருசிலர் இதற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதைக் கண்டறிவதற்கும் தொடர் சிகிச்சை அளிப்பதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற இளம் தம்பதிக்குக் கொரோனா?! - திருவாரூரில் தனிமைப்படுத்தப்பட்ட மூவர்

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு வந்த ஒருவருக்கும் அமெரிக்காவிலிருந்து நாகை மாவட்டத்துக்குத் திரும்பி வந்த ஒருவருக்கும் கொரோனா சந்தேகத்தின் பேரில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதேசமயம், சவுதி அரேபியாவிலிருந்து சொந்த ஊரான வேதாரண்யம் அருகே வாய்மேடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஓர் இளம் தம்பதிக்கும் கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அடுத்த கட்டுரைக்கு