Published:Updated:

தொடர் ஆன்லைன் வகுப்புகள்; குழந்தைகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

ஆன்லைன் கிளாஸ்களும் உடலியல் சிக்கல்களும்
ஆன்லைன் கிளாஸ்களும் உடலியல் சிக்கல்களும்

இந்நிகழ்ச்சியில் லேப்டாப், செல்போன்களின் முன் எந்த நிலையில் (posture) அமர வேண்டும், குழந்தைகளுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் தீர்வுகள், பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.

கோவிட்-19 பெருந்தொற்று நமக்களித்த கொடைகளில் ஒன்று குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள். அதுவரை கேட்ஜெட்டுகளை கையில் வைத்திருக்கும் குழந்தைகளைத் திட்டித் தீர்த்த பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்குப் பிறகு ஆண்ட்ராய்டு போனிடம் சரண்டர் ஆனார்கள். வீடுகளில் `புக்கை எடுத்துப் படி' என்ற வார்த்தைகள் `போனை எடுத்து கிளாஸ் அட்டெண்ட் பண்ணு' என்று மாறிவிட்டன.

Online class (Representational Image)
Online class (Representational Image)

தொடர்ந்து பல மணி நேரம் மொபைல்போன், டேப்லெட், லேப் டாப் என கேட்ஜெட்டுகளையே பார்ப்பதால் நாள்கள் செல்லச் செல்ல குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்ந்து கேட்ஜெட்டுகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு `க்வாரன்டீன் மயோபியா' என்ற கிட்டப்பார்வை பிரச்னை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் குனிந்து திரையைப் பார்ப்பதால் வளையும் தண்டுவடமானது குழந்தைகள் வளர்ந்த பிறகு அது நேராக இருப்பதில் பிரச்னை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.

ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகிவிடும். இதனைக் கருத்தில்கொண்டு அவள் விகடன் சார்பில் `ஆன்லைன் கிளாஸ்களும் உடலியல் சிக்கல்களும்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஜூலை 17-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 முதல் 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

Physical Therapist Srinath Raghavan
Physical Therapist Srinath Raghavan

பிஸியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார். முடநீக்கியல் பிரச்னைகளுக்காக சிகிச்சையளிப்பதில் 13 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த இவர், பணியிடங்களில் எந்த நிலையில் பணியாற்றுவது, உடல் இயக்கவியல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறார். பல்வேறு துறைகள், தொழில்களில் ஈடுபட்டு வருவோருக்கான உடல் இயக்கவியல் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் லேப்டாப், செல்போன்களின் முன் எந்த நிலையில் (posture) அமர வேண்டும், மொபைலுக்கேற்ற விரல்கள் எவை, குழந்தைகளுக்கான Ergonomics, குழந்தைகளுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள், கண், கழுத்து, தண்டுவடத்துக்கான பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் தனிப்பட்ட சந்தேகங்கள், கேள்விகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

ஆன்லைன் கிளாஸ்களும் உடலியல் சிக்கல்களும்
ஆன்லைன் கிளாஸ்களும் உடலியல் சிக்கல்களும்

குழந்தைகள் மற்றும் பெற்றோர் என அனைவருக்கும் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான கட்டணம் ரூ.199. நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும். : https://bit.ly/3xDwx3x

அடுத்த கட்டுரைக்கு