Published:Updated:

குரங்கு அம்மை அறிகுறியுடன் குமரி மருத்துவமனையில் 4 பேர்... புனேவுக்கு அனுப்பப்பட்ட மாதிரி!

குரங்கு அம்மை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குரங்கு அம்மை அறிகுறியுடன் குமரி மருத்துவமனையில் 4 பேர்... புனேவுக்கு அனுப்பப்பட்ட மாதிரி!

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Published:Updated:
குரங்கு அம்மை

இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த 12-ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் கேரளா வந்த கொல்லத்தைச் சேர்ந்த 35 வயதுள்ள இளைஞருக்கு முதலில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு பேருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. இதுவரை கேரளத்தில் மூன்று பேருக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கன்னியாகுமாரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை
கன்னியாகுமாரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்கு பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வெளியான பிறகே, குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளதா எனத் தெரியவரும்.

இதுபற்றி ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், "காய்ச்சல், உடலில் கொப்பளங்களுடன் நான்கு பேர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளனர். அவர்களது சாம்பிள்கள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியாக இன்னும் இரு நாள்கள் ஆகும்" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நான்கு பேரும் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்களோ, கேரளா சென்று வந்தவர்களோ அல்லர். அதேநேரம், அப்பகுதியில் இறுதிச்சடங்குக்கு கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் வந்து சென்றுள்ளனர். அந்த மூன்று பேருக்கும் குரங்கு அம்மை இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் குமரி மாவட்டத்தில் கேரளா - தமிழ்நாடு சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரிசோதனை
பரிசோதனை

குரங்கு அம்மை பரவிய மிருகங்களின் ரத்தம், உடல் திரவங்களின் நேரடி தொடர்பு மூலம் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. அணில், எலி, குரங்கினங்கள் மற்றும் மிருகங்களிடம் இருந்து இந்த நோய் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட மிருகங்களிடம் இருந்து விலகி இருக்கும்படியும், இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நோய் பாதித்த மனிதரின் சுவாச பாதைகளில் உள்ள திரவங்கள் மூலமும், பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள காயம் மூலமும், பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்வது உள்ளிட்ட காரணங்களாலும் குரங்கு அம்மை பரவுகிறது. காய்ச்சல், தீவிர தலைவலி, முதுகுவலி, உடல்வலி, உடற்சோர்வு உள்ளிட்டவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும். காய்ச்சல் ஏற்பட்டு 13 நாள்களுக்குள் உடலில் கொப்பளங்கள் ஏற்படும். முகம், கை, கால்களில் அதிகமாக கொப்பளங்கள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.