Published:Updated:

மொபைல்போன் பார்ப்பதால் முதுமைத்தோற்றம் வருமா... புதிய ஆய்வு சொல்வதென்ன?

மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களைத் தொடர்ந்து பார்ப்பதால், உடலில் உள்ள செல், சருமம், நியூரான்களில் பாதிப்பு ஏற்பட்டு, அவை வயதான தோற்றம் பெற வழிவகுப்பதாகக் கூறுகிறது அந்த ஆய்வு.

மொபைல்போன் பார்ப்பதால் முதுமைத்தோற்றம் வருமா... புதிய ஆய்வு சொல்வதென்ன?

மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களைத் தொடர்ந்து பார்ப்பதால், உடலில் உள்ள செல், சருமம், நியூரான்களில் பாதிப்பு ஏற்பட்டு, அவை வயதான தோற்றம் பெற வழிவகுப்பதாகக் கூறுகிறது அந்த ஆய்வு.

Published:Updated:

மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து வெளிப்படும் ப்ளூலைட், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இன்று மொபைல்போன் மிகமிக அத்தியாவசியமான சாதனமாகிவிட்டது; செல் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலைக்கு நாம் பழகிவிட்டோம். மொபைல்போன், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களால் எத்தனை நன்மைகள் இருந்தாலும், அவற்றால் சில பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக மொபைல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிகநேரம் பயன்படுத்தும்போது பார்வை தொடர்பான பிரச்னைகள், தலைவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன.

 mobile usage
mobile usage

இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவு ஒன்று, மொபைல்போன் போன்ற சாதனங்களில் இருந்து வெளிப்படும் ப்ளூலைட், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களில் உள்ள திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, ``சருமம் மற்றும் கொழுப்பு செல்கள் முதல், உணர்ச்சி நியூரான்கள் வரை, நம் உடலில் உள்ள பல்வேறு செல்களில் தீங்கு விளைவிக்கும்" என்று, `ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங்’ என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களை, தொடர்ந்து பார்ப்பதால் உடலில் உள்ள செல், சருமம், நியூரான்களில் பாதிப்பு ஏற்பட்டு, அவை வயதான தோற்றம் பெற வழிவகுப்பதாகக் கூறும் அந்த ஆய்வு, நீண்ட நேரம் ப்ளூ லைட் பார்ப்பதால் தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தி தடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Eye (Representational Image)
Eye (Representational Image)
Photo by Towfiqu barbhuiya on Unsplash

எனவே, மொபைல்போன் போன்ற சாதனங்களில் அதிகப்படியான நீல ஒளி வெளிப்பாட்டை தவிர்ப்பது, வயதான தோற்றைத் தடுப்பதற்கான உத்தியாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.