Published:Updated:

இரண்டு மாதக் குழந்தையுடன் சமீரா ரெட்டி டிரெக்கிங்! - டாக்டர் சொல்வது என்ன?

Sameera Reddy
Sameera Reddy ( Instagram )

கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான 'முல்லையாநாகிரிக்கு' டிரெக்கிங் சென்று வந்துள்ளார் சமீரா. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், சமீராவின் இந்த சாகசத்துக்குப் பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

`வாரணம் ஆயிரம்' புகழ் சமீரா ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கம், சாகசப் பதிவுகளால் நிறைந்தது. இரண்டாவது பிரசவத்தின்போது தண்ணீருக்குள் போட்டோஷூட் எடுத்தவர். இப்போது இரண்டு மாதக் குழந்தையுடன் டிரெக்கிங் செய்து ஷாக் கொடுத்துள்ளார்.

Sameera Reddy
Sameera Reddy
Instagram

`நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' பாடலில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சமீரா ரெட்டி, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இந்த வாரணம் ஆயிரம் `மேக்னா'வை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்கவில்லை.

நிறைமாத வயிறு, பிகினி டிரெஸ், தண்ணீருக்குள் போட்டோஷூட்..! - தாய்மையைக் கொண்டாடும் சமீரா

2014-ம் ஆண்டு தொழிலதிபர் அக்‌ஷய் வர்தேவை திருமணம் முடித்த சமீராவுக்கு, 5 வயதில் மகன் உள்ளார். இந்த ஆண்டு, மீண்டும் கருவுற்றிருந்த சமீரா, பிரசவக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். தண்ணீருக்குள் போட்டோஷூட், பிரசவத்துக்குப் பிறகான எடைக்குறைப்பு எனப் பெண்களை இன்ஸ்பயர் செய்துவந்த சமீரா, இப்போது கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான 'முல்லையாநாகிரிக்கு' டிரெக்கிங் சென்று வந்துள்ளார். குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், சமீராவின் இந்த சாகசத்துக்குப் பாராட்டுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்துள்ளன.

தரையிலிருந்து 6300 அடி உயரத்தில் இருக்கும் இந்தச் சிகரத்துக்குத் தனது இரண்டு மாதக் குழந்தையுடன் டிரெக்கிங் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சமீரா ரெட்டி. அவரது வலிமையைப் பாராட்டி கமென்ட்டுகள் குவிந்தாலும், 'இரண்டு மாதப் பச்சிளம் குழந்தையுடன் இதுபோன்ற சாகசம் தேவைதானா?' என்ற கருத்தையும் நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர்.

அதற்கான பதிலைத் தனது கேப்ஷனில் தெரிவித்திருக்கும் சமீரா, ``பிரசவத்துக்குப் பிறகு அம்மாக்களின் மனநிலை எளிதில் பாதிக்கப்படும். உற்சாகம் குறைந்து சோர்வாகக் காணப்படுவார்கள். ஆனால், சோர்வடைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதைத் தவிர்க்கவே, எனக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட்டு வருகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

Sameera Reddy
Sameera Reddy
Instagram

பொதுவாகப் பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடல் சோர்வடைவது வழக்கம். 'ஹோம் சிக்' பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கையில், அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை நம்மிடம் பகிர்கிறார் மகப்பேறு மருத்துவர் விஷ்னு வந்தனா.

``பிரசவத்துக்குப் பிறகு தேவையான அளவு தூக்கம், ஓய்வு அவசியம். மிக முக்கியமாக ஆரோக்கியமான உணவுகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும். சமீரா ரெட்டியின் சாகசத்தைப் பொறுத்தவரை தவறேதும் இல்லை. அவரது உடல் ஒத்துழைத்தால், மனதில் திடம் இருந்தால், இதுபோன்ற டிரெக்கிங் செல்வதினால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

Vikatan

பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தத்தைப் போக்க, தனக்குப் பிடித்த செயல்களைச் செய்வது நல்லதுதானே தவிர பிரச்னை ஏதும் வராது. ரிஸ்க் ஏற்படுத்தக் கூடிய அசைவுகள், எடை தூக்குதல் போன்றவற்றை மட்டும் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு