Published:Updated:

38 வயதில் 20வது முறையாகக் கர்ப்பம்...16 குழந்தைகள்..!- அதிகாரிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பெண்

pregnancy
News
pregnancy ( pixabay )

20-வது முறையாக அந்தப் பெண் கருத்தரித்திருப்பது தெரியவந்ததும், தேவையான மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவில் தாயும் குழந்தையும் நலமாக இருப்பது கண்டறியப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாநிலத்தைச் சேர்ந்த லங்காபாய் காரத் என்ற பெண் தனது 38-வது வயதில் 20 முறையாகக் கருத்தரித்திருக்கிறார். இந்தச் செய்தி அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மருத்துவ வரலாற்றில் இது ஓர் அரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

pregnant woman
pregnant woman
Pixabay

லங்காபாய் காரத்துக்கு இதுவரை 16 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. மூன்று மாத கர்ப்ப காலத்தில்தான் மூன்று முறையும் கருச்சிதைவு நிகழ்ந்துள்ளது. அவருக்குப் பிறந்த 16 குழந்தைகளில் 11 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர். தற்போது 20-வது முறையாக 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லங்காபாய் சார்ந்துள்ள இனத்தினரின் வாழ்வாதாரம் என்பது தினக்கூலியாக சிறிய வேலைகளைச் செய்வது, பிச்சையெடுப்பது ஆகிய தொழில்களே. இதனால் அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் குடிபெயர்ந்துகொண்டே இருப்பார்கள். அதனால்தான் சுகாதாரத்துறை அதிகாரிகளால் லங்காபாயைக் கண்டறிய முடியவில்லை.

baby
baby
pixbabay

தற்போது யதேச்சையாக சுகாதாரத்துறை பணியாளர் ஒருவரால் இவர் கண்டறியப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``20-வது முறையாக அந்தப் பெண் கருத்தரித்திருப்பது தெரியவந்ததும், தேவையான மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவில் தாயும் குழந்தையும் நலமாக இருப்பது கண்டறியப்பட்டது. தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. கர்ப்பத்தின்போது நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம். பிரசவ தேதி நெருங்கும் நேரத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்" என்று லங்காபாயிக்கு சிகிச்சை அளித்த பீட் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Safe pregnancy
Safe pregnancy
pixabay

லங்காபாய்க்கு இதுவரை மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்டதே இல்லை. வீட்டில்தான் அனைத்துப் பிரசவங்களும் நடைபெற்றிருக்கின்றன. `ஒரு பெண்ணின் கர்ப்பப்பை என்பது தசைகளால் ஆனது. ஒவ்வொரு முறை பெண் கருத்தரிக்கும்போதும் அந்தத் தசை தளர்வடைவதோடு வலுவிழக்கவும் செய்யும். மீண்டும் மீண்டும் கருத்தரிக்கும்போது பல்வேறு கூடுதல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்' என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.