Published:Updated:

இந்தியாவில் 15 கோடி... சீனாவில் 4 கோடி... - பிசியோதெரபி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு!

Physiotherapy awareness rally

உலக பிசியோதெரபி தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது

இந்தியாவில் 15 கோடி... சீனாவில் 4 கோடி... - பிசியோதெரபி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு!

உலக பிசியோதெரபி தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது

Published:Updated:
Physiotherapy awareness rally

உலக பிசியோதெரபி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மருத்து மாத்திரைகள் இல்லாத பக்க விளைவுகள் அற்ற பிசியோதெரபி சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

Physiotherapy awareness rally
Physiotherapy awareness rally

இந்த ஆண்டு மாபெரும் பிசியோதெரபி விழிப்புணர்வு பேரணி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்பேரணியை தமிழ்நாடு மாநில பிசியோதெரபி கவுன்சில் தலைவர் டாக்டர்.முருகன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள நாட்டாண்மை கழக கட்டிடத்திலிருந்து கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். பேரணியானது திருவள்ளுவர் சிலை வரை சென்று மீண்டும் கோட்டை மைதானத்தில் நிறைவு பெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேரணி முழுவதும் பல்வேறு பிசியோதெரபி சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய படி பொதுமக்களைச் சந்தித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இப்பேரணியில் பிசியோதெரபி கவுன்சில் மாநில தலைவர் செந்தில்குமார், மருத்துவர்கள் ராஜ்குமார், விஜயராஜன், கண்ணன், ஜே.கே.கே.எம் பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் என சுமார் 300கும் மேற்பட்டவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டார்கள்.

Physiotherapy awareness rally
Physiotherapy awareness rally

இதுகுறித்து பிசியோதெரபி கவுன்சில் மாநில தலைவர் செந்தில்குமார், ''மருத்துவ துறையின் முன்னோடியாகத் திகழும் இந்தியாவில் நோய்களுக்கும் பஞ்சமில்லை. மருத்துவ முறைகளுக்கும் பஞ்சமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தேசிய அளவில் உடல் இயலாமையால் பாதிக்கப்படுவதில் நான்காம் இடத்தை இந்தியா தட்டி செல்லுகிறது. கால் மூட்டு வலி, பெரும்பாலும் பெண்கள் 50 வயதை எட்டியவுடனும், ஆண்கள் 60 வயதை எட்டியவுடனும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன், விட்டமின் டி பற்றாக்குறை, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் குறைபாடுகள், இந்தியன் டாய்லெட் மற்றும் காலணிகளில் குறைபாடுகளும் மூட்டு தேய்மானத்திற்கு காரணமாக உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் வருடத்திற்கு 15 கோடி மக்கள் கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவே சீனாவில் 4 கோடி மக்கள் மட்டுமே மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. எனினும் இந்தியாவில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை பெரிய அளவுக்குச் செய்யப்படுகிறது. 1994ம் ஆண்டு வெறும் 350 மூட்டு மாற்று அறுவை மட்டுமே செய்யப்பட்டது. இதுவே 2018ம் ஆண்டில் 1,50,000 மூட்டு மற்றும் அறுவை சிகிச்சையாக இமாலய வளர்ச்சி கண்டுள்ளது. 2022ம் ஆண்டில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை ஒரு மில்லியனைத் தொடும் என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல். ஆகவே இதனைப் பற்றி விழிப்புணர்வு அவசியம்'' என்றார்.

Physiotherapy awareness rally
Physiotherapy awareness rally

தொடர்ந்து வீரபாண்டி ஒன்றியம் நைனாம்பட்டி ஆரம்ப துவக்கப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக செயல்பட்டு வரும் சிறப்பு குழந்தைகளுக்கான பிசியோதெரபி சிகிச்சை மையத்திற்கு அதிநவீன பிசியோதெரபி சிகிச்சை உபகரணங்கள் 25 ஆயிரம் மதிப்பில் ஐ.ஏ.சி சேலம் மாணவர்கள் பிரிவு சார்பாக வழங்கப்பட்டது. அடுத்ததாக ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிசியோதெரபி பரிசோதனைகள், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தினார்கள். பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அன்பு இல்ல குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட்டு தங்களின் மகிழ்ச்சிகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism