Published:Updated:

``உன்னை விட நாய்தான் முக்கியம்” பிடிவாதத்தால் மனைவி மகளை இழந்த குடும்பம்..!

நாய் ( சித்தரிப்பு படம் )

திவ்யாவின் கணவர் மற்றும் மாமியார், அவரின் உடல்நலனைவிட, தங்கள் வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மனவேதனை அடைந்தார். அவர் பதிமூன்று வயதே ஆன தன் மகளின் உயிரையும் சேர்த்து எடுத்துக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை...

``உன்னை விட நாய்தான் முக்கியம்” பிடிவாதத்தால் மனைவி மகளை இழந்த குடும்பம்..!

திவ்யாவின் கணவர் மற்றும் மாமியார், அவரின் உடல்நலனைவிட, தங்கள் வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மனவேதனை அடைந்தார். அவர் பதிமூன்று வயதே ஆன தன் மகளின் உயிரையும் சேர்த்து எடுத்துக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை...

Published:Updated:
நாய் ( சித்தரிப்பு படம் )

பெங்களூரில் வசித்து வந்த 36 வயதுப் பெண்ணும் அவரின் 13 வயது மகளும் வீட்டில் வளர்க்கும் நாயால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

கிழக்கு பெங்களூரு பானஸ்வாடியில் உள்ள ஹெச்பிஆர் லேஅவுட்டில் வசித்து வந்தது அந்தக் குடும்பம். இந்தத் தம்பதிக்கு 13 வயதில் ஹ்ருத்யா என்ற மகள் உண்டு, அவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்கொலை
தற்கொலை

குடும்பத் தலைவியான 36 வயது திவ்யா, கடந்த சில வருடங்களாக ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் சிகிச்சைக்காக மருத்துவரைச் சந்தித்துபோது, அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாயால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருக்கும், எனவே நாயிடம் இருந்து விலகி இருக்கும்படி மருத்துவர் கூறியுள்ளார்.

 அதனால், ``வீட்டில் நாயை வளர்க்க வேண்டாம், வேறு யாருக்காவது இந்த நாயைக் கொடுத்து விடுங்கள்" என்று திவ்யா தன் கணவரிடமும் அவரின் பெற்றோரிடமும் கூறியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் திவ்யாவின் பேச்சை அவரின் கணவர், மாமனார் மாமியார் யாரும் கேட்கவில்லை, எங்கள் செல்லப்பிராணியால்  உனக்கு உடலில் பாதிப்பு வரவில்லை, வேறு தெருநாய்களால் உனக்கு இந்த அலர்ஜி வந்திருக்கும்' என்று கூறி மறுத்துவிட்டனர்.

திவ்யா, தன் கணவர் மற்றும் மாமியார், என் உடல்நலனை விட, அவர்கள் வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மனவேதனை அடைந்தார். இதனால் கடந்த திங்கள்கிழமை திவ்யாவும் அவரின் 13 வயது மகளும் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவம் அருகில் உள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விசாரணை
விசாரணை

இந்தச் சம்பவத்தை விசாரித்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் திவ்யாவின் கணவர் ஸ்ரீனிவாஸ், மாமியார் வசந்தா மற்றும் மாமனார் ஜனார்தன் ஆகியோர் மீது ஐபிசி பிரிவு 306-ன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஸ்ரீனிவாஸ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திவ்யாவின் தந்தை ராமன் போலீசாரிடம் கூறியபோது,

  ''திவ்யாவுக்கும் ஸ்ரீநிவாஸுக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த சில வருடங்களாக ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட திவ்யா தன் கணவர் மற்றும் அவரின் பெற்றோரிடம், தாங்கள் வளர்த்துவரும் நாயை யாருக்காவது கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டதோடு, தங்கள் செல்லப்பிராணியால் அவளது உடல்நிலை பாதிக்கப்படாது என்றும், தெருநாய்களால் அவளுக்கு ஒவ்வாமை இருப்பதாகவும் அவள் மனம் புண்படும்படி கூறிவிட்டனர்.

தற்கொலை
தற்கொலை

"வீட்டில் வளர்ப்பு நாயை வளர்த்தால், குழந்தையோடு தற்கொலை செய்து கொள்வதாக திவ்யா கூறினார். அவள் இறந்தால் எதுவும் நடக்காது, மேலும் தங்கள் செல்லப்பிராணியை வளர்ப்போம் என்று அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்'' என்று ராமன் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியது,

``திங்கள்கிழமை காலை 7.30 மணி வரை திவ்யாவும் அவரின் மகளும் அறையை விட்டு வெளியே வரவில்லை அவர்கள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளதை அவரின் கணவர் பார்த்துள்ளார்.. எங்களுக்கு மரணக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. ராமன் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

குடும்பப் பிரச்னை உட்பட  எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி தற்கொலை தீர்வல்ல. திவ்யா பதிமூன்று வயதே ஆன தன் மகளின் உயிரையும் சேர்த்து எடுத்துக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இழப்புகளும் துயரங்களும் பூமிக்கு புதிதல்ல. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை. தற்கொலை எதற்குமே தீர்வல்ல!

நம்மால் தீர்க்க முடியாத பிரச்னை என்பது இந்த உலகில் இல்லை, அனைத்திற்கும் ஒரு வழி கண்டிப்பாக உண்டு. தற்கொலை எண்ணம் வந்தால் முதலில் அமைதியாக சிந்தித்திடுங்கள். எதார்த்தத்தை உணருங்கள். குடும்ப விஷயத்தில் விட்டுக்கொடுப்பதும், மனம் விட்டு பேசுவதும் பிரச்சனையை தீர்க்கும். அவர்கள் பிடிவாதமாக இருந்தால் மாற்றுவழிகளை ஆராய்ந்திடுங்கள்.

தற்கொலை தடுப்பு மையம்
தற்கொலை தடுப்பு மையம்

உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால் தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்களை தொடர்பு கொள்ளுங்கள்:

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் – 1091