Published:Updated:

`90 லிட்டர் தாய்ப்பால்; 250 தாய்மார்கள்!' - அகமதாபாத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

அகமதாபாத்தில் 250 தாய்மார்கள் தங்களுடைய தாய்ப்பாலை குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ருஷினா டாக்டர் மர்ஃபதியா
ருஷினா டாக்டர் மர்ஃபதியா ( timesofindia.com )

ன்பால் பெருக்கெடுப்பது காதல் மட்டுமல்ல; தாய்ப்பாலும் தான். இந்த உலகத்தில் கலப்படமில்லாத ஓர் உணவு தாய்ப்பால் என்பார்கள். அதை, குழந்தைக்கு ஊட்டும் தாய்மார்களோ அன்பு, பாசம் போன்ற உணர்வுகளையும் குழைத்துக்கொடுக்கிறார்கள்.

தாய்ப்பால்
தாய்ப்பால்

புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்குத் தாய்ப்பாலை விட பாதுகாப்பான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வேறு எதுவும் இல்லை. குறை மாதத்தில் பிறந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தைகளுக்கும் குழந்தை பிறந்தவுடன் பலவீனமடையும் தாய்மார்களின் குழந்தைகளுக்கும் போதுமான அளவு தாய்ப்பால் கிடைப்பதில்லை. இதனால் அந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தங்கள் குழந்தைகளின் தேவைக்குப் போக அதிகமாகத் தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலைப் பற்றாக்குறையுள்ள மற்ற குழந்தைகளுக்கு தானம் அளித்து அவர்களைக் காப்பாற்றும் செயல் தற்போது பெருகி வருகிறது.

``இனி பெரியவர்களுக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரைகள்!" - மாநிலப் பொது சுகாதாரத் துறை

இதற்கு எடுத்துக்காட்டாக, அகமதாபாத்தில் 250 தாய்மார்கள் தங்களுடைய தாய்ப்பாலை, தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். எவ்வளவு தெரியுமா... 90 லிட்டர்!

இந்தச் சம்பவம் அனைவரின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருஷினா டாக்டர் மர்ஃபதியா
ருஷினா டாக்டர் மர்ஃபதியா
timesofindia.com

ருஷினா டாக்டர் மர்ஃபதியா என்ற 29 வயதுப் பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தைக்குத் தாயானார். இவர் கடந்த மூன்று மாதங்களில், தனது பாலை நன்கொடையாக வழங்கி ஐ.சி.யு-களில் உயிருக்குப் போராடும் ஐந்து குழந்தைகளைக் காப்பாற்ற உதவியுள்ளார். இந்தக் குழந்தைகளின் தாய்மார்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவர்களால் குழந்தைகளுக்குப் பாலூட்ட முடியவில்லை. எனவே, ருஷினா தானமாக அளித்த தாய்ப்பால் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியது.

``என் மகனுக்கு உணவளிக்கக் கூடியதைவிட அதிக பால் சுரந்ததை உணர்ந்தேன். நோய்வாய்ப்பட்ட அல்லது தேவைப்படும் குழந்தைக்குப் பால் தானம் செய்யலாமா என்று யோசித்தபோது, மருத்துவமனைகள் மூலம் தாய்ப்பால் வங்கியைக் கண்டுபிடித்தார் என் தந்தை. என் மகனுக்குக் கொடுத்த பால் போக அதிகமாகச் சுரக்கும் பாலைத் தானம் செய்து வருகிறேன். மூன்று மாதங்களில் 12 லிட்டர் தானம் செய்துள்ளேன்" என்கிறார் ருஷினா

தாய்ப்பால்
தாய்ப்பால்

மேலும், இந்தத் தாய்ப்பால் வங்கி மூலம் கிட்டத்தட்ட 250 தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலை தானம் செய்து வருகின்றனர். இதுவரை இந்தக் குழு மூலம் 90 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு ருஷினாவே தலைமை ஏற்று நடத்தி வருகிறார். இவர்களின் கருணை மிகுந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.