Published:Updated:

'பெண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல!' - நிரூபிக்கும் தமிழக ஆண் செவிலியர்கள்

செவிலியர்கள்
செவிலியர்கள்

நோயாளிகளை அக்கறையாகக் கவனிப்பதிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் பெண்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள் ஆண் செவிலியர்கள்.

ஆண்களும் செவிலியர் படிப்பில் சேருவதற்கு நிர்வாக நடைமுறைகள் எல்லாம் நிறைவடைந்து 1989-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 10 மாணவிகளுக்கு ஒரு மாணவர் என்ற விகிதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் மீண்டும் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசு ஆண் செவிலியர்களுக்கான இடங்களைக் கைவிட்டுவிட்டது.

பெண்கள் மட்டும் தற்போது படித்துவருகின்றனர். தனியார் கல்லூரிகளில் மட்டும் ஆண்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டுவரை படித்த ஆண்கள் மட்டுமே தற்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவருகின்றனர்.

இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கும்போதே சக வயது ஆண்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகி, குடும்பச் சூழல், பொருளாதாரத் தேவை காரணமாக படித்தவுடன் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பெரும்பாலான ஆண்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்... அதுவும் வேண்டா வெறுப்புடன்.

பெண்களால் கையாள முடியாத கடினமான வேலைகள் அல்லது சிக்கலான பணிகளுக்கு ஆண் செவிலியர்கள்தான் செல்கிறார்கள்.

மத்திய சிறைச்சாலைகள், அவசர சிகிச்சைப் பிரிவு, முதல்வர், பிரதமர் போன்ற முக்கியஸ்தர்களுக்காக உடன் செல்லும் மருத்துவக் குழு, அவசரங்கள் மற்றும் விபத்துகளில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை, மனநல மருத்துவமனை போன்றவற்றில் ஆண் செவிலியர்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். ஆண் செவிலியர்களுக்கான பிரதான பிரச்னையே அவர்களுக்கான அங்கீகாரம்தான்.

"யாராவது என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்கும்போது ஸ்டாஃப் நர்ஸ் என்று சொன்னால், 'என்னது...கம்பவுண்டரா?' என்றுதான் கேட்பார்கள். செவிலியர் என்று சொன்னால், 'பெண்கள்தானே அந்த வேலையைச் செய்வார்கள். நீங்க எப்படி...?' என்று அடுத்த கேள்வி வரும். அவர்களுக்கெல்லாம் விளக்கம் கொடுப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

ஆண் செவிலியர்கள்
ஆண் செவிலியர்கள்

திருமணத்துக்குப் பெண் தேடும்போது நான் செவிலியர் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். இதனால் பல வரன்கள் தட்டிப்போயிருக்கின்றன. என் மனைவி எனக்கு உறவினர்தான். ஆனாலும்கூட அவர்கள் குடும்பத்தினருக்கு நம்பிக்கையில்லாமல் பலமுறை விசாரித்துதான் பெண்ணைக் கொடுத்தார்கள்" எனும் கீதா கிருஷ்ணன், மனநல மருத்துவமனையில் 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.

கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி வேண்டா வெறுப்புடன் படிக்கத் தொடங்கி, மருத்துவச் சேவைக்குள் நுழைந்ததும் அதன் முக்கியத்துவம் புரிபடத்தொடங்கியிருக்கிறது ஆண் செவிலியர்களுக்கு. இப்போதும் கொரோனா வார்டில் அதிக அளவில் ஆண் செவிலியர்கள் தைரியத்துடனும் துணிச்சலுடனும் பணியாற்றிவருகின்றனர். சேவைக்கு ஆண், பெண் என்ற வேற்றுமை கிடையாது.

நோயாளிகளை அக்கறையாகக் கவனிப்பதிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் பெண்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள் ஆண் செவிலியர்கள்.

அந்த வகையில், மனநல மருத்துவமனையில் நடந்த சில நினைவுகளையும் கீதா கிருஷ்ணன் பகிர்ந்துகொண்டார். அதேபோல், மதுரை தோப்பூர் ஆஸ்டின்பட்டி அரசு காசநோய் மருத்துவமனையில் பணியாற்றும் சோ.சிவராமன், திருச்சி மத்திய சிறைச்சாலையில் பணியாற்றி வரும் ஆண் செவிலியர் சிலம்பரசன் ஆகியோரும் தங்களின் அனுபவங்களையும் ஆனந்த விகடன் உடன் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். அவற்றுடன், ஆண்களும் செவிலியர் படிப்பில் சேருவதற்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அனுமதியளித்ததன் அரிய பின்னணியையும் Vikatan App-ல் முழுமையாக கட்டணமின்றி வாசிக்க > சிஸ்டர்களை மட்டுமல்ல, பிரதர்களையும் மதிப்போம்! https://bit.ly/3d86wil

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு