Published:Updated:

பால் டு சிலிண்டர்... வீடு தேடி வரும் கொரோனா... தவிர்க்க 9 வழிகள்! StayInsideStaySafe

corona
corona

வாட்டர் கேனில் அடைப்பட்டிருக்கும் நீர் பல கைகளைத் தாண்டி வந்திருக்கும் என்பதால், கொரோனா பிரச்னை நாட்டை விட்டுச் செல்லும் வரைக்கும் கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரையே குடித்து வாருங்கள்.

கொரோனாவை நாட்டை விட்டே விரட்டியடிப்பதற்காக அலுவலக வேலைகளை வீட்டுக்குள் இருந்தபடியே செய்ய ஆரம்பித்து விட்டோம். ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் இருப்பதற்காக நம்மை நாமே தனிமைபடுத்திக்கொண்டோம். ஆனால், தினமும் நம் வீடு தேடி வருகிற பால் பாக்கெட், பேப்பர், வாட்டர் கேன், காய்கறிகள், லாண்டரி துணி, கொரியர் ஆகிய அத்தியாவசியத் தேவைகளின் வழியாக அடுத்தவர்கள் நம் வீட்டுக்குள் வந்துபோகவே செய்கிறார்கள். தவிர, மேலே சொன்ன பொருள்கள் எல்லாம் பல மனிதர்கள், பல கைகளைக் கடந்துதான் நம்மிடம் வருகின்றன. இந்த வழிகளின் மூலமாக நம் வீட்டுக்குள் கொரோனா நுழையாமல் இருக்க, நாம் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பொது மருத்துவர்கள் அர்ஷத் அகீல் மற்றும் ராஜேஷ் சொல்கிறார்கள்.

milk pocket
milk pocket

பால் பாக்கெட்டும் ரன்னிங் வாட்டரும்...

நம் வேலைகளைச் செய்வதற்கு நாம் அதிகமாகப் பயன்படுத்துவது வலது கரத்தைத்தான். அதனால், ஞாபகமாக இடது கரத்தால் பால் பாக்கெட்டை எடுத்து, ரன்னிங் வாட்டரின் கீழே ஒரு நிமிடம் வையுங்கள். பிறகு வலக்கரத்தால் பால் பாக்கெட்டை எடுத்து பயன்படுத்த ஆரம்பியுங்கள். குறிப்பாக, மற்ற நாள்களைவிட தற்போது பாலை சில நிமிடங்கள் கூடவே கொதிக்க வைத்துப் பயன்படுத்துவது நல்லது.

வாட்டர் கேனும் தூக்கும் உபகரணமும்...

பால் பாக்கெட் போடுபவர்கள்கூட வீட்டு வாசலுடன் நின்று விடுவார்கள். வாட்டர் கேன் போடுபவர்களோ வீட்டு ஹால் வரைக்கும் சில வீடுகளில் கிச்சன் வரைக்கும்கூட செல்கிறார்கள். இந்தப் பழக்கத்தை இன்னும் சில வாரங்களுக்கு ஃபாலோ செய்யாதீர்கள். வாட்டர் கேனை வாசலிலேயே வைத்துவிட்டுச் செல்லச் சொல்லுங்கள். முக்கியமாக கைகளால் தொட்டுக் கொண்டு வராமல் அதற்கென இருக்கிற உபகரணத்தைப் பயன்படுத்தி வாட்டர் கேனை எடுத்து வரச் சொல்லுங்கள். வாட்டர் கேனில் அடைப்பட்டிருக்கும் நீர் பல கைகளைத் தாண்டி வந்திருக்கும் என்பதால், கொரோனா பிரச்னை நாட்டை விட்டுச் செல்லும் வரைக்கும் கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரையே குடித்து வாருங்கள்.

corona
corona

வெயிலில் வைத்துப் படியுங்கள்!

பேப்பர் மற்றும் புத்தகங்களைச் சில நிமிடங்கள் வெயிலில் வைத்து, அதன் பிறகு படிக்கலாம். இன்னும் சில வாரங்களுக்கு உங்கள் வீட்டுக்கு வருகிற பேப்பரைப் படித்துவிட்டு வீட்டுக்கு வெளியிலேயே வைத்து விடுங்கள். வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். கொரியர்களுக்கும் இதே வழிமுறைதான். வீட்டுக்குள் வைப்பதென்றால், குழந்தைகளின் கைகளுக்கு எட்டாமல் தனியிடத்தில் வையுங்கள்.

உப்பு கலந்த நீரும் காய்கறிகளும்...

காய்கறிகளை 10 நிமிடங்கள் கல் உப்பு கலந்த தண்ணீரில் போட்டு ஊறவிட்டு, பிறகு ரன்னிங் வாட்டரில் கழுவி விட்டு சமையுங்கள். கவனம், கொரோனா பிரச்னை தீரும்வரை பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது, அரை வேக்காடாகச் சாப்பிடுவதெல்லாம் வேண்டவே வேண்டாம். நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருவதைப்போலவே நன்கு வேக வைத்துச் சாப்பிடுங்கள்.

vegeables
vegeables

லாண்டரி துணிகளும் தனி ஷெல்ஃபும்...

நியூஸ் பேப்பரை சூரிய ஒளியில் வைப்பதைப் போலவே லாண்டரி துணிகளையும் சூரிய ஒளியில் வைத்துவிட்டு அணிந்துகொள்ளலாம். ஆனால், இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த லாண்டரி துணிகளை மற்ற துணிகள் இருக்கிற பீரோவில் சேர்த்து வைக்காமல், தனியாக ஷெல்ஃபில் வைத்துப் பயன்படுத்துங்கள். முடிந்தால் வீட்டிலேயே சலவை மற்றும் இஸ்திரி வேலைகளைச் செய்துகொள்வது பாதுகாப்பானது.

இவர்களை மாஸ்க் போடச் சொல்லுங்கள்!

காஸ் சிலிண்டர் போட வருபவர்களை வீட்டுக்கு வெளியிலேயே சிலிண்டரை வைக்கச் சொல்லலாம். உங்களால் சிலிண்டர் வெயிட்டைத் தூக்க முடியாது என்று சிலிண்டர் போட வருபவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கிறீர்கள் என்றால், அவர்களை முகத்துக்கு மாஸ்க் போடச் சொல்லுங்கள். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். சிலிண்டரின் சீலைக் கழற்றி அவர்களே கேஸ் வெளியே வருவதற்கான இணைப்பை மாட்டிவிட்டுச் செல்கிறார்கள் என்றால், ஆன், ஆஃப் செய்கிற திருகை ஒரு நாள் முழுக்க வெறும் கைகளால் தொடாமல், கிளவுஸ் அல்லது பிளாஸ்டிக் கவர் அணிந்து தொடுவதே பாதுகாப்பு.

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

சலூனும் பார்லரும்...

தற்போது ஆபீஸ் மீட்டிங்குகள் வீடியோ வழியாக நடந்து வருவதால், ஆபீஸ் எதிக்ஸ்படி அதற்குரிய லுக்குடன் இருப்பதும் அவசியமாகிறது. அதனால், மற்ற நாள்களைப் போலவே க்ளீன் ஷேவ், நீட் லுக் என்று இருக்க வேண்டும். அதே நேரம், இதற்காக சலூனுக்கும் பார்லருக்கும் செல்வதை சில நாள்களுக்குத் தவிர்த்துவிட்டு நம் கையே நமக்கு உதவி என்று இறங்கி விடலாம். செல்ஃப் ஷேவிங், செல்ஃப் அழகு பராமரிப்பு என்று செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். நியூஸ் ரீடர்ஸ் போல தங்கள் வேலைக்கு மேக்கப் அவசியம் என்ற நிலையில் இருப்பவர்கள், மேக்கப் செய்துவிடுபவர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது அவசியம். தவிர, மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் ஹேர் டிரெஸ்ஸர்களை மாஸ்க் அணியும்படி வற்புறுத்துவதும் நல்லதே...

அழகு நிலையம் செல்லலாமா?
அழகு நிலையம் செல்லலாமா?
பேப்பர் மற்றும் புத்தகங்களைச் சில நிமிடங்கள் வெயிலில் வைத்து, அதன் பிறகு படிக்கலாம். இன்னும் சில வாரங்களுக்கு உங்கள் வீட்டுக்கு வருகிற பேப்பரைப் படித்துவிட்டு வீட்டுக்கு வெளியிலேயே வைத்து விடுங்கள். வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள்.
`இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க!' - கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona

ஆன்லைன் ஷாப்பிங் ஓகே வா?

மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருகிற அதே ரிஸ்க், ஆன்லைனில் நீங்கள் வாங்கிய பொருள்களை டோர் டெலிவரி செய்யும்போதும் இருக்கிறது. வாங்கியது காய்கறிகள் என்றால் உப்புத் தண்ணீரில் ஊறப்போட்டு சமையுங்கள். பேக் செய்யப்பட்ட பொருள்கள் என்றால், அவற்றை ரன்னிங் வாட்டரில் அலசிவிட்டுப் பயன்படுத்துங்கள்.

பொது மருத்துவர் அர்ஷத் அகில் மற்றும் ராஜேஷ்
பொது மருத்துவர் அர்ஷத் அகில் மற்றும் ராஜேஷ்
காய்கறிகளை 10 நிமிடங்கள் கல் உப்பு கலந்தத் தண்ணீரில் போட்டு ஊறவிட்டு, பிறகு ரன்னிங் வாட்டரில் கழுவி விட்டு சமையுங்கள்.

பக்கத்துவீட்டுக் குழந்தைகளை அனுமதிக்கலாமா?

குழந்தைகள் வழியாக கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால், இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவரவர் குழந்தைகள் அவரவர் வீடுகளுக்குள் இருப்பதே பாதுகாப்பு.

கொரோனா ஏற்பாடுகள்... இந்தியாவில் இந்த 5 மாநிலங்களின் நிலை என்ன? #Corona
அடுத்த கட்டுரைக்கு