Published:Updated:

பிராண்டு முதல் 'செக்கு' வரை... எண்ணெயில் கலப்பவை என்னென்ன? - 'ஷாக்' ரிப்போர்ட்!

பாமாயில் என்பது மக்கள் உட்கொள்ளக்கூடாத எண்ணெய் என்று யாராவது சொல்வார்களா? அரசே பொது விநியோகத் திட்டத்தில் அதைத்தானே விற்பனை செய்கிறது

oil
oil

கலப்படம் இல்லாத உணவுப் பொருள்களே இல்லை என்பதுதான் இன்றைய நிலை. குறிப்பாக, எண்ணெய். சமீபத்தில் மதுரை கீழமாசிவீதி மார்க்கெட்டிலுள்ள 23 கடைகளில் நல்லெண்ணெய், கடலெண்ணெய் மாதிரிகளை சோதனைக்கு எடுத்தனர் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள். அந்த 63 மாதிரிகளை சென்னையிலுள்ள அரசு ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ததில், 61-ல் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 23 கடைகளில் ஒரேயொரு கடைக்காரர் மட்டுமே கலப்படம் இல்லாத எண்ணெயை விற்றுள்ளார். இதோடு, சமீபத்தில் கோவையில் கலப்பட எண்ணெய் தயாரிக்கும் ஆலையைக் கண்டு பிடித்தார்கள். இப்படிச் செய்திகளில் வந்த மதுரை, கோவையில் மட்டுமல்ல... தமிழகம் முழுக்கவே கலப்பட எண்ணெய்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2m3wzly

"தமிழகத்தில் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் எண்ணெய் முதல் லோக்கல் எண்ணெய்வரை பலவற்றிலும் கலப்படம் உள்ளது. அண்மைக்காலமாகப் பிரபலமாகிவரும் செக்கு எண்ணெயிலும் கலப்படம் செய்கிறார்கள்"என்று அதிர்ச்சித் தகவல் பகிர்கிறார் உணவுப்பொருள் விற்பனை பிரதிநிதி ஒருவர்.

oil
oil

சமீபத்தில் ஆய்வு நடத்தி கலப்படத்தைக் கண்டுபிடித்த மதுரை உணவுப் பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரத்திடம் பேசினோம். "எண்ணெய்க் கடைகளில் சோதனை செய்து மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியதில் 98% அளவுக்குக் கலப்பட எண்ணெயையே விற்பனை செய்கிறார்கள் என்பது தெரியவந்தது. பாமாயில் லிட்டர் 25 ரூபாய். அதை கடலை எண்ணெய், நல்லெண்ணெயுடன் கலந்து, மூன்று, நான்கு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். பாக்கெட்டுகளில் அடைத்துவரும் பிரபல நிறுவனங்களின் எண்ணெய்களும் அப்படித்தான் உள்ளன. இது நம்பிக்கைத் துரோகம். காலம்காலமாக தங்கள் கடையில் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களைக் கூடுதல் லாபத்துக்காக ஏமாற்றுகிறார்கள். பெரு நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், மரச்செக்கு எண்ணெய் என்று விளம்பரப்படுத்துபவர்கள் எனப் பலரும் இதில் விதிவிலக்கல்ல. நீங்கள் வாங்கும் சமையல் எண்ணெயின் தரம் பற்றி அறிவதுடன், எண்ணெய் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களையும் கவனிக்க வேண்டும்"என்று அறிவுறுத்தினார்.

மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுவதோ வேறுவிதமாக இருக்கிறது. "சமையல் எண்ணெயை அனைத்துப் பொருளாதார நிலையில் உள்ள மக்களும் வாங்கும் வகையில், குறிப்பிட்ட எண்ணெயுடன் பாமாயில் அல்லது சோயா எண்ணெய் கலக்கப்பட்டு, அதற்கேற்ற விலையில் விற்கப்படுகிறது. பாமாயில் என்பது மக்கள் உட்கொள்ளக்கூடாத எண்ணெய் என்று யாராவது சொல்வார்களா? அரசே பொது விநியோகத் திட்டத்தில் அதைத்தானே விற்பனை செய்கிறது. 'அக்மார்க்' லைசென்ஸ் வாங்கிய சில எண்ணெய்த் தயாரிப்பாளர்கள், குறிப்பிட்ட அளவை மீறி கட்டுப்பாடில்லாமல் எண்ணெய் வகையுடன் பாமாயிலைக் கலப்பதைத்தான் இவர்கள் ஆய்வுசெய்து கண்டறிந்திருக்கிறார்கள். எனவே 'கலப்பட எண்ணெயைப் பிடித்தோம்' என்று அதிகாரிகள் சொல்வது ஒட்டுமொத்த எண்ணெய் வியாபாரத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடும்" என்றார்.

oil
oil

"எண்ணெயின் தரத்தைச் சோதிக்க ஒரு வழியைப் பின்பற்றலாம். நார்மல் டெம்ப்ரேச்சரில் எண்ணெய் உறையக் கூடாது. அப்படி உறைகிற எண்ணெய் உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும். சமையலுக்கு ஒரே எண்ணெயைப் பயன்படுத்தாமல், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும். அதே நேரம், எண்ணெயை அளவோடு உபயோகிக்க வேண்டியதும் மிக அவசியம்" என்றார் மருத்துவர் பி.கிருஷ்ணமூர்த்தி.

> சமையல் எண்ணெய் கலப்படம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் பின்னணி, சமையல் எண்ணெயில் கலப்பதாகச் சொல்லப்படும் பாமாயில், சோயா எண்ணெயின் தன்மை என்ன? அவற்றால் ஆரோக்கியத்துக்குக் கேடு ஏற்படுமா? - இவற்றை முழுமையாகச் சொல்லும் அவள் விகடன் கவர் ஸ்டோரியை வாசிக்க > என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்? - தேவை அதிக கவனம் https://www.vikatan.com/news/healthy/how-to-buy-quality-cooking-oil-for-your-home

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/