Published:Updated:

அலுவலகம் முதல் சாலைப் பயணம் வரை; தண்டுவடத்தைப் பாதுகாப்பது எப்படி?- வழிகாட்டும் அவள் விகடன் வெபினார்

தண்டுவடம் காப்போம்!
தண்டுவடம் காப்போம்!

தண்டுவடத்தின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவது எப்படி, சாலைகளில் பயணம், நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் பணியாற்றுதல், அதிக நேரம் வாகனம் ஓட்டுதல், தவறான நிலையில் அமர்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளும் விளக்கங்களும் அளிக்கவுள்ளனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`இந்த முதுகு வலி பாடா படுத்துது...' இந்த வார்த்தைகளை சொல்லாதவர்கள் நம்மில் மிகக்குறைவு. பல மணி நேரம் கம்ப்யூட்டரின் முன்பு தவம் கிடக்கும் வேலை, குண்டும் குழியுமான சாலைகளில் வாகனம் ஓட்டுவது போன்ற காரணங்களால் நமக்குக் கிடைக்கும் பரிசு முதுகுவலி. முதுகு வலி மட்டுமல்ல தண்டுவடம் சார்ந்து பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

Back Pain
Back Pain
Image by mohamed Hassan from Pixabay

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.50 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை தண்டுவட காயங்களால் அவறுதியுறுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பெரும்பாலான தண்டுவட காயங்கள் சாலை விபத்துகள், கீழே விழுதல், வன்முறை சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் தடுக்கப்படக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியான தண்டுவடம், மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளை இணைக்கும் மிக முக்கியப் பணியைச் செய்கிறது. மூளையுடன் இணைந்து உடலின் இயக்கங்களையும், நடத்தைமுறையையும் இது கட்டுப்படுத்துகிறது. அத்தகைய தண்டுவடத்தின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே காணப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

Spinal cord (Representational Image)
Spinal cord (Representational Image)
Pixabay
மனஅழுத்தம், தலைவலி, முதுகுவலி... விடுப்பு எடுத்து ஓய்வெடுக்க வேண்டிய 5 உடல்நலப் பிரச்னைகள்!

தண்டுவடம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து வழங்கும் `தண்டுவடம் காப்போம்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை நிகழ்ச்சி ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவேரி மருத்துவமனையின் தண்டுவட அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பாலமுரளி, மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர் கே.மதுசூதனன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். தண்டுவடத்தின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவது எப்படி, சாலைகளில் பயணம், நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் பணியாற்றுதல், அதிக நேரம் வாகனம் ஓட்டுதல், தவறான நிலையில் அமர்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளும் விளக்கங்களும் அளிக்கவுள்ளனர்.

தண்டுவடம் காப்போம்!
தண்டுவடம் காப்போம்!

மேலும் தண்டுவட பிரச்னைகளுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொள்வார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் மருத்துவர்கள் விடையளிப்பார்கள். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு