Election bannerElection banner
Published:Updated:

சென்னை: புற்றுநோயாளிகளுக்கு ரத்ததானம் செய்ய முன்வந்த பெண்கள்... அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்

கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்சமயத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நாடே திண்டாடும் நிலை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி சிகிச்சையின் போது ரத்தம் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.

கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்சமயத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நாடே திண்டாடும் நிலை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி சிகிச்சையின் போது ரத்தம் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.

இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தினார்கள். இதன் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசியபோது, ``கேன்சரால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை பெறுபவர்கள் பலருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாகவே உள்ளது.

விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்

எனவே அவர்கள் ரத்தம் ஏற்றிய பிறகுதான் அவர்களுக்கான சிகிச்சையைத் தொடர முடியும் என்ற நிலையில் உள்ளார்கள். கீமோதெரபி சிகிச்சையானது 25 முதல் 30 நாள்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும். ரத்த தானம் செய்வதற்காகப் பலரும் முன் வருவது வழக்கம். ஆனால் இந்தப் பேரிடர் காலத்தில் ரத்த தானம் செய்வதற்காக மருத்துவமனைக்கு வர பொதுமக்கள் அச்சத்தோடு இருப்பதால் ரத்த வங்கிகளில் ரத்தம் கிடைக்காமல் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிகிச்சை எடுத்துக்கொள்வோருக்கு மாதா மாதம் ரத்தம் ஏற்ற வேண்டியுள்ளது. இப்படி பலருக்கு இங்கு ரத்தம் தேவைப்படும் நிலையில், ரத்தம் போதிய அளவு கிடைப்பதில்லை.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வு முகாம் ஒன்றை மே 1-ம் தேதி முதல் முறையாக நடத்தினோம். கடந்த ஒரு வருட காலமாகவே ரத்த வங்கிகளில் போதிய ரத்தம் கிடைக்கவில்லை. எனவே ரத்த தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாமை தன்னார்வலர்களின் முன்னிலையில் நடத்தினோம். கொரோனா இரண்டாம் அலை காரணமாக மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட நபரால் அடுத்த சில நாள்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது. எனவே தடுப்பூசி போடும் முன்பு ரத்த தானம் செய்யத் தகுதியுடையவர்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திய விழிப்புணர்வு முகாம்தான் இது.

விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்

இதில் சுமார் 40 பேர் கலந்து ரத்த தானம் செய்தனர். பெண்கள் எட்டு முதல் ஒன்பது பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வருத்தத்திற்குரிய நிகழ்வு என்னவென்றால் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே ஹீமோகுளோபின் போதுமானதாக இருந்தது. எனவே ஒன்பது பெண்களில் ஒருவரால் மட்டுமே ரத்தம் கொடுக்க முடிந்தது. ஆர்வம் இருந்தும் ரத்த தானம் செய்ய முடியாமல் போன பெண்களிடம் வலியுறுத்தியது ஒன்றுதான், ``தேவைப்படும் ஒருவருக்கு உதவி செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம், நீங்கள் சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான். எனவே உங்கள் உடலை சீராக வைத்துக்கொண்டால்தான் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ முடியும்'' என்றவர், இந்த விழிப்புணர்வு முகாமை மாதம்தோறும் நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு