Published:Updated:

`இனி வலி நிவாரண மருந்துகள் வாங்க மருந்துச்சீட்டு தேவையில்லை!' - என்ன சொல்கின்றன புதிய விதிகள்?

Tablets (Representational Image) ( Pixabay )

பூஞ்சைத்தொற்று தடுப்பு மாத்திரைகள், வலி நிவாரணி மருந்துகள், இருமல் சிரப்புகள், மலமிளக்கிகள், கிருமி நாசினிகள் மற்றும் பல் ஈறு தொற்றுக்கான மருந்துகளை மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

`இனி வலி நிவாரண மருந்துகள் வாங்க மருந்துச்சீட்டு தேவையில்லை!' - என்ன சொல்கின்றன புதிய விதிகள்?

பூஞ்சைத்தொற்று தடுப்பு மாத்திரைகள், வலி நிவாரணி மருந்துகள், இருமல் சிரப்புகள், மலமிளக்கிகள், கிருமி நாசினிகள் மற்றும் பல் ஈறு தொற்றுக்கான மருந்துகளை மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

Published:Updated:
Tablets (Representational Image) ( Pixabay )

மருத்துவரின் பரிந்துரை தேவையில்லாமல் வாங்கக்கூடிய இந்த மருந்துகளுக்கு `ஓவர் தி கவுன்ட்டர்' (Over The Counter) மருந்துகள் என்று பெயர். இருமல், சளி மற்றும் கருத்தடைக்கான மாத்திரைகள் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கிடைக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து குறிப்பிட்ட வேறு சில மருந்துகளையும் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Image by Michal Jarmoluk from Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பட்டியலில் பூஞ்சைத்தொற்று தடுப்பு மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், இருமல் மருந்துகள், மலமிளக்கிகள், கிருமி நாசினிகள் மற்றும் பல் ஈறு தொற்றுக்கான மருந்துகளை மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இதுபற்றிய வரைவு அறிவுப்பு சுகாதார அமைச்சகத்தால் விரைவில் வெளியிடப்படும், அதன் பிறகு மாத்திரைகளை இந்தியாவிலுள்ள மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளலாம்" என மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

சிகிச்சை செலவைக் குறைப்பதற்காகவும், தங்களுடைய பாதுகாப்பில் மக்கள் சமரசம் செய்யாமல் சுய கவனிப்பை மேம்படுத்துவதற்காகவும், இந்தப் புதிய திட்டம் அறிவிக்கபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Pixabay

பிற நாடுகளைப்போல் அல்லாமல், `ஓவர் தி கவுன்ட்டர்' மருந்துகளை விநியோகம் செய்யும் சிறந்த கட்டமைப்பை இந்தியா பெற்றிருக்கவில்லை, இருந்தபோதிலும் சில விதிகளின் அடிப்படையில் இந்த மருந்துகள், மக்களுக்கு எந்தவொரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற பாதுகாப்புத்தன்மையை உறுதிசெய்த பிறகே மருந்துகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism