மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தும் ஊசிகளின் விலையில் பல மடங்கு லாபம் வைத்து விற்பதாக கடந்த 2015-ம் ஆண்டு புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், இந்திய வர்த்தக ஒழுங்கு முறை நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகளை நடத்தி வரும் மேக்ஸ் ஹெல்த்கேர், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட நாட்டின் முன்னணி மருத்துவக் குழுமங்களிடம் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு அவர்கள் எவ்வாறு விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதற்கான தரவுகளை கோரியுள்ளது. சிசிஐ ( Competition Commission of India - CCI) அமைப்பும் இது தொடர்பான விரிவான விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் மருந்து பொருள்களின் விலை கட்டுக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விவேக் சர்மா என்ற சமூக ஆர்வலர் கடந்த 2015-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஊசிகளை மருத்துவமனை நிர்வாகம் ரூ.19.50-க்கு விற்பதாகவும், அதே ஊசியை டெல்லியின் அசோக் விகார் பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் 10 ரூபாய்க்கு வாங்கியதாகவும், மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இரு மடங்கு லாபம் வைத்து அந்த ஊசியை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் விற்று வருவதாகவும் குற்றம் சுமத்தி இருந்தார். மேலும், பன்னாட்டு ஊசி தயாரிப்பு நிறுவனமான பெக்டன் டிக்கின்சன் தனது பொருள்களை அதிக விலைக்கு விற்று இந்திய மக்களை ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகுற்றச்சாட்டுகளை அடுத்து, மேக்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சிசிஐ அமைப்பு, மேக்ஸ் நிர்வாகம் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் தங்களது மருந்தகங்களிலேயே மருந்துகளை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதோடு, மருந்துப் பொருள்களை சுமார் 527% அதிக லாபத்துக்கு விற்றுள்ளதையும் கண்டறிந்துள்ளது. ஆனால், மேக்ஸ் நிர்வாகம் மற்றும் பெக்டன் டிக்கின்சன் அகிய நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தக தொடர்பை கண்டறிய முடியவில்லை எனத் தெரிவித்திருந்தது.

சிசிஐ அமைப்பு மருத்துவப் பொருள்களுக்கு அதிக மற்றும் நியாயமற்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தனது விரிவான ஆய்வை தொடர்ந்தது. அதே வேளையில், இந்திய மருத்துவ துறையில் தனது ஆழமான ஆய்வை தொடங்கியது. இந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கைகள் கடந்த 2018 - 2021 வரையிலான காலகட்டங்களில் வெளிவந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆய்வின் முடிவில் மருத்துவமனைகளின் உள்ளே செயல்படும் மருந்தகங்களும், மருத்துவர்கள் தனியே நடத்தும் மருந்தகங்களும் அதிக விலைக்கு மருந்து பொருள்களை விற்பதாகவும் குற்றம் சாட்டியது. இந்த அதிகப்படியான விலை உயர்வானது மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் வேதியியலாளர்கள் மூலம் நடைபெறுவதாகவும் சிசிஐ அமைப்பு கண்டறிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சிசிஐ அமைப்பின் இந்த விசாரணை நடவடிக்கையானது, கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் மருத்துவமனைகள் அதிக விலைக்கு மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யும் குற்றத்திற்கு எதிரான முதல் நடவடிக்கை. சிசிஐ அமைப்பின் ஆய்வானது மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளைக் கட்டுப்படுத்தலாம், அல்லது குறைந்தபட்சம் மருத்துவமனைகள் இந்தப் பொருள்களை விற்கும் விதத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரலாம், என மருத்துவமனைகளின் சுரண்டலுக்கு எதிராகப் போராடுபவர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மருத்துவமனைகளின் சேவைகளின் விலை நிர்ணயம் குறித்த சரியான விதிமுறைகள் இல்லாததால், இந்த வழக்கின் போக்கை மருத்துவ செயற்பாட்டாளர்கள் பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், சிசிஐ அமைப்பு நடத்தி வரும் ஆய்வுக்கு தங்கள் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக மேக்ஸ் ஹெல்த் கேர் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக ஃபோர்டிஸ் மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் சில அத்தியாவசிய மருந்துகளின் விலை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. காய்ச்சல், தொற்று மற்றும் இதய நோய்கள் போன்ற பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் சுகாதாரத் திட்டங்களுக்காக வாங்கப்பட்டு, பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்தியாவசியமற்ற மருந்துகளின் விஷயத்தில், ஒரு மருந்து நிறுவனம் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய உரிமை வழங்க்கப்பட்டுள்ளது. ஆனால் மருந்துகளின் அதிகபட்ச விற்பனை விலையை 10 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.