Published:Updated:

`புனிதநீர் கொடுப்பது தற்காலிக நிறுத்தம்!'- கொரோனா காரணமாக கத்தோலிக்க தேவாலயங்களில் கட்டுப்பாடு

தீர்த்தத் தொட்டி
தீர்த்தத் தொட்டி ( Pixabay )

நியூயார்க் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகளில், மாணவர்களோ பெற்றோர்களோ வெளிநாடு சென்றால், மருத்துவ அனுமதிச் சான்றிதழ் பெற்ற பின்பே பள்ளியில் அனுமதிக்கப் படுகின்றனர்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில், தேவாலயத்துக்குச் சென்ற மக்கள், தேவாலயத்தின் வாசலில் இருக்கும் தீர்த்தத் தொட்டி காலியாக இருக்க அதன் அருகிலேயே `கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக புனிதநீர் கொடுப்பது இல்லை' என்ற போர்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கொரோனா
கொரோனா
Pixabay

கத்தோலிக்க தேவாலயங்களில் வாசலிலேயே தீர்த்தத் தொட்டி இருக்கும். அதில் எப்போதும் புதுமைத் தண்ணீர் எனப்படும் புனிதநீர் நிரப்பப்பட்டிருக்கும். அந்த நீரைத் தெளித்துக்கொண்டால் நோய்கள் அணுகாது என்பது நம்பிக்கை.

அமெரிக்காவில் உள்ள மியாமி, சிகாகோ, சியாட்டில் மாகாணங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் கொரோனா வைரஸ் பரவுதலின் காரணமாக பரிசுத்த நீர் வழங்குதல் மற்றும் புனித ஒயின் மற்றும் அப்பங்களைப் பொதுக் கோப்பைகளில் வழங்குவதைத் தவிர்த்துக் கரங்களில் வாங்க அறிவுறுத்தப்படுத்திருக்கிறது.

அப்பம்
அப்பம்
Pixabay

பிரார்த்தனையின்போது ஆரத்தழுவிக் கொள்ளுதல் மற்றும் மக்களைத் தொட்டு ஆசீர்வாதம் செய்தல் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ளும்படி பிஷப்கள் விசுவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர். சியாட்டிலின் பேராயர் பால் டி. எட்டியென், உடல்நலமின்மை இருந்தால் கத்தோலிக்கர்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கூட்டமாகச் சேர்ந்து பிரார்த்தனை செய்வதைத் தவிர்க்குமாறு மக்களிடம் அறிவுறுத்தினார். நியூயார்க் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகளில், மாணவர்களோ பெற்றோர்களோ வெளிநாடு சென்றால், மருத்துவ அனுமதிச் சான்றிதழ் பெற்ற பின்பே பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

Holy water Font
Holy water Font
Pixabay
கொரோனா அச்சம்... மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்லும் நோயாளிகள்!

`புறத்தூய்மை நீரான் அமையும்' என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்பப் புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமாக நோய் தொற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா பற்றி வரும் வாட்ஸ்அப் வதந்திகளையும் அவற்றை அழிக்கும் முறைகள் குறித்து வரும் வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு