Published:Updated:

நுரையீரல் நோய்த்தொற்று, மூச்சுத்திணறல், மாதவிடாய் பிரச்னைகள்... தீர்வளிக்கும் லிங்க முத்திரை!

தீர்வளிக்கும் லிங்க முத்திரை!
பிரீமியம் ஸ்டோரி
தீர்வளிக்கும் லிங்க முத்திரை!

- சரணி ராம்

நுரையீரல் நோய்த்தொற்று, மூச்சுத்திணறல், மாதவிடாய் பிரச்னைகள்... தீர்வளிக்கும் லிங்க முத்திரை!

- சரணி ராம்

Published:Updated:
தீர்வளிக்கும் லிங்க முத்திரை!
பிரீமியம் ஸ்டோரி
தீர்வளிக்கும் லிங்க முத்திரை!

உடலில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய `லிங்க முத்திரை' உதவுவதாக சென்னை ஐ.ஐ.டி தன் ஆய்வு முடிவுகள் மூலம் தெரிவித்துள்ளது. லிங்க முத்திரை நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன... அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது தொடர்பான தகவல்களைத் தருகிறார் யோகா பயிற்சியாளர் அம்ருதா.

நுரையீரலில் கழிவுகள் சேரும்போது, நுரையீரல் விரிந்து, சுருங்குவதில் தடை ஏற்படும். இந்தச் சூழலில் அணுக்களுக்குப் போக வேண்டிய ஆக்ஸிஜன் அளவில் தடை ஏற்படும். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதையே உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை என்கிறோம். லிங்க முத்திரை செய்யும்போது, உடலின் வெப்பநிலை அதிகமாகும். அது நுரையீரலில் தேங்கி நிற்கும் தேவையற்ற நீரை கரைத்துவிடும். இதனால் நுரையீரல் சீராக இயங்கத் தொடங்கும். ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் சரியாகும்.

இதை பத்மாசன நிலையில் அமர்ந்து செய்தால் முழுப்பலனும் கிடைக்கும். பத்மாசன நிலையில் செய்ய முடியாதவர்கள் அவர வருக்கு வசதியான நிலையில்கூட செய்யலாம்.

எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?

ஒரு நாளில் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். ஒரே நேரத்தில் செய்வதாக இருந்தால் அதிகாலை சூரியனின் வெப்பம் அதிகமாகும் முன் செய்யலாம். அல்லது காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் தலா 15 நிமிடங்கள் செய்யலாம்.

தேவைக்கு அதிகமான நேரம் லிங்க முத்திரை செய்வதால் உடலில் சோர்வு, மந்தத்தன்மை ஆகியவை தோன்றும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் முத்திரை செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

எப்படிச் செய்வது?

ஸ்டெப் 1: யோகா மேட் அல்லது போர்வையின்மேல், இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்துகொள்ளவும்.
ஸ்டெப் 1: யோகா மேட் அல்லது போர்வையின்மேல், இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்துகொள்ளவும்.
ஸ்டெப் 2: நீங்கள் அமர்ந்திருக்கும்போது உங்களின் முதுகு வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
ஸ்டெப் 2: நீங்கள் அமர்ந்திருக்கும்போது உங்களின் முதுகு வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
ஸ்டெப் 3: இரண்டு கைகளின் விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 3: இரண்டு கைகளின் விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 4: கைகளை மார்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 4: கைகளை மார்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 5: இடது கை கட்டை விரலை நேராக இருக்கும்படி தூக்கவும்.
ஸ்டெப் 5: இடது கை கட்டை விரலை நேராக இருக்கும்படி தூக்கவும்.
ஸ்டெப் 6: ஓர் உள்ளங்கையால் இன்னோர் உள்ளங்கையில் பத்து விநாடிகள் அழுத்தம் கொடுக்கவும்.
ஸ்டெப் 6: ஓர் உள்ளங்கையால் இன்னோர் உள்ளங்கையில் பத்து விநாடிகள் அழுத்தம் கொடுக்கவும்.
ஸ்டெப் 7: இப்போது இடது கை கட்டை விரலை மடக்கவும்.
ஸ்டெப் 7: இப்போது இடது கை கட்டை விரலை மடக்கவும்.
ஸ்டெப் 8: வலது கை கட்டை விரல் மேல் இருக்கும்படி தூக்கி, பத்து விநாடிகள் உள்ளங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும். இவ்வாறு மாறி மாறிச் செய்யவும்.
ஸ்டெப் 8: வலது கை கட்டை விரல் மேல் இருக்கும்படி தூக்கி, பத்து விநாடிகள் உள்ளங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும். இவ்வாறு மாறி மாறிச் செய்யவும்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யாரெல்லாம் செய்யலாம்?

எட்டு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் செய்யலாம். பித்தம், அல்சர், அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

வயிற்றில் கட்டி அல்லது புற்று நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக லிங்க முத்திரை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

நுரையீரல் நோய்த்தொற்று, மூச்சுத்திணறல், மாதவிடாய் பிரச்னைகள் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வைத் தரும்.

தினமும் செய்து வர உடல் எடை குறையும். புத்துணர்ச்சி அதிகரிக்கும்.