Published:Updated:

காலாவதியான ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தலாமா...? -ஓர் அலசல்

ஹேண்ட் சானிடைசர்
ஹேண்ட் சானிடைசர்

ஹேண்ட் சானிடைசர்களில் 70% ஐசோ புரோப்பைல் ஆல்கஹால்(Isopropyl alcohol) உள்ளது. இது நோய்க்கிருமிகளிடமிருந்து நமக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துகிறது.

ற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு நாட்டின் சுகாதாரத்துறையும் பல்வேறு விதமான தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மாஸ்க்குகள் அணிவதும், ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தி கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் அனைத்து நாடுகளும் பொதுவாகப் பரிந்துரைக்கும் இரண்டு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். இதைப் பலரும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். சீனா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் மாஸ்க்குகள் மற்றும் ஹேண்ட் சானிடைசர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


``கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் உதவுமா?" - மருத்துவரின் ஆலோசனை

குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் தொடுதலின் மூலமாகப் பரவ அதிக வாய்ப்புள்ளது என்பதால் `கைகளின் சுகாதாரம்' என்பது முக்கியத்துவம் பெறுகிறது. கைகளைக் கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ள சோப், ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிடைசர்கள் எனப் பல இருந்தாலும் இவற்றில் ஹேண்ட் சானிடைசர்களே நோய்க்கிருமிகளை அழிப்பதில் செயல்திறன்மிக்கவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஹேண்ட் சானிடைசர்
ஹேண்ட் சானிடைசர்
Picasa

ஹேண்ட் சானிடைசர் பற்றி...

நம்மில் பெரும்பாலானோர் தங்களின் கைப்பைகளில் எப்போதும் ஒரு ஹேண்ட் சானிடைசர் பாட்டிலை வைத்திருப்போம். ஆனால், அது காலாவதியாகும் தேதி தெரியாமலே அதைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். எனவே, எப்போதும் ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தும்போது அதன் காலாவதி தேதியை செக் செய்ய வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும், காலாவதியான ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்துவதால் ஏதாவது பக்கவிளைவு ஏற்படுமா என்றால், கைகளின் சுத்தத்துக்காக எதுவுமே பயன்படுத்தாமல் இருப்பதற்குக் காலாவதியான ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்துவது மேல் என்கிறார் டாக்டர் வில்லார்ட்.

கைகளின் சுகாதாரம்
கைகளின் சுகாதாரம்

ஹேண்ட் சானிடைசர்களில் 70% ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் (Isopropyl alcohol) உள்ளது. இது நோய்க்கிருமிகளிடமிருந்து நமக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துகிறது. ஹேண்ட் சானிடைசர்களில் குறைந்தபட்சம் 60% ஆல்ஹகால் இருக்க வேண்டியது அவசியம். இவை மட்டுமல்லாமல் வோட்கா மற்றும் அனைத்து வகையான வடிகட்டிய ஆல்கஹால்களும் கிருமிகளைக் கொல்லும் திறனைக் கொண்டிருக்கும்.

`குணமாகி திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு?!- தொடர் பீதியில் சீன மக்கள்

ஹேண்ட் சானிடைசர் தயாரிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பல நாடுகளில் ஹேண்ட் சானிடைசர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அவசரத்துக்கு ஹேண்ட் சானிடைசர்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது பற்றிய ஒரு வீடியோவை சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (CGTN - China Global Television Network) தனது ட்விட்டர் பகுதியில் பகிர்ந்துள்ளது.

ஹேண்ட் சானிடைசர் தயாரிக்கத் தேவையானவை:

ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் (Isopropyl alcohol), ஆலோவேரா (கற்றாழை) ஜெல், எசென்ஷியல் ஆயில் (Essential oil), மிக்சிங் பவுல்

செய்முறை:

மிக்சிங் பவுலில் 70% ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் இரண்டு கப், ஆலோவேரா ஜெல் முக்கால் கப் இவற்றுடன் எசென்ஷியல் ஆயில் 10 சொட்டுகள் சேர்த்து நன்றாகக் கலந்து கிடைக்கும் ஜெல்லை ஹேண்ட் சானிடைசராகப் பயன்படுத்தலாம்.

அடுத்த கட்டுரைக்கு