Published:Updated:

இந்தியக் கொரோனா நோயாளிகளில் 80% பேர் அறிகுறிகளற்ற ஏசிம்ப்டமடிக்... ஏன், என்ன, எப்படி? #VikatanExplainer

ஏசிம்ப்டமடிக்
ஏசிம்ப்டமடிக்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் ஏசிம்ப்டமடிக். மற்ற 20% பேரில் 15% பேர் கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகளுடன் உள்ளனர். மீதமுள்ள 5% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளனர்.

'கொரோனா வைரஸ் பரவல் இந்த மாதத்துடன் முடிந்துவிடுமா, இல்லை அடுத்த மாதமும் தொடருமா..?' என்ற பயம் கலந்த சந்தேகத்துடனே நம் அனைவரின் பொழுதும் விடிந்து முடிந்துகொண்டிருக்கிறது.

Corona
Corona
pixabay

ஒவ்வொருநாளும் அதிகரித்துக்கொண்டே செல்லும் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கையும், அது பற்றிய புதுப்புது செய்திகளும் 'கொரோனா பயத்தின் உச்சத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. இவ்வேளையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ICMR) சமீபத்தில் வெளியிட்ட ஒரு தகவல் மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியான மருத்துவர் ராமன் ஆர் கங்காகேதர், என்.டி.டி.வி-க்கு அளித்த விளக்கத்தில், "இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்குக் கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஏசிம்ப்டமடிக் (Asymptomatic) நிலையில் இருக்கிறார்கள். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம்" என்று கூறியிருக்கிறார்.

 corona
corona

ஏசிம்ப்டமடிக்(Asymptomatic) என்பது ஒருவர் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு அந்த நோய்க்கு உரிய எந்த அறிகுறிகளும் தென்படாத நிலை. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஏசிம்ப்டமடிக்காக இருக்கும்போது அவருக்குக் காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற எந்த அறிகுறிகளும் இருக்காது.

ஆனால் அதே நேரத்தில் அவரின் வழியே மற்றவர்களுக்குத் தொற்று பரவ நிறைய வாய்ப்பிருக்கிறது. தற்போது ICMR வெளியிட்டுள்ள தகவலில், 'இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் ஏசிம்ப்டமடிக். மற்ற 20% பேரில் 15% பேர் கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகளுடன் உள்ளனர். மீதமுள்ள 5% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.

Corona
Corona

அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிபவர்களைக் கண்டுபிடித்துத் தனிமைப்படுத்தி அவர் மூலம் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்துவது நடைமுறை. ஆனால் ஒருவருக்குக் கொரோனாவுக்கான அறிகுறிகளே வெளிப்படாத நிலையில் அவருக்குத் தொற்று இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே சவாலான விஷயம். பிறகு எப்படி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி நாம் பழையபடி வழக்கமான வாழ்க்கை முறையை மேற்கொள்வது?

இந்தியாவில் 80% பேருக்கு இருக்கும் ஏசிம்ப்டமடிக் பற்றிய முழுமையான விளக்கத்தையும், அவர்களைக் கண்டறிந்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஏதாவது வழிகள் உள்ளனவா என்றும் பொது மருத்துவர் பாலசுப்ரமணியனிடம் கேட்டோம்.

பொது மருத்துவர் பாலசுப்ரமணியன்
பொது மருத்துவர் பாலசுப்ரமணியன்

"கொரோனா நோய்த் தொற்றில் இந்தியாவில் 80% பேர் ஏசிம்ப்டமடிக்காக இருக்கிறார்கள் என்று ICMR கூறியுள்ள தகவல் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 'ஏசிம்ப்டமடிக்' என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்பு 'சிம்ப்டமடிக்'(Symptomatic) என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

'சிம்ப்டமடிக்' என்பது ஒரு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அந்த நோய்க்கான அறிகுறிகள்(Symptoms) வெளிப்படையாகத் தெரியும் நிலை. ஆனால் இந்த அறிகுறிகள் அந்த நபர் நோய்க்கு ஆளான சில நாள்கள் கழித்தே தெரியவரும். ஒரு கல் நம் நெற்றியில் பட்டு அடிபடும்போது உடனடியாக வீக்கம், வலி எல்லாம் நமக்கு ஏற்படும்.

Symptoms
Symptoms

ஆனால் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களில் இது மாறுபடும். ஒரு நோய்க் கிருமி நம் உடலில் சென்று நோயை ஏற்படுத்தும்போது அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த சில நாள்கள் எடுத்துக்கொள்ளும். இது நோய்க் கிருமியின் இன்குபேஷன் காலம்(Incubation period) எனப்படும். இன்குபேஷன் காலம் என்பது நம் உடலுக்குள் நுழையும் நுண்ணுயிரி நம் உடலில் உள்ள செல்களை அழித்து அது பல்கிப் பெருகிட எடுத்துக்கொள்ளும் காலம்.

பயங்கரவாதிகளுக்கு `கொரோனா'... பாகிஸ்தானின் சதித் திட்டம்! -ஜம்மு-காஷ்மீர் டிஜிபி அதிர்ச்சி

தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் முழுமையான இன்குபேஷன் காலம் 14 நாள்கள். ஆனால் வைரஸ் நம் உடலுக்குள் சென்ற 2-5 நாள்களிலேயே அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிடும். காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி, உடல் சோர்வு, உச்சபட்சமாக மூச்சுத்திணறல்... இவையே கொரோனாவின் அறிகுறிகள் என்று நாம் அனைவரும் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இவற்றுடன் சேர்ந்து வாசனைகளை உணர முடியாத நிலை, 5 அல்லது 6-ம் நாள்களில் வயிற்றுப்போக்கு, இதய தசைகள் பலவீனமடைவது, நரம்பு பாதிப்பு போன்ற சில அறிகுறிகளும் தென்படுகின்றன.

அறிகுறி
அறிகுறி

எனவே கொரோனா தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு டெஸ்ட்கள் செய்யப்பட்டு மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் சைன்ஸ் (Signs) மற்றும் நோயாளிகள் கூறும் அறிகுறிகளை(Symptoms) வைத்தே அவருக்கு உள்ள நோய் இன்னதென்று கண்டறியப்படுகிறது. அதாவது அறிகுறிகள்(Symptoms) என்பவை, 'எனக்குக் காய்ச்சல் உள்ளது, தலை வலிக்கிறது, மயக்கமாக இருக்கிறது, படப்படப்பாக வருகிறது' என்று வாய் வழியே நோயாளிகள் கூறும் பிரச்னைகள்.

சைன்ஸ்(Signs) என்பவை உண்மையிலேயே நோயாளிக்குக் காய்ச்சல் இருக்கிறதா, அவரின் நாடித் துடிப்பு அதிகமாக இருக்கிறதா என்று மருத்துவர்கள் டெஸ்ட் செய்து அறியும் முறை. இந்த இரண்டு முறைகள்தான் ஒருவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை அறிய உதவும் அடிப்படை வழி. ஆனால் இது அறிகுறிகளை வெளிப்படுத்தும் 'சிம்ப்டமடிக்' முறையில் மட்டுமே சாத்தியம்.

அறிகுறி
அறிகுறி

இதுவே, நோய்க்கான எந்தவோர் அறிகுறியையும் வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் நிலையில் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாது. எனவே இவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவே தோன்றும். ஆனால் இவர்கள் உடலில் வீரியத்துடன் இருக்கும் வைரஸ் இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவி நோய்த் தொற்றை ஏற்படுத்தலாம்.

‘அறிகுறி இல்லை; குணமடைந்த 70 நாள்களுக்குப் பின் பாசிட்டிவ்!’ -கொரோனா வைரஸால் குழம்பும் சீனா!

நாம் ஏற்கெனவே சொன்ன கொரோனா வைரஸின் முழுமையான இன்குபேஷன் காலமான 14 நாள்கள்வரை பெரும்பாலானோர் ஏசிம்ப்டமடிக்காகவே இருப்பார்கள். சிலருக்கு மட்டுமே நோய்க் கிருமி உடலுக்குள் சென்ற 5 நாள்களில் அறிகுறிகள் தென்படும். பெரும்பாலானோர்களுக்கு 14 நாள்கள் கழித்தே அறிகுறிகள் முழுமையாகத் தென்படும். இதில் இளைஞர்கள், நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளவர்களுக்கு அறிகுறி லேசாக வெளிப்படும் அல்லது அறிகுறி இல்லாத ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பார்கள். ஆனால் வயதானவர்கள், குழந்தைகள் போன்ற நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.

 Rapid Test
Rapid Test

அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும் நபர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றை டெஸ்டுகள் மூலம் எளிதாகக் கண்டறிந்து அவரைத் தனிமைப்படுத்தி அவர் மூலம் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படுவதைக் கட்டுப்பட்டுத்திவிடலாம். அறிகுறிகள் எதுவும் தென்படாத ஏசிம்ப்டமடிக்கில் இது சாத்தியமில்லை. கொரோனாவைப் பொறுத்தவரையில் இந்தியாவில் 80% பேர் ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பதால் கிட்டத்தட்ட நாம் கம்யூனிட்டி ஸ்பிரெட்டுக்குள்(Community spread) சென்றுவிட்டோம் என்றே சொல்லலாம்."

"இதற்குத் தீர்வுதான் என்ன?"

Corona test
Corona test

"இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் செய்தால் ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களையும் கண்டறியலாம். ஆனால் நம்மிடம் உள்ள மருத்துவ வசதிகளில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த அனைவருக்கும் சரியான முறையில் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டிருந்தால் நாம் இந்த நிலைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த வாய்ப்பை நாம் தவற விட்டுவிட்டோம்.

`கேங் மோதல்; ஒரே குழியில் புதைக்கப்பட்ட 3 பேர் ’ - 10 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கொள்ளையர்கள்

எனவே இப்போது கொரோனா பரவலைத் தடுக்க நம்மிடம் உள்ள வழிகள், சமூக இடைவெளியை, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே!

கொரோனா பரவலில் நாம் சென்று கொண்டிருக்கும் மோசமான கட்டத்தை நினைத்து ஒவ்வொருவரும் கட்டாயமாக இவற்றைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்" என்றார் மருத்துவர் பாலசுப்ரமணியன்.

Social Distance
Social Distance

ஆக, கொரோனா பற்றிய அதிர்ச்சிகர செய்திகளைப் பற்றி அச்சப்படாமல் உண்மை நிலையை மனதில் கொண்டு அதிலிருந்து மீண்டுவர நம்மிடம் உள்ள வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி கொரோனாவிலிருந்து மீண்டு எழுவோம்! வழக்கமான வாழ்க்கைமுறை விரைவில் நம் வசமாகும்!

அடுத்த கட்டுரைக்கு