Published:Updated:

கொரோனா வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல்... சாதக, பாதகங்கள்! #StayinsideStaySafe

கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய 'வொர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்ட்
கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய 'வொர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்ட் ( Pexels )

கொரோனா குறித்த விழிப்புணர்வுக்கான 'பிரேக் த செயின்' என்பதற்கு இணையாகவும் அதற்கு முரணாகவும் 'மேக் த செயின்' கான்செப்ட் பரவலாகிவருகிறது.

ஒரு சங்கிலித் தொடர்போல் ஒருவர் மூலமாக அடுத்த நபருக்கு என வேகமாகப் பரவி வருகிறது கொரோனா வைரஸ். இதிலிருந்து தப்பிக்க 'பிரேக் த செயின்' எனப்படும், நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ளும் சோஷியல் டிஸ்டன்ஸிங் வழிமுறையைக் கடைப்பிடிக்கச் சொல்லி அரசாங்கமும், மருத்துவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

மேக் த செயின்
மேக் த செயின்
freepik

கொரோனாவின் 'பிரேக் த செயின்' என்பதற்கு இணையாகவும், அதற்கு முரணாகவும் 'மேக் த செயின்' கான்செப்ட் பரவலாகிவருகிறது. அதாவது சோஷியல் டிஸ்டன்ஸைக் கடைப்பிடிக்கும் அதே நேரத்தில், நிறுவன ஊழியர்களுக்கு வேலை நிமித்தமாக அதிகபட்ச டிஜிட்டல் கனெக்ட்டை ஏற்படுத்துவது.

இதன் எதிரொலியாக WFH எனப்படும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையைப் பல நிறுவனங்கள் கையிலெடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. 'தன் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலைசெய்வது என்பதை ஒரு நிறுவனம் எப்படிப் பார்க்கிறது?' என பிரபல நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் இயக்குநரிடம் கேட்டோம்.

சவால்களை எதிர்கொள்ளணும்
சவால்களை எதிர்கொள்ளணும்
pexels

"நாம செய்யுற ஒவ்வொரு விஷயத்துலயும் ப்ளஸ், மைனஸ் இருக்கும். ப்ளஸை ஏத்துக்கிற மாதிரி, மைனஸை சேலஞ்சா ஏத்துக்கிட்டு, பாசிடிவ்வா எதிர்கொள்ளணும் என்பதுதான் என்னோட கருத்து" என்பவர் வொர்க் ஃப்ரம் ஹோமின் நன்மை மற்றும் சவால்களைப் பகிர்கிறார்...

நன்மைகள்

செலவுகள் குறையும்

செலவுகள் குறையும்
செலவுகள் குறையும்
pexels

ஒரு நிறுவனத்தின் மின்சாரப் பயன்பாடு, இன்டர்நெட் பயன்பாடு, தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் தேவை என தினசரி நடைமுறைக்குத் தேவைப்படும் அனைத்து விஷயங்களின் தேவையும் அதனால் ஏற்படும் செலவினங்களும் குறையும்.

பயண நேரம்

பயண நேரம் வீணாவதை தவிர்க்கலாம்
பயண நேரம் வீணாவதை தவிர்க்கலாம்
pexels

பணியாளரின் வருகைக்கான பயண நேரம் வீணாகாமல், ஒவ்வொரு பணியாளரும் குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை ஆரம்பித்துவிட முடியும். இதனால் உற்பத்தித்திறன் மேம்படும்.

கூடுதல் செயல்திறன்

செயல்திறன் கூடும்
செயல்திறன் கூடும்
pexels

தேநீர், உணவு இடைவேளைக்கு கேன்டீன் அல்லது ஹோட்டலுக்குப் போய்வரும் நேரம் குறையும். வீட்டில், தேநீர் அருந்திக்கொண்டே வேலைசெய்யமுடியும் என்பதால், அலுவலக நேரத்துக்கான வேலையின் செயல்திறன் கூடும்.

வேலையின் தரம் கூடும்

கவனச் சிதறலைத் தவிர்க்கலாம்
கவனச் சிதறலைத் தவிர்க்கலாம்
freepik

அலுவல் நேரத்தில் சக பணியாளர்கள் பேசுவது, அரட்டை அடிப்பது போன்ற கவனச்சிதறல்கள் இல்லாமல் வேலையைக் கூர்ந்து கவனித்து முழு ஈடுபாட்டுடன் செய்யமுடியும். இதனால் வேலையின் தரம் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான பகிர்தல்

பகிர்தல்
பகிர்தல்
pexeles

அலுவலக வளாகத்தில் நடக்கும் மீட்டிங்கைவிட, வீட்டிலிருந்து கான்ஃபரென்ஸ் கால் அல்லது வீடியோ கான்ஃபரென்ஸ் கால் மூலம் நடத்தப்பட்டும் மீட்டிங்கில் ஒவ்வொரு பணியாளரும் கருத்துகளும் மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கப்படும். ஆரோக்கியமான பரிந்துரைகளுக்கும் வாய்ப்புள்ளது.

பாதுகாப்பான சூழல்

பாதுகாப்பான சூழல்
பாதுகாப்பான சூழல்
freepik

தேவையில்லாத அலைச்சல் தவிர்க்கப்படுவது, ஆரோக்கியமான வீட்டுச்சாப்பாடு, உறவுகளுடன் இருக்கும் பாதுகாப்பான சூழல் போன்றவை, பணியாளரின் உடல் மற்றும் மனரீதியான ஆரோக்கியம் மேம்பட உதவும்.

சவால்கள்

கூடுதல் கவனம்

  வேலைக்கான முக்கியத்துவம்
வேலைக்கான முக்கியத்துவம்
pexels

வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' கான்செப்ட் இந்தியாவுக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகின்றன. அதனால் வெளிநாட்டினரைப்போல் அலுவலக நேரத்தில் வேலைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவதில் நம் நாட்டினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

டோன்ட் டிஸ்டர்ப்

இடையூறுகளுக்கு இடம் வேண்டாம்
இடையூறுகளுக்கு இடம் வேண்டாம்
freepik

வீட்டில், குழந்தைகள் மற்றும் உறவினர்களின் இடையூறுகளுக்கு மத்தியில் கவனத்துடன் வேலைசெய்வது என்பது சவாலான விஷயம். எனவே, அவர்கள் சலுகை எடுத்துக்கொள்ளாத வகையில் 'டோன்ட் டிஸ்டர்ப்' என்பதை அவர்களிடம் ஸ்ட்ரிக்ட் ஆகச் சொல்லிவிடவும்.

புரிந்துணர்வு அவசியம்

புரிந்துணர்வு அவசியம்
புரிந்துணர்வு அவசியம்
freepik

அலுவலக வளாகத்துக்குப் பதிலாக, சொந்த இருப்பிடத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைத்தாண்டி, செய்யும் வேலையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட ஊழியர் உணர்வதுடன், தன் குடும்பத்தினருக்கும் அதை உணர்த்துவது மிக அவசியம். குடும்பத்தினருக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் இருக்கும் சவால்களை எடுத்துக்கூறி ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்பு வேலையில் இறங்கவும்.

பிளான் 'B' அவசியம்

இன்டர்நெட் தடை
இன்டர்நெட் தடை
freepik

வீட்டிலிருந்து வேலைசெய்வதென்பது பெரும்பாலும் இன்டர்நெட் பயன்பாட்டின் அடிப்படையில்தான் இருக்கும் என்பதால், தனிநபர் பயன்படுத்தும் நெட்வொர்க் டிவைஸின் செயல்பாடு மற்றும் சமயங்களில் அவர் வசிப்பிடத்தில் ஏற்படும் மின்சாரத்தட்டுப்பாடு போன்றவை சவாலான விஷயங்கள்.

எனவே, யுபிஎஸ், நெட்வொர்க்குக்கு மொபைலை டேட்டா கேபிளில் சிஸ்டத்துடன் கனெக்ட் செய்வது என்று ப்ளான் பி-களை தயார்செய்துகொள்ளவும்.

கம்யூனிகேஷன் முக்கியம்

கம்யூனிகேஷன் அவசியம்
கம்யூனிகேஷன் அவசியம்
freepik

அலுவலகத்தில் பணிபுரியும்போது உயரதிகாரி, சக பணியாளர் என ஒருவரைத் தொடர்புகொள்ள போன், மெசேஜில் இயலவில்லை என்றால், நேரடியாக அவருடைய இருப்பிடத்துக்குச் சென்று சந்தித்துவிட முடியும்.

அதுவே வீட்டிலிருந்து பணிபுரியும்போது இது சாத்தியமில்லை என்பதால், கம்யூனிகேஷனுக்கான பிற வழிகளையும் யோசித்துவைத்துக்கொள்ளலாம்.

டீம் வொர்க்

 டீம் ஸ்பிரிட்
டீம் ஸ்பிரிட்
freepik

ஒரு சில புராஜெக்ட்களுக்குக் குழுவாக வேலைசெய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அதுபோன்ற நேரத்தில், நேரில் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவதில் கிடைக்கும் வசதிகளும் செயல்திறனும் வொர்க் ஃப்ரம் ஹோமில் கிடைக்காது. என்றாலும், அதை முடிந்தவரை ஈடுகட்ட டீம் ஸ்பிரிட்டுடன் அனைவரும் கைகோக்கலாம்.

குவாரன்டைன் நாள்கள்... என்னவெல்லாம் வாங்க வேண்டும்? செக்லிஸ்ட் #StayInsideStaySafe

மொத்தத்தில் கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல், நிறுவனத்தின் உற்பத்தித் திறனுக்கும், பணியாளரின் செயல்திறனுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பைத் தரும் அனுபவப் பாடமாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

'வொர்க் ஃப்ரம் ஹோம்' கான்செப்ட் நம்பிக்கையை ஏற்படுத்துமா ?
'வொர்க் ஃப்ரம் ஹோம்' கான்செப்ட் நம்பிக்கையை ஏற்படுத்துமா ?
pixels

இச்சூழ்நிலை, நிறுவனங்களுக்கும் பணியாளர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்ட் மேல் ஒரு நம்பிக்கையையும் தெளிவையும் கொடுக்கும்பட்சத்தில், வருங்காலத்தில் பல இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டினரைப்போல் வொர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்டைக் கையிலெடுக்க இது முதல் படியாக இருக்கும்.

`வணக்கம் is an Emotion!' ஜெர்மனி மணமகன், சிங்கப்பூர் மணமகள்... திருப்பதியில் மாஸ்க்குடன் திருமணம்!
அடுத்த கட்டுரைக்கு