குழந்தை பிறந்த ஆறு மாதங்களிலிருந்து பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும். ஈறுகளின் உள்ளேயிருந்து பற்கள் வெளியே வரும்போது எரிச்சல், ஈறு வீக்கம், ஈறு மென்மையாதல் போன்ற அசௌகர்யங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தையும் வாயில்வைத்துக் கடிப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க குழந்தைகளின் ஈறுகளில் ஏற்படும் அசௌகர்யத்தைக் குறைக்க வேண்டும். அதற்கான ஐந்து எளிய வழிகள்...

பாப்பாவுக்கு பல் முளைக்குதா?
  • பற்கள் முளைக்கும் காலகட்டத்தில் தாயின் அரவணைப்பும் கண்காணிப்பும் அவசியம் தேவை.

  • குளிரவைக்கப்பட்ட, சிறிய உலோகக் கரண்டியை குழந்தையின் ஈறுகளில் வைத்து வைத்து எடுத்தால், சற்று குளிர்ச்சியாக உணர்வார்கள்.

  • குளிர்ந்த பழங்களை ‘மெஷ் ஃபீடரி’ல் (Mesh Feeder) போட்டு மென்று சாப்பிடக் கொடுக்கலாம்.

  • பற்கள் முளைக்கும்போது வாய்ப்பகுதி ரணமாக இருக்கும். இந்தத் தருணத்தில் வாயில்வைத்து விளையாடும் ‘Teething Toys’ எனப்படும் பொம்மைகளைக் கொடுக்கலாம்.

  • குழந்தையின் வாயில் எச்சில் ஒழுகும்போதெல்லாம் அதைத் துடைத்துவிட வேண்டும். அது குழந்தை சுத்தமாகவும் ஈரமில்லாமலும் இருக்க உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு