Published:Updated:

பிளாஸ்மா தெரபியில் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? - விளக்கும் ரத்த மாற்று சிகிச்சை நிபுணர்

Plasma treatment
Plasma treatment

பிளாஸ்மா தெரபி சிகிச்சை ஆராய்ச்சியில் நம் நாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. அதனால் இந்தச் சிகிச்சையின் விளைவு இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் உறுதியாகக் கூறவும் முடியாது.

ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்லும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமீபகாலமாக `பிளாஸ்மா தெரபி" என்றொரு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

corona virus pandemic
corona virus pandemic

நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொருவரின் உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா தெரபி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சையை மத்திய அரசு பரிந்துரை செய்தது. பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு, அதில் பலன் கிடைத்ததாகவும் சில செய்திகள் வெளியாகின.

Blood
Blood

வெளியான தகவல்கள் எதுவும் பொய்யானவை அல்ல. இந்த நிலையில் மத்திய அரசு, பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்குத் திடீரென தற்காலிகத் தடை விதித்துள்ளது. மருத்துவர்கள் அதைச் சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது மத்திய சுகாதாரத்துறை.

பிளாஸ்மா தெரபி பலன் தரக்கூடியதாக இருந்தபோதிலும் மத்திய அரசு அதை சிகிச்சை முறையாக ஏற்றுக்கொள்ளாதது ஏன்... இதன் சாதக, பாதகங்கள் என்னென்ன... ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜனிடம் பேசினோம்.

ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்
ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்

``பிளாஸ்மா என்பது நம் ரத்தத்தில் இருக்கும் ஒருவகையான புரதம். ரத்தத்திலிருந்து பிரிக்கும்போது, பிளாஸ்மா ஒரு வெளிர் மஞ்சள் திரவமாக இருக்கும். நம் மொத்த ரத்தத்தில் 55% பிளாஸ்மா உள்ளது. பிளாஸ்மாவின் முக்கியப் பங்கு ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்களை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்வது. செல்களின் கழிவுகளை உடலில் இருந்து அகற்றவும் பிளாஸ்மா உதவுகிறது.

``கோயம்பேடு சந்தையா, கொரோனா மந்தையா?'' - பதறவைக்கும் வைரஸ்... பயப்படாத மக்கள்

ஏதேனும் ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியம் கிருமியால் நோய்த் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதே நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் சிகிச்சை முறைதான் `பிளாஸ்மா தெரபி'.

Plasma treatment
Plasma treatment

ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் உருவாகியிருக்கும் ஆன்டிபாடிகள், பிளாஸ்மா மூலம் சிகிச்சை தரப்படும் நோயாளிக்கு மாற்றப்படும்போது அந்த நோயிலிருந்து அவர் குணமடைய அதிக வாய்ப்புள்ளது. இந்தச் சிகிச்சை முறைதான் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதில் சிலர் குணமடைந்தும் வந்தனர்.

ஆனால், இந்தச் சிகிச்சை முறையை நாம் கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் மேற்கொள்ளவில்லை. வைரஸினால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்பட்டு வந்தது. ஏனெனில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்படும் அனைவரும் குணமடைவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

 Test
Test

பிளாஸ்மா தெரபி சிகிச்சை ஆராய்ச்சியில் நம் நாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. அதனால் இந்தச் சிகிச்சையின் பலன் இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் உறுதியாகக் கூறவும் முடியாது. இவற்றைக் கருத்தில்கொண்டுதான் மத்திய அரசு இந்த சிகிச்சை முறையைச் சோதனை நோக்கங்களுக்காக மட்டும் அனுமதித்துள்ளது.

கொரோனாவைப் பரப்பும் கழிவறைகள்... கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள்!  - மருத்துவர் அலெர்ட்

இந்தச் சிகிச்சை முறையில் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு முழுமையாகக் குணமடைந்தவரின் உடலில் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு பிளாஸ்மா பிரிக்கப்படுகிறது. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த 28 நாள்களுக்குப் பிறகே பிளாஸ்மா தெரபிக்காக அவரிடமிருந்து ரத்தம் சேகரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு அவர் உடம்பில் வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிசெய்ய இரண்டு முறை PCR(Polymerase Chain Reaction) டெஸ்ட் செய்யப்படுகிறது.

plasma
plasma

ஒருவரின் உடலில் வைரஸ் வீரியத்துடன் இருக்கிறதா என்பதை இந்த PCR டெஸ்ட் மூலம் உறுதிசெய்யலாம். இந்த டெஸ்டில் ஒருவரின் உடலில் வைரஸ் வீரியத்துடன் இல்லை என்பது உறுதியான பிறகே அவரின் ரத்தம் பிளாஸ்மா தெரபிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

எந்தவகை ரத்தத்துக்கு எந்த வகை பிளாஸ்மா பொருந்தும் என்பதன் அடிப்படையில்தான் பிளாஸ்மா ஒருவரின் உடலிலிருந்து மற்றொருவரின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அதாவது ரத்த மாற்றுச் சிகிச்சையின்போது ரத்தப்பிரிவின் அடிப்படையில் அது இன்னொருவருக்கு மாற்றப்படுவதைப் போலவே, பிளாஸ்மா தெரபியிலும் செய்யப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே குணமடைந்தவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகும்போது அவரிடமிருந்து பிளாஸ்மாவைத் தானமாக பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

Blood Test
Blood Test
Free Pik

ஒருவரின் சுய நோய் எதிர்ப்பு மண்டலம் அவருக்கு எதிராகவே செயல்பட்டு பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர்(Autoimmune Disorder) எனப்படும். உதாரணத்துக்கு ஹீமோபிலியா. அதாவது காயங்களுக்குப் பிறகு ரத்தம் சரியாக உறைய முடியாத நிலை. இதனால் அதிக ரத்த இழப்பு ஏற்படும். இத்தகைய ஆட்டோஇம்யூன் பிரச்னைகளுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு வந்தாலும், கொரோனா போன்ற வீரியம் மிகுந்த ஒரு வைரஸுக்கு இதைச் சிகிச்சையாகக் கொண்டுவருவதற்கு நாம் இன்னும் பல ஆய்வுகளைக் கடந்தாக வேண்டும்.

இந்தியக் கொரோனா நோயாளிகளில் 80% பேர் அறிகுறிகளற்ற ஏசிம்ப்டமடிக்... ஏன், என்ன, எப்படி? #VikatanExplainer

பிளாஸ்மா தெரபி செய்யப்பட்ட ஒருவருக்கு சில நேரம் அலர்ஜி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏற்படும் பட்சத்தில் அவருக்கு ஏற்கெனவே இருந்த நோய் இன்னும் தீவிரமடையலாம். இது அவரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

Treatment
Treatment

இதுபோன்ற காரணங்களால்தான் இந்தச் சிகிச்சை முறை கொரோனாவுக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இந்த பிளாஸ்மா தெரபி குறிப்பிட்ட நோய்களுக்குச் சிகிச்சையாக அறிவிக்கப்படலாம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு