Published:Updated:

`கலெக்டருக்கு நேரில் பாராட்டு; சந்திப்பு சர்ச்சை!' - ராதாரவியை தனிமைப்படுத்திய மாவட்ட நிர்வாகம்

நடிகர் ராதாரவி
நடிகர் ராதாரவி

சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்த நடிகர் ராதாரவி வீட்டுத் தனிமையில் இருக்காமல் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஊட்டி அலுவலகம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போதுவரை 14 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, 9 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகர் ராதாரவி பங்களா
நடிகர் ராதாரவி பங்களா

நீலகிரி மாவட்டத்திலிருந்து இ-பாஸ் பெற்று வெளி மாவட்டங்கள் அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்கள், இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு வந்தவர்கள் என சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் 14 நாள்கள் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வரக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

இந்தநிலையில், நடிகர் ராதாரவி தனது குடும்பத்தினருடன் கடந்த 10-ம் தேதி சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளார். கோத்தகிரி கன்னேரிமுக்கு அருகேயுள்ள எம்.கைகாட்டியில் உள்ள தனக்குச் சொந்தமான பங்களாவில் தங்கியுள்ளார்.

நடிகர் ராதாரவி பங்களா
நடிகர் ராதாரவி பங்களா

நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகைதந்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சிறப்பான முறையில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்கிறார், என பாராட்டிச் சென்றுள்ளார்.

இதன்பின்னர், சுகாதாரத்துறையினர் உடனடியாக ராதாரவியின் பங்களாவுக்குச் சென்று 14 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் ஸ்டிக்கரும் ஒட்டியுள்ளனர்.

நடிகர் ராதாரவி பங்களா
நடிகர் ராதாரவி பங்களா

சென்னையில் கொரோனா தொற்று பரவல் மிகவும் அதிகமாக உள்ள நிலையில், நடிகர் ராதாரவி சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு வந்துள்ளதால், அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

``கொடுத்த `கலைஞர்' பட்டம் இனிக்குது; எம்.ஆர்.ராதா பெயர் கசக்குதா?!" - ராதாரவி காட்டம்

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் ``இ-பாஸ் பெற்று நடிகர் ராதாரவி மற்றும் அவரது உறவினர்கள் கோத்தகிரியில் உள்ள அவர்களது இல்லத்தில் தங்கியுள்ளனர். அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்கள் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர்" என்றனர்.

நடிகர் ராதாரவி பங்களா
நடிகர் ராதாரவி பங்களா

சென்னையிலிருந்து கோத்தகிரி வந்த நடிகர் ராதாரவி வீட்டுத் தனிமையில் இல்லாமல், ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு