Published:Updated:

மார்பக புற்றை மிக ஆரம்ப நிலையில் கண்டறியும் MAMMI பெட் ஸ்கேன்; இந்தியாவிலேயே முதலாவதாக மதுரையில்!

மா.சுப்ரமணியன்

''இந்த MAMMI பெட் ஸ்கேன் பிரத்யேகமாக மார்பக புற்றுநோயைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டியானது 2 மி.மீ அளவுக்கு சிறியதாக இருந்தாலும் கூட இதனால் அக்கட்டியை கண்டறிய முடியும். இதன் மூலம் விரைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயாளி விரைவில் குணமடைய முடியும்.''

மார்பக புற்றை மிக ஆரம்ப நிலையில் கண்டறியும் MAMMI பெட் ஸ்கேன்; இந்தியாவிலேயே முதலாவதாக மதுரையில்!

''இந்த MAMMI பெட் ஸ்கேன் பிரத்யேகமாக மார்பக புற்றுநோயைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டியானது 2 மி.மீ அளவுக்கு சிறியதாக இருந்தாலும் கூட இதனால் அக்கட்டியை கண்டறிய முடியும். இதன் மூலம் விரைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயாளி விரைவில் குணமடைய முடியும்.''

Published:Updated:
மா.சுப்ரமணியன்

பெண்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி வரும் மார்பக புற்றுநோயை துல்லியமாக கண்டறிந்து குணப்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேமோகிராபி வித் மாலிகுலர் இமேஜிங் (MAMMI - MAMmography with Molecular Imaging) என அழைக்கப்படும் பெட் ஸ்கேன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மார்பக பெட் ஸ்கேன் என்பது சிறப்பு.

மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் குருசங்கர், காமினி குருசங்கர் முன்னிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர நாத் பண்டாரி, அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு, ஸ்கேன் பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘'மேமோகிராபி வித் மாலிகுலர் இமேஜிங் என்று அழைக்கப்படும் இந்த MAMMI பெட் ஸ்கேன் பிரத்யேகமாக மார்பக புற்றுநோயைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டியானது 2 மி.மீ அளவுக்கு சிறியதாக இருந்தாலும் கூட இதனால் அக்கட்டியை கண்டறிய முடியும். இதன் மூலம் விரைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயாளி விரைவில் குணமடைய முடியும்.

மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்
விகடன்

பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் முதன்மையானதாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது. ஆனாலும், மிக தாமதமாகவே கண்டறியப்படுவதால், நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.

மேமோகிராம், சி.டி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றை விட, ஆரம்பத்திலேயே புற்றுநோய்க்கான செல்கள் உருவாவதை இந்த PET ஸ்கேனால் கண்டறிய முடியும். இன்று மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில் முழு உடல் பெட் ஸ்கேன் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மார்பக பரிசோதனைக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரத்யேக பெட் ஸ்கேனால் 2 மி.மீ. அளவுள்ள திசுத்திரள் அல்லது கட்டி ஒருவருக்கு உருவாவதற்கு முன்பே கண்டறிய முடியும்.

மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்

இதுவே முழு உடல் பெட் ஸ்கேனில், 10 மி.மீ. அளவுக்கு அதிகமாக வளர்ந்த நிலையில் மட்டுமே புற்றுநோய் கட்டியை கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கட்டியை அடையாளம் காணமுடிந்தால், அதை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை உடனே தொடங்கி, மார்பகத்தை அகற்றுவதற்கான சிகிச்சை அல்லது அவசியமற்ற பிற துணை சிகிச்சைகள் இதனால் தவிர்க்கப்படும். மேலும், கீமோதெரபியால் எந்த அளவிற்கு நோயாளிகளுக்கு சிகிச்சை பலன் கிடைக்கிறது என்பதையும் இதனால் தெரிவிக்க முடியும்.

MAMMI PET என்பது ஒரு எளிய, வலியற்ற பரிசோதனை. கதிரியக்க ட்ரேசரை ஒரே ஒரு முறை ஊசி மூலம் செலுத்தும் போது மார்பகத்தின் 360-டிகிரி இமேஜை இது உருவாக்குகிறது. இதன் மூலம் சிறிய கட்டிகளும், நோய் இருக்கும் பகுதிகளும் விடுபடாமல் இருக்கும். மார்பக அழுத்தம் ஏதும் இல்லாமலேயே இப்படங்கள் எடுக்கப்படுவதால் நோயாளிகளுக்கு எந்த அசௌகர்யமும் ஏற்படாது. 30 - 40 நிமிடங்களுக்குள் இதன் செயல்பாடு நிறைவடையும். இந்த சிகிச்சை முறையை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தொடங்கி வைத்ததில் பெருமை கொள்கிறேன். முக்கிய நகரமான மதுரையில் உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பமும், தரமான சிகிச்சைகளும் கிடைப்பது வரவேற்புக்கு உரியது" என்றார்.