ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கொரோனாவுக்குப் பிந்தைய நாள்கள்...

ஆரோக்கியம் மீட்க சித்த மருத்துவ வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் மீட்க சித்த மருத்துவ வழிகள்!

ஆரோக்கியம் மீட்க சித்த மருத்துவ வழிகள்!

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தாலும், அதன் பிறகு சுமார் ஒரு மாதக் காலம் வரையிலும் அது விளைவித்த தாக்கங்களால் உடல் பிரச்னைகள் மற்றும் சோர்வு இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவேதான் அதன் பிறகு, சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கொரோனாவிலிருந்து மீண்ட பிறகான இந்த உடல் பிரச்னைகள் எதனால் ஏற்படுகிறது, அதைக் கையாள்வது எப்படி... விளக்குகிறார் சித்த மருத்துவரும் மணிப்பால் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருமான அருள் அமுதன்.

அருள் அமுதன்
அருள் அமுதன்

காரணம் என்ன?

‘‘கொரோனா வைரஸ் ஒருவரிட மிருந்து நமக்குத் தொற்றிய பிறகு, 1 - 5 நாள்களில் அது உடலில் பல்கிப் பெருகும். அடுத்து 6 - 11 நாள் களில்தான் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தெரியவரும். அந்த நாள்களில்தான் மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் நோய் எதிர்ப்பு சக்தி செயல் பாட்டுக்கு வருகிறது. அப்போது நோய் எதிர்ப்பு அணுக்கள் தாறு மாறாக இயங்கி, கொரோனா நோய்க் கிருமிகளை மட்டுமல்லாமல் மற்ற ரத்த செல்களையும் பாதிக்கிறது. சிலருக்குக் குறிப்பாக நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்தான் ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா நோய்க்கிருமி நம் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒருபுறம் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி விளைவிக்கும் தாக்கம் இன்னொரு புறம். இவை இரண்டின் காரணமாகத்தான் கொரோனாவி லிருந்து மீண்ட பிறகும் உடல் சோர்வு, பயம், பதற்றம், தலைசுற்றல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு, சிந்தனைத் திறன் குறைவு ஆகிய பிரச்னைகளுக்கு ஆட்பட நேர்கிறது.

உணவு மற்றும் பயிற்சி!

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிறகு, இந்த இரண்டு தாக்கங் களிலிருந்தும் உடலை சீர்படுத்தி பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

நமது உணவுமுறை மற்றும் சில பயிற்சிகள் மூலமே இதைச் செய்ய முடியும். சித்த மருத்துவத்தில் பாதிப்படைந்த உறுப்புகளை பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சையை மேற்கொள்ள, காயகல்பம் என்கிற துறை இருக்கிறது. அதன்படி ஒவ் வொருவரது பாதிப்புக்கும் ஏற்றாற் போலான சிகிச்சை முறைகள் இருக்கின்றன.

கொரோனாவுக்குப் பிந்தைய நாள்கள்...

நரம்புப் பிரச்னைகளுக்கு வல்லாரை!

கொரோனாவுக்குப் பிந்தைய நிலையில் நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்புகள் இருக்கும். அதை சீர்படுத்த வல்லாரைக் கீரைதான் மருந்து. அதை துவை யலாகவும் சட்னியாகவும் செய்து நாளொன்றுக்கு ஒருவேளை சாப்பிட்டுவந்தால் மூளை தொடர்பான பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும். வல்லாரைக் கீரையை பச்சையாய் சாப்பிட்டால் மூன்று இலைகளை மட்டும் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் அது வேறு பல பிரச்னைகளை உண்டாக்கக்கூடும்.

நுரையீரலை சீர்செய்யும் பிராணாயாமம்!

நுரையீரல் தொடர்பான பாதிப்பு களை குணமாக்க திருமூலர் பிராணாயாமம் செய்ய வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு பக்க மூக்கை அடைத்துவிட்டு மற்றொரு பக்க மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து தேக்கி வைத்து, பின் அடைக்கப்பட்ட மூக்கின் வழியாக மூச்சை வெளி யேற்றலாம். இப்படியாக மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

திருமூலர் பிராணாயாமத்தின் சிறப்பம்சமே அதன் அளவு முறைதான். 1:4:2 என்கிற விகிதாச்சாரத்தில் இதை மேற்கொள்ள வேண்டும். மூச்சை உள்ளே இழுப்பதற்கு 10 நொடிகள் என்றால், 40 நொடிகள் அதை தேக்கி வைக்க வேண்டும். பிறகு 20 நொடிகள் அதை வெளியேற்ற வேண்டும். சித்த மருத்துவரை அணுகி பயிற்சி பெற்றும் இதை மேற் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் குறிப்பாக நுரையீரலை அதிகம் தாக்குவதால் இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் நோய் பாதிப்புக்குப் பின்னும் தொடரக்கூடும். அதை சீர்படுத்த, துளசி, கற்பூரவள்ளி, ஆடாதொடை, அதிமதுரம், தூது வளை, நொச்சி ஆகியவற்றில் கசாயம் செய்து குடிக்கலாம். துளசி, கற்பூர வள்ளி, நொச்சி ஆகியவற்றை ஆவி பிடிக்கவும் பயன்படுத்தலாம். தூது வளை லேகியம் மற்றும் திப்பிலி ரசாயனத்தை நாட்டு மருந்துக் கடை களில் வாங்கி உட்கொள்ளலாம்.

எலும்பு வலுப்பெற... முடக்கத்தான்!

எலும்பு மற்றும் தசைகளிலான வலியைப் போக்குவதற்கு வைட்டமின் டி சத்து அத்தியாவசிய மானது. காலையிலும் மாலையிலும் இளவெயிலில் சூரிய ஒளியில் உலவி விட்டு வந்தால் வைட்டமின் டி கிடைக்கப்பெறும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள பால், முட்டை ஆகிய வற்றை உட்கொள்ளலாம். எலும்பை வலுப்படுத்தும் ஒமேகா 3 இருப்பதால் மீன் வகைகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். முடக்கத்தான் கீரையை மாவில் கலந்து தோசை யாகச் சுட்டு சாப்பிடுவதன் மூலம் கை கால் இணைப்புகளில் ஏற் பட்டுள்ள வலி குறையும். அதுவே வலி அதிகமாக இருந்தால் இந்த உணவுகளை உட்கொள்வதோடு சிவப்பு குக்கில் தைலம் அல்லது கற்பூராதி தைலம் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கித் தடவினால் நல்ல பலன் கொடுக்கும்.

கொரோனாவுக்குப் பிந்தைய நாள்கள்...

இதய படபடப்பை தணிக்கும் முசுமுசுக்கை!

சிலருக்கு அவர்களுக்கே கேட்கு மளவு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். அரை மணி நேரம் வரை யிலும்கூட இந்த வேகமான இதயத் துடிப்பு நீடிக்கும். அப்படியான சூழலில் பயப்படத் தேவையில்லை. பயந்தால் மேலும் பிரச்னை. அதுவே தானாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதால் நிதானமாக அதைக் கையாள வேண்டும். அந்த நேரத்தில் மல்லி, சீரகம் ஆகியவற்றை கசாயமாகக் காய்ச்சிக் குடித்தால் இந்தப் படபடப்பு நின்றுவிடும்.

முசுமுசுக்கைக்கீரையில் தோசை செய்து சாப்பிடுவதன் மூலமும், பிராணாயாமம் செய்வதன் மூலமும் இந்த வேகமான இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்தலாம். பிராணாயாமம் செய்யத் தொடங்கிய 100 நொடி களுக்குள் இந்தப் படபடப்பு கட்டுப் படுத்தப்பட்டுவிடும்.

வாதம், பித்தம், கபம் ஆகிய இம்மூன்றையும் தன்னிலைப் படுத்துவதற்காக, குறுமிளகு, மஞ்சள், சோம்பு, சுக்கு, பெருங்காயம், ஏலம், வெந்தயம், பூண்டு இந்த 8 பொருள் களை அரைத்து ரசம் செய்து குடிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள மருந்துகள் மற்றும் பயிற்சிகளை மேற் கொண்டால் ஒவ்வொரு உறுப்பு களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு களையும் குணப்படுத்தி பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்” என்கிறார் அருள் அமுதன்.