Published:Updated:

பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்த 8 கருக்கள்... அறுவை சிகிச்சை செய்து நீக்கம்!

New born ( Pixabay )

அறுவைசிகிச்சையில் குழந்தையின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட கருக்கள் மூன்று சென்டிமீட்டர் முதல் ஐந்து சென்டிமீட்டர் வரை இருந்தன.

ஜார்க்கண்ட்டின் ராம்கர் மாவட்ட அரசு மருத்துவமனையில், அக்டோபர் 10-ம் தேதி குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தக் குழந்தையின் உதரவிதானத்துக்கு கீழே கட்டி ஒன்று இருப்பது தெரிந்தது. உடனே குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்... இல்லையெனில், வயிற்றில் பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்த 8 கருக்கள்... அறுவை சிகிச்சை செய்து நீக்கம்!
pixabay

21 நாள்கள் ஆன பின், மருத்துவமனையில் அந்தக் குழந்தை அனுமதிக்கப்பட்டது. நவம்பர் 1-ம் தேதி அறுவைசிகிச்சை செய்து கட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், அறுவைசிகிச்சையில் குழந்தையின் வயிற்றில் இருந்தது கட்டி இல்லை. 8 கருக்கள் என்று தெரியவந்தது. 

மருத்துவர்கள் அதை ஒன்றன்பின் ஒன்றாக அகற்றியுள்ளனர். அறுவைசிகிச்சை முடிந்து குழந்தை தற்போது நலம் பெற்று வருகிறது. 

இந்நிலையில், அறுவைசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் இம்ரான் கூறுகையில், ``இது ஓர் அரிய வகை அசாதாரண வளர்ச்சி. குழந்தையின் வயிற்றில் மற்றொரு கரு உருவாவதற்கு Fetus-in-Fetu (FIF) என்று பெயர். அறுவைசிகிச்சையில் குழந்தையின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட கருக்கள் மூன்று சென்டிமீட்டர் முதல் ஐந்து சென்டிமீட்டர் வரை இருந்தன. 

பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்த 8 கருக்கள்... அறுவை சிகிச்சை செய்து நீக்கம்!
pixabay

இதுவரை வெளிவந்த மருத்துவ ஆவணங்கள் மற்றும் பத்திரிகை செய்திகளின்படி, குழந்தையின் வயிற்றுக்குள் ஒரேயொரு கரு உருவானதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எட்டு கருக்கள் வரை உருவான பதிவுகள் இதுவரை எங்கும் வந்ததில்லை. இதுவே முதல்முறை. இந்த பாதிப்பு ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும்’’ என்று கூறியுள்ளார்.