Published:Updated:

`ஓர் அறை; ஒரே ஒரு நீர்த்திவலை; 10 மணி நேரம்!' - கோவிட்-19 குறித்து எச்சரிக்கும் பிரிட்டன் ஆய்வு

covid spread research
covid spread research

படுக்கையிலிருந்து கதவின் கைப்பிடிகள் மற்றும் சோதனை அறையில் உள்ள குழந்தையின் பொம்மைகள் வரை அனைத்து இடங்களிலும் வைரஸ் பரவியுள்ளது!

கொரோனா வைரஸ் குறித்த பல நூறு ஆய்வுகள் உலகம் முழுவதும் அன்றாடம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆய்வுகளின் முடிவுகளில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ், பொருள்களின் மேற்பரப்புகளில் எத்தனை மணிநேரம் வாழக்கூடியது, பரவக்கூடியது என்று அதன் தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில், பல முடிவுகள் கிடைத்துவருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தின் யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனை(UCL) மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 'கொரோனா நோயாளியின் படுக்கை அறையில், ஒரு நீர்த்திவலையில் உள்ள கோவிட்-19 வைரஸ், அறையின் தளத்தில் எத்தனை தூரம் பரவக்கூடும்' என்ற ஆய்வை மேற்கொண்டனர்.

covid
covid

ஆய்வில், நேரடியாக கொரோனா வைரஸ் டிஎன்ஏ-வை பயன்படுத்தாமல், குறிப்பிட்ட தாவரத் தொற்று வைரஸில் டிஎன்ஏ-வை உள்செலுத்தி ஆய்வை மேற்கொண்டனர். கோவிட்-19 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சுவாச மாதிரிகளில் காணப்படும் வைரஸ் செறிவுக்கு இணையாக, ஆராய்ச்சியாளர்கள் ஒரு மில்லி லிட்டர் தண்ணீரில் வைரஸை சேர்த்து ஆய்வு நடத்தினர். இவ்வாறு செய்வதால், இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் முடிவில், 'மருத்துவமனை படுக்கை அறையில், கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்குள், அவ்வறையின் தளத்தில் 41% இடப்பரப்பில் வைரஸ் டிஎன்ஏ பரவியிருந்தது. படுக்கையிலிருந்து கதவின் கைப்பிடிகள் மற்றும் சோதனை அறையில் உள்ள குழந்தையின் பொம்மைகள்வரை அனைத்து இடங்களிலும் வைரஸ் பரவியுள்ளது. முதல் 10 மணி நேரத்தில் 41 சதவிகிதமாக இருந்த வைரஸ் பரவல் மூன்று நாள்கள் கழித்து, 59 சதவிகிதமாகப் பெருக்கமடைந்தது. பின்னர் வைரஸ் பரவல் செயலிழக்கத் தொடங்கி, ஐந்தாவது நாளில் 41 சதவிகிதமாகக் குறைந்தது. மேலும், பரவியிருந்த வைரஸ் சுமார் ஐந்து நாள்களுக்கு அறையின் மேற்பரப்புத் தளத்தில் இருந்தது' என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலின்போது, முட்டை, சிக்கன், மட்டன் சாப்பிடலாமா? - அசைவம் குறித்த அலர்ட்!

'கொரோனா வைரஸ் பரவுவதில் மேற்பரப்புகள் வகிக்கும் முக்கியப் பங்கையே எங்கள் ஆய்வுகள் காட்டுகின்றன' என்று கூறியுள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையைச் சேர்ந்த லீனா சிரிக்,

'கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவர், தான் தும்மும்போதும் இருமும்போதும் வைரஸை பல மேற்பரப்புகளில் தெளித்துவிடுகிறார். எங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அறையில், குறைந்த மணி நேரங்களில் கோவிட்-19 வைரஸ் அறையின் பாதி இடங்களில் பரவியிருப்பது, அதன் பரவும் வீரியத்தைத் தெளிவுபடுத்துகிறது' என்று தெரிவித்தார். 'வைரஸ் பரவியுள்ள தளத்தின் மேற்பகுதியை ஒருவர் தொட்ட பின், அவரின் கைகள் வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதன் மூலம் வைரஸ் எளிதாகப் பரவிவிடுகிறது' என்று எச்சரித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு