Published:Updated:

238 பேரில் 4 பேருக்குக் கொரோனா..வீட்டுக் கண்காணிப்பில் 1,190 பேர்.. நீலகிரிக்கு நிம்மதிதரும் அப்டேட்

ooty
ooty

நீலகிரி மாவட்டத்திலிருந்து கோயம்பேடு மற்றும் இதர மாவட்டங்களுக்குச் சென்று திரும்பிய டிரைவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நான்கு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை என கலெக்டர் தெரிவித்தார்.

டெல்லி சென்று நீலகிரிக்குத் திரும்பிய 8 பேரில் 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்களின் உறவினர்கள் 2 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு 9 பேர் கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

ooty
ooty

இடைப்பட்ட காலத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக நீலகிரி இருந்தது. இந்த நிலையில் கோயம்பேடு சென்று திரும்பிய ஓட்டுநர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வதந்தி!

டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் மீது பரப்பப்பட்ட வதந்தி போலவே தற்போது நீலகிரி லாரி ஓட்டுநர்களுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ooty
ooty

இதுகுறித்து விளக்கமளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா "நீலகிரி மாவட்டத்திலிருந்து கோயம்பேடு சென்ற 45 லாரி ஓட்டுநர்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்குச் சென்ற 238 லாரி டிரைவர்களை பரிசோதனை செய்ததில் இதுவரை நான்கு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் நான்கு பேரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்கள் நான்கு பேர் வசித்த பகுதிகளும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பரிசோதனைகள் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். அதேபோல், வதந்திகளையும் நம்ப வேண்டாம். கோயம்பேடு மார்க்கெட்டில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த வாரம் இரு நாள்கள் மட்டுமே கோயம்பேடு செல்லும் லாரிகள் ஓடவில்லை. தற்போது வழக்கம் போல் காய்கறிப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

ooty
ooty

நீலகிரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்பிய மற்றும் பாஸ் பெற்று வெளிமாவட்டங்களுக்குச் சென்றவர்கள் என மொத்தம் 1,190 பேர் தற்போது வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு