Published:Updated:

`உயிரிழப்பிலிருந்து கோவிஷீல்டு 98% பாதுகாப்பு அளிக்கும்!' -ராணுவக் குழுவின் புது ஆய்வு கூறுவது என்ன?

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி

இரண்டாம் அலையின் வீரியம் அதிகரித்ததில் முக்கியப் பங்கு வகித்ததது உருமாறிய டெல்டா வேரியன்ட் வைரஸ். இந்த வேரியன்ட் மூலமாக உயிரிழப்புகள் நிகழ்வதைக் கட்டுப்படுத்தியதில் கோவிஷீல்டு தடுப்பூசி திறம்படச் செயல்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி கோவிட் நோய் தொற்றுக்கு எதிராக 93 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதாகவும், இரண்டாம் அலையில் 98 சதவிகிதம் உயிரிழப்பை இது தடுத்துள்ளதாகவும் சமீபத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இரண்டாம் அலையின் வீரியம் அதிகரித்ததில் முக்கியப் பங்கு வகித்ததது உருமாறிய டெல்டா வேரியன்ட் வைரஸ். இந்த வேரியன்ட் மூலமாக உயிரிழப்புகள் நிகழ்வதைக் கட்டுப்படுத்தியதில் கோவிஷீல்டு தடுப்பூசி திறம்படச் செயல்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக ஆன்டிபாடி உருவாகுமா? - புதிய ஆய்வு சொல்வது என்ன?

ராணுவப் படையின் மருத்துவக் கல்லூரியைச் (Armed Forces Medical College) சேர்ந்த ஒரு மருத்துவக் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ராணுவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட 15 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசிதான் வழங்கப்பட்டது.

நிதி ஆயோக் ஆரோக்கியம் தொடர்பான பிரிவின் உறுப்பினரான, மருத்துவர்.வி.கே.பால், ``கோவிஷீல்டு எடுத்துக்கொண்ட மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலிருந்து அவர்களுக்கு கோவிட் தொற்றுநோய்க்கு எதிராக 93 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பது தெரியவந்துள்ளது.

நாட்டில் டெல்டா வேரியன்ட் பரவி கொரோனா தொற்றின் வீரியம் தீவிரமாகி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இருந்தும், இதை எடுத்துக்கொண்டவர்களுக்கு கோவிட் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு ஆபத்துகளிலிருந்து 98 சதவிகிதம் பாதுகாப்பு வழங்கியுள்ளது" என்று தெரிவித்ததோடு, ``எந்தத் தடுப்பூசியும் கோவிட் பாதிப்பிலிருந்து முழு பாதுகாப்பு தரும் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், தொற்றுநோயின் பாதிப்பு தீவிரமடைவதை தடுப்பூசி தடுக்கிறது" என்றும் கூறியுள்ளார்.

Corona Vaccination
Corona Vaccination
கோவிஷீல்டு இடைவெளி அதிகரித்தது பற்றாக்குறையால்தானா? - சர்ச்சைக்கு மத்திய அரசின் பதில் என்ன?

அதோடு, இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் டெல்டா வேரியன்ட்டுகளுக்கு எதிராகவும் செயலாற்றுவதாக மேற்கோள் காட்டியவர், டெல்டா ப்ளஸ் வேரியன்ட் மீது தடுப்பூசிகளின் செயல்திறன் எப்படியிருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு